என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூர் அருகே ஒண்டிவீரன் நினைவிடத்தில் பா.ஜ.க.வினர் மரியாதை
- ஒண்டிவீரன் நினைவிடத்தில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பச்சேரியில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ்ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ்வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாவட்ட செயலாளர்கள் ராஜலட்சுமி, அர்ஜூனன், புலிக்குட்டி, மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர், சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் வக்கீல் ராம்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகராஜ், சங்கரன்கோவில் நகர தலைவர் கணேசன், குருவிகுளம் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் மரகதம், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கோதண்டராமன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு கண்ணன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் விவேக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






