search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகிரி"

    • அரியூர் கிராம ஊராட்சியில் புதிய ரேஷன் கடை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி தலைவர் கலா ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராம ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அரியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலா ஜெயக்குமார், துணைத்தலைவர் முருகையாபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் லில்லி புஷ்பம், விமலா மகேந்திரன், முனியராஜ், உதவி பொறியாளர் அருள் நாராயணன், கிளை செயலாளர் முருகையா, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இணைய தள குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும் சட்டக்கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகனச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இணைய தள குற்றங்கள் குறித்து, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடம் எடுத்துக் கூறினர்.

    முன்னதாக வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். முடிவில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவி பேராசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    • மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி கேலிவதை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரியில் கடந்த 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கேலி வதைத் தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. நிறைவாக கேலி வதைத் தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சட்டக் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார். தலைமை விருந்தினராக தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் வினுதா கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி கேலிவதை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோர் செய்தனர். இதில் மாணவ- மாணவிகள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டர். முன்னதாக மாணவி பவித்ரா சண்முகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி ரக்ஷனா நன்றி கூறினார்.

    • தேவிபட்டணம் ஊராட்சி தலைவர் ராமராஜ், கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தார்.
    • ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் யூனியன் தேவிபட்டணம் ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ராமராஜ் இருந்து வருகிறார். இவர் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நான் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுவிட்டேன். அந்த சமயத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த நபர், காழ்புணர்ச்சியோடு தொடர்ச்சியாக என் மீது சாதிய தீண்டாமை செய்து வருகிறார். நான் படித்து வக்கீலாக உள்ளேன். எனக்கு இந்த நிகழ்வுகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

    மேலும் ஊராட்சி நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நான் மறுக்கவே, எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார். ஏற்கனவே என்னை அவர் சாதியை சொல்லி திட்டியதாக நான் சிவகிரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை சில காரணங்களால் வாபஸ் பெற்றேன். தற்போது மீண்டும் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தை நாடுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது தேவி பட்டணம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாடசாமி, வார்டு உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாமை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தேவிபட்டணம் ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசு யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடக்கண்ணு, சிவகிரி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், தேவிபட்டணம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர் முருகன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் விக்கி, தலைமை மருத்துவர்கள் திருமலை, மயில்வாகணன், அப்துல் காதர், மாரிமுத்து, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சமூக நல்லிணக்க கூட்டம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்ட ணம் ஊராட்சியில் சமூக நல்லிணக்க கூட்டம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலை வர் மாடக்கண்ணு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சமூக நல்லிணக்கம் கருதியும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

    மேலும் பஸ் வரும் வழியிலும், பழைய பஸ் நிறுத்தம் (மந்தை மைதானம்) அருகே உள்ள ஆக்கிரமிப்பு களையும் அகற்றுவதற்கு தனியாக அனைத்து சமூகம் மற்றும் அனைத்து கட்சி கொண்ட குழு அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.
    • சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது என மாணவர்கள் கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் பாளையில் உள்ள மத்திய சிறைச்சாலையினை எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியை எஸ். தங்கப்பழம் சட்டக் குழுமங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும் தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல்வர் ரஜேலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் வெங்கடேஷ் ராஜேஷ்குமார் மற்றும் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர். மாணவர்கள் சிறைச்சாலையில் கைதிகளின் செயல்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் தொழில் பற்றி கேட்டறிந்தனர். மேலும் இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதனை சிறந்த அனுபவமாக கருதுகிறோம் என்றனர்.

    இந்த சிறைச்சாலை பார்வையிடலில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 53 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ராயகிரியில் நடைபெற்றது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ராயகிரியில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் மற்றும் ராயகிரி பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர். இதன் சிறப்பம்சமாக யோகா, அக்குபஞ்சர், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள், வயது முதிர்வு சார்ந்த உபாதைகள், சீரான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு, இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டது. டாக்டர் ஏ.வேடியப்பன், டாக்டர் நிலா மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் ஆகியோர் பங்குபெற்ற பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி னார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் அலு வலர்கள் செய்திருந்தனர்.

    • ஒண்டிவீரன் நினைவிடத்தில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பச்சேரியில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ்ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ்வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி, அர்ஜூனன், புலிக்குட்டி, மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர், சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராம்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகராஜ், சங்கரன்கோவில் நகர தலைவர் கணேசன், குருவிகுளம் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் மரகதம், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கோதண்டராமன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு கண்ணன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் விவேக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியில் சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமங்களான தங்கப்பழம் மருத்துவ கல்லூரி, தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி, தங்கப்பழம் சட்ட கல்லூரி, தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தங்கப்பழம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் வாசுதேவநல்லூரில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

    இதில் தங்கப்பழம் கல்வி குழுமங்களை சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷமிட்டும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியானது வாசுதேவநல்லூர் நகர மைய பகுதியில் நிறைவு பெற்றது. பேரணியில் எஸ். தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • முருகன் உடல்நலக்குறைவு தொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • பெற்றோர், உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டதால், முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    சிவகிரி:

    சிவகிரி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கனியப்பன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது 2-வது மகன் முருகன்(வயது 30). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல்நலக்குறைவு தொடர்பாக நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று அவரது பெற்றோர், உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டதால், முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முருகன் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஜய், தனது அண்ணன் மருதுபாண்டியை சிவகிரி சர்ச் பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விஜய்யை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராமநாதபுரம் மேட்டுப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கமாரி. இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு வீரபாண்டி (வயது 28), மருதுபாண்டி(23), விஜய்(22) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    நேற்று இரவு விஜய், தனது அண்ணன் மருதுபாண்டியை சிவகிரி சர்ச் பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் சிவகிரி வெற்றிலை மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜய் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×