search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டக்கல்லூரி"

    • சட்டக்கல்லூரியில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்று கல்லூரி முதல்வரிடம் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மனு கொடுத்தனர்.
    • இந்து முன்ணணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பரமசிவம், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மதுரை

    மதுரை அரசு சட்டக் கல்லுரி வளாகத்தில் தி.மு.க. சட்டப்பிரிவு சார்பில் இன்று (21-ந்தேதி) கலைஞர் நூற்றாண்டுவிழா பேச்சுப்போட்டி, கருத்த ரங்கம் நடைபெறுகிறது.

    மதுரை மாநகர மாவட்ட பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யப்பராஜா தலைமை யில் சட்டக்கல்லூரி முதல்வர் குமரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை அரசு சட்டக்கல்லூரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியிருப்பது மாணவர்க ளிடையே பிரிவினையை ஏற்படுத்தும். இதுவரை சட்ட கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியது கிடையாது. தற்போது தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட அனுமதியால் மாணவர்க ளிடையே அரசியல் மோதல் ஏற்பட வாயப்பு உள்ளது.

    எனவே தி.மு.க. சார்பில் நடத்தபட உள்ள பேச்சு போட்டி கருத்தரங்க விழாவுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாஜக வழக்கறிஞர் பிரிவு மதுரை மாநகர் தலைவர் அய்யப்பராஜா வுடன் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை த்தலைவர் ராமராஜ், இந்து முன்ணணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் பரமசிவம், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர்.
    • சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது என மாணவர்கள் கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் பாளையில் உள்ள மத்திய சிறைச்சாலையினை எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியை எஸ். தங்கப்பழம் சட்டக் குழுமங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும் தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல்வர் ரஜேலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் வெங்கடேஷ் ராஜேஷ்குமார் மற்றும் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    சிறைச்சாலை அதிகாரிகள் சிறையின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தனர். மாணவர்கள் சிறைச்சாலையில் கைதிகளின் செயல்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் தொழில் பற்றி கேட்டறிந்தனர். மேலும் இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த சிறைச்சாலை பார்வையானது வழக்கறிஞர் தொழில் புரிந்திட மேலும் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதனை சிறந்த அனுபவமாக கருதுகிறோம் என்றனர்.

    இந்த சிறைச்சாலை பார்வையிடலில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 53 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • குடிமக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகள் விளக்கி கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் இலத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் ஆலோசனையின் பேரிலும் மற்றும் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். பெண் கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை பற்றி தெளிவாக பொதுமக்களிடம் எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவ -மாணவிகள் விளக்கி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமி செய்திருந்தார். 

    • காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது.
    • போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது என விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரிகாரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதை அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார்.

    இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அன்று நான் டெல்லியிலிருந்து சிவகங்கையை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்று சிவகங்கையில் இருந்து கொண்டு டெல்லியையும் பார்க்கிறார். சிவகங்கையையும் பார்க்கிறார். சிவகங்கை மண்ணுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற பணியாற்றி வருவது, அவரை விட நாங்கள் இன்னும் உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. காரைக்குடிக்கு சட்டக்கல்லூரி வந்திருப்பதற்கு முழு காரணம் ப.சிதம்பரம்தான்.

    என்னுடைய மாவட்டத்திற்கு கொண்டு வர முடியாவிட்டாலும் பக்கத்து மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும் என்றால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். மதிப்பெண்கள்தான் மதிப்பை உயர்த்தும். இல்லையென்றால் பெற்றோரின் பர்சுதான் காலியாகும். அரசு கல்லூரியில் 10 ஆயிரம் ரூபாயில் படிப்பை முடித்து சென்று விடலாம். ஸ்காலர்ஷிப் இருந்தால் அந்த பணமும் திரும்ப கிடைத்து விடும். தனியார் கல்லூரியில் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிவரும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பு சட்ட படிப்பு என்றார்.

    அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சட்டக்கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது.

    பொறியியல், மருத்துவ படிப்புக்கு இணையாக சட்ட படிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, என்றார்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15-வது அரசு சட்டக்கல்லூரியான இதில் 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு முதல் கவுன்சிலிங் முடிந்து முதல் கட்டமாக 22 மாணவர்கள் குறிப்பாக சிவகங்கை, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இன்று சேர்ந்துள்ளனர்.

    போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது. சட்ட கல்வி பயின்ற பெண்கள் அதிக அளவில் நீதிபதிகளாக உள்ளனர். இதுபோன்று இன்னும் புதிதாக பல்வேறு கல்லூரிகள் இந்த ஆட்சியில் தொடங்கப்பட வேண்டும்.

    விரைவில் கட்டிடப் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க விரும்புகிறேன் என்றார்.

    கார்த்தி சிதம்பரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோரும் பேசினர்.

    அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மற்றும்

    உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் வணிக கழகத்தினர், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தி.மு.க.- காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரின் தனி அலுவலர் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினார்.

    • சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாளால் வெட்டினர்.
    • இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     மதுரை

    கருப்பாயூரணி நொண்டி கோவில் தெரு மூர்த்தி மகன் பரத்வஜன் (வயது 23). இவர் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் காளவாசலை சேர்ந்த ஷீபா என்பவருக்கும் திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பரத்வஜன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பரத்வஜன் ஆண்டார் கொட்டாரம் மலைப்பகுதிக்கு வந்தார். அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டினர்.

    இதில் பரத்வஜனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக கருப்பா யூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×