search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகிரி"

    • இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவகிரி பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் இசக்கி துரை, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சமுத்திரக்கனி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் கிட்டப்பா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் வேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணன், நகர துணைச் செயலாளர் குரு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • மாரிச்செல்வம் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் மாரிச்செல்வம் கிடந்துள்ளார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா உள்ளார் - தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் மீது சிவகிரி, கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தற்கொலை

    இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து உள்ளார். நேற்று காலைஅவரது பெற்றோர் வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை 5 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு உள்புறமாக பூட்டி இருந்துள்ளது. இதனால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது மாரிச்செல்வம் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

    இது குறித்து சிவகிரி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை

    மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து மன உளைச்சல் காரணமாக மாரிச்செல்வம் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பிளஸ்-2 வகுப்பு பயிலும் 172 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்களை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் பேச்சியம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் 87 மாணவர்களுக்கும், 85 மாணவிகளுக்கும் மொத்தம் 172 பேருக்கு இலவச சைக்கிளையும், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற 19 மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ், விருதுகளை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    இதில் கவுன்சிலர்கள் சித்ராதேவி, அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகமாயி, கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள் வீரகுமார், காசிராஜன், மோகன், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

    • நெல்லை சட்டக்கல்லூரி முதல்வர் லதா, மூத்த வக்கீல் கனக சபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
    • மாணவர்களுக்கு சட்ட அகராதி மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் காளிச்செல்வி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுந்தரகுமார், நெல்லை சட்டக்கல்லூரி முதல்வர் லதா, மூத்த வக்கீல் கனக சபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சட்ட அகராதி மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி ஆர்த்தி நன்றி கூறினார். மாணவர் பேட்ரிக் டாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    • சிகிச்சையின் போது சண்முகத்துரை மூளைச்சாவு அடைந்து விட்டார்.
    • சண்முகத்துரையின் உடலுக்கு சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் தென்காசி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சண்முகத்துரை (வயது 52). இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சையின் போது மூளைச்சாவு அடைந்து விட்டார். அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்துள்ளனர். மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரையின் உடலுக்கு நேற்று மாலை, அவரது சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    அரசு மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளிகளில் செயல்பட்டு வருவதையொட்டி அனைத்து குழந்தைகளுக்கும் தட்டு மற்றும் டம்ளர் வழங்கும் விழா வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி சத்துணவு அமைப்பாளர்களிடம் தட்டு மற்றும் டம்ளர் வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய கணபதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலகர் (சத்துணவு) மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உள்ளார் விக்கி, தி.மு.க. கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
    • மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் பஸ் நிலைய பகுதியில் இருந்த மண் திட்டுகள், தேவையற்ற சிமெண்டு சிலாப்புகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆய்வின் போது, மராமத்து பணிகளை துரிதமாக செயல்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • சிவகிரியில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    சிவகிரி:

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நெல்கட்டும்செவல் பஞ்சாயத்து காட்டுப்புரம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கணேசன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவருமான வக்கீல் ராம்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொது செயலாளர் தினேஷ், ஒன்றிய துணைத்தலைவர் கோமதி பாண்டியன், மாவட்ட மகளிரணி துணை தலைவர் சுதா, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கருப்பசாமி, கிளை தலைவர்கள் பால்ராஜ், கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, சண்முகவேல், சத்யா, அய்யன் ராஜ், அய்யப்பன், மணிராஜ், ஸ்டீபன்சன், ஏசுராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சிவகிரி

    இதேபோல், சிவகிரியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். வடக்கு ஒன்றிய செயலாளர் ஒரு சொல் வாசகன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கோதண்டராமன், மாவட்ட செயலாளர் அர்ஜூனன், ஓ.பி.சி. அணி மாவட்டத் துணைத்தலைவர் தங்கம், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சேட்டு குமார், கருப்பையா, புலியூரான், முத்துச்சாமி, ஓ.பி.சி. அணி ஒன்றிய துணைத்தலைவர் ரஜினி கருப்பையா, கிளை தலைவர்கள் நடராஜன், மாரியப்பன், முத்துசாமி, பாலமுருகன், ராஜேஷ், மாடசாமி, ராஜேந்திரன், மாவட்ட ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசு வடக்கு ஒன்றிய செயலாளர் ஒரு சொல் வாசகன் செய்திருந்தார்.

    • பகுதி சபா கூட்டத்திற்கு அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர்.
    • ஒவ்வொரு வார்டுகளிலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி பேரூராட்சி பகுதிகளில் உள்ள 18 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் பற்றிய விபரங்கள், மேற்படி திட்டங்களால் பயனடைந்த பகுதிகள் மற்றும் மக்கள் பற்றிய விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    கூடுதலாக தண்ணீர் வசதி

    பகுதி சபா கூட்டத்திற்கு அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர். 5-வது வார்டு ஜீவா நகரில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு விக்னேஷ் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கட கோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், தலைமை எழுத்தர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர்கள் மற்றும் வரித்தண்டலர்கள் ஆகியோர் வார்டு குழு செயலாளர்களாக கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு வார்டுகளிலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது கூடுதலாக வார்டுகளில் தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். கழிப்பிட வசதி இல்லாத இடங்களில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். தெற்கு ரத வீதியில் கீரை கடை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பாலத்தினை உயர்த்தி புதுப்பித்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அதிவிரைவில் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    வாசுதேவநல்லூர்

    வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பகுதி மக்கள் கலந்து கொண்டு திட்டப் பணிகளை பாராட்டியும், வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கூட்டத்தில் தெரிவித்தனர். புதுமந்தை முனியாண்டி கோவில் வளாகத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு பேரூராட்சிமன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பரமசிவன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மகாதேவன், வனக்குழு தலைவர் போஸ் ராஜா, பேரூராட்சி அலுவ லகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி பஸ் நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு யூனியன் சேர்மனும், வாசு. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மருதுபாண்டியன், விக்னேஷ் ராஜா, துரைராஜ், ரத்தினராஜ், முருகன், முத்துலட்சுமி, வீரமணி, புல்லட் கணேசன், கார்த்திக், பிச்சை மணி, ராம்குமார், பரமசிவம், ஆனந்தா ஆறுமுகம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது.
    • காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள், தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது.

    சிவகிரி:

    சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள கோம்பை ஆறு பீட்டிற்கும், சிவகிரி பீட்டிற்கும் இடையே வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அசோக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோம்பை ஆறு பீட் பகுதியிலும், சிவகிரி பீட் பகுதியிலும் முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், காற்றின் வேகத்தில் இரண்டிற்கும் மேலே உள்ள உள்ளார் பீட்டில் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இலை தழைகளை கொண்டு அணைத்து வருவதாகவும், இன்று வியாழக்கிழமை எரியும் தீயை முழுமையாக அணைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்நிலையில் இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் சிவகிரி அடிவாரப் பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்டுள்ள பயிர்களில் சாம்பல்கள் படிந்து காணப்படுகிறது.

    • 16 -வது வார்டு அம்பேத்கர் தெற்கு தெருவில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருப்பது தொடர்பாக புகார் வந்தது.
    • முறையற்ற குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் முறையற்ற மற்றும் பேரூராட்சி அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகளை துண்டித்து முறைப்படுத்த சிவகிரி பேரூராட்சி மன்றத்தின் மூலமாக கடந்த மாதம் நடந்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 16 -வது வார்டு அம்பேத்கர் தெற்கு தெருவில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் இருப்பது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்தது.

    அதனைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு உத்தரவின்படி, சிவகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், பேரூராட்சி பணி யாளர்கள் ஆகியோர் காவல்துறை யினருடன் இணைந்து அந்த பகுதியில் இருந்த முறையற்ற குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு துண்டித்தனர்.

    மேலும் வீடுகளில் முறையான அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு சிவகிரி பேரூராட்சியில் முறையான அனுமதி பெற்று முறைப்படுத்த வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பித்து அனுமதி வாங்கி பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகிரி பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்யும்போது முறையான அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் இருப்பது தெரிய வந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு பொது மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

    ×