search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலை"

    • பிரசாரத்தில் அவரது கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.
    • வேலூர் மாவட்டத்தில் உள்ள காடு, மலைகளை அழித்து வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரசாரத்தில் அவரது கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை.

    வேலூரில் இப்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனை சமாளிக்க மன்சூர் அலிகான் பிரசார வாகனத்தில் தென்னை ஓலை பந்தல் அமைத்துள்ளார் .

    அந்த நிழலில் நின்ற படியே மன்சூர் அலிகான் பேசி வருகிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காடு, மலைகளை அழித்து வருகின்றனர். நான் வெற்றி பெற்று வந்து காடு, மலைகளை, காப்பாற்றி, நீர் நிலைகள் அமைப்பேன், மற்றவர்களை போல் 5 வருடம் காணாமல் போகமாட்டேன், இங்கே தான் இருப்பேன் அதனை தொடர்ந்து, காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என ஆவேசமாக பேசினார். 

    • குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.
    • கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பற்றி வருகிறது. குறிப்பாக குரங்கணி, மரக்காமலை, ஏணிப்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் பற்றி எரிந்த காட்டுத்தீயால் பல 100 ஏக்கர் சுற்றளவில் அரிய வகை மரம், செடி, கொடிகள், வனவிலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகியவை அழியும் நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரங்கணி கொம்பு தூக்கி மலைப்பகுதியில் வனத்துறை அருகே உள்ள தனியார் தோட்டப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்து பிச்சாங்கரை புலம் பகுதி வரை பரவியது.

    காட்டுத்தீயை அணைக்க சென்ற வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தபொழுது அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் போடி புதூரில் வசித்து வரும் கண்ணன் (வயது 38) என்பவர் அப்பகுதியில் குடிபோதையில் சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் போட்டுச் சென்றது தெரிய வந்தது.

    ஏற்கனவே கடுமையான வெயில் காரணமாக காய்ந்து போன மரம், செடி, கொடிகள் எளிதில் தீ பற்றி வனப்பகுதியில் காட்டு தீ பற்றி உள்ளது.

    கண்ணனிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் தீ வைத்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்து உத்தமபாளையம் சிறையில் அடைத்தனர்.

    மேலும் தற்போது தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் டாப் ஸ்டேஷன், உருவாக்குடி, சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பெட்டிகள், வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளது.

    இந்த சூழலில் ஆங்காங்கே சமூக விரோதிகளின் செயல்பாடுகள் காரணமாக காட்டுத்தீ பற்றி எரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியாவில் காஞ்சீபுரம், திருவண்ணாமலையில் மட்டுமே சித்ரகுப்தருக்கு சன்னதி இருக்கிறது.
    • இதன் காரணமாகவே திருவண்ணாமலை மலை மீது யாரும் ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

    சித்ரகுப்தர் சன்னதி

    தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாதபடி திருவண்ணாமலை தலத்தில் மட்டுமே சித்ரகுப்தருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

    இந்தியாவில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய 2 இடங்களில் மட்டுமே சித்ரகுப்தருக்கு சன்னதி இருக்கிறது.

    சித்திரை மாதம் இந்த சன்னதியில் சித்ரகுப்தருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடத்துகிறார்கள்.

    மலை ஏறியதற்காக பரிகார பூஜை

    திருவண்ணாமலையில் சிவபெருமான் மலை வடிவில் இருந்து அருள்பாலித்து வருவதாக ஒவ்வொரு பக்தரும் நம்புகிறார்கள்.

    எனவேதான் உலகில் உள்ள சுயம்பு லிங்கங்களில், இந்த மலை மிகப்பெரிய சுயம்பு லிங்கமாகக் கருதப்படுகிறது.

    லிங்கம் மீது யாராவது கால் பதித்து ஏறுவார்களா?

    இதைக் கருத்தில் கொண்டே திருவண்ணாமலை மலை மீது யாரும் ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

    கார்த்திகை மாதம் தீப திருநாள் தினத்தன்று மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் அருகில் சென்று வழிபடுவதற்காக மலை ஏறுவதுண்டு.

    இந்த தீபம் மொத்தம் 11 நாட்கள் எரியும்.

    12வது நாள் தீபக் கொப்பரை கீழே கொண்டு வரப்படும்.

    அன்றைய தினம் அண்ணாமலையார் கோவிலில் இருந்து ஒரு கலசத்தில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள்.

    பக்தர்கள் பாதம்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக தீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் இருந்து தீர்த்தம் தெளித்து வருவார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த பரிகாரப் பூஜை நடத்தப்படுகிறது.

    • இங்கே சஞ்சீவி மற்றும் இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.
    • ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.

    இரும்பை தங்கமாக்கும் மூலிகை

    அண்ணாமலைச் சாரலில் எண்ணற்ற மூலிகைச் செடிகள் செழித்து வளர்கின்றன.

    மனிதனின் அத்தனை பிணிகளுக்கும் அவை அருமருந்தாய் அமையும்.

    இங்கே சஞ்சீவி மூலிகை இருக்கலாம். இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.

    ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.

    கிரிவலம் வரும்போது நாம் மூலிகைக் காற்றை சுவாசிக்க முடியும்.

    அது நம் உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    மலைக்குள் இயங்கும் மர்ம உலகம்

    அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம்.

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண்,

    மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார்.

    அப்போது இதனை யாரும் நம்பவில்லை.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன.

    அவர் தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பரங்குன்றம் கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது.
    • அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதல்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏரா ளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக வைகாசி விசா கத் திருவிழா, கந்தசஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். இதில் மலை மேல் வேல் எடுக்கும் திரு விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதாவது கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் கொண் டாடப்படும் திருவிழாவா கும். ஒவ்வொரு புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கி ழமை மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடை பெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற் றது.

    இதற்காக திருப்பரங்குன் றம் கோவில் மூலஸ்தானத் தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு, அலங்கரித்து பல்லக் கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநா தர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற் றது. தொடர்ந்து அங்குள்ள குமரருக்கு சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி யில் சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதனையடுத்து மலைக்கு கீழ் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனி யாண்டவருக்கு சிறப்பு அபி ஷே கங்கள், அலங்காரங் கள் நடைபெற்று, சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடை பெறும். மாலை வரை வேல் பழனி ஆண்டவர் திருக்க ரத்தில் இருக்கும்.

    இரவு 7 மணியளவில் பூப்பல்லக்கு அலங்காரத்தில் அந்த வேல், பழனியாண்டவர் கோவிலில் இருந்து புறப் பாடாகி, திருப்பரங்குன்றம் கோவிலை வந்தடையும். விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்த னர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
    • குண்டாறு அணை பகுதியில் 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    தென்காசி

    தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது. தென்காசியில் 4 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 2.2 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொண்ட குண்டாறு அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 19.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் 34.62 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 1 அடி நீரே தேவை. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 93 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 94 அடியானது.

    மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி-நெல்லை

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டார பகுதியான கடம்பூரில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே கடம்பூர், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் வரை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அங்கு 30 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடம்பூரில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாங்குநேரி மற்றும் நெல்லையில் தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணை பகுதிகளில் மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    • காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது.
    • காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள், தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது.

    சிவகிரி:

    சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள கோம்பை ஆறு பீட்டிற்கும், சிவகிரி பீட்டிற்கும் இடையே வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக அப்பகுதி முழுவதும் பரவியது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகனுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

    மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் சிவகிரி ரேஞ்சர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அசோக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோம்பை ஆறு பீட் பகுதியிலும், சிவகிரி பீட் பகுதியிலும் முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும், காற்றின் வேகத்தில் இரண்டிற்கும் மேலே உள்ள உள்ளார் பீட்டில் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இலை தழைகளை கொண்டு அணைத்து வருவதாகவும், இன்று வியாழக்கிழமை எரியும் தீயை முழுமையாக அணைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    காற்றின் வேகம் காரணமாக தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் போராடினர். இந்நிலையில் இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத் தீயில் அரியவகை மூலிகைகள் மற்றும் தாவரங்கள் எரிந்து இருக்கலாம் என தெரிகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் சிவகிரி அடிவாரப் பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்டுள்ள பயிர்களில் சாம்பல்கள் படிந்து காணப்படுகிறது.

    • குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
    • தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    திருமுருகன் சீரலை வாயில் சூரபத்மனையும், அசுரர்களையும் அழித்துத் தேவர்களின் துயரைத் துடைத்தார்.

    துயர் நீங்கப் பெற்ற தேவர் தலைவன் இந்திரன் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.

    திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு பெண்கள், திருமுருகனது அழகில் மயங்கி அவனையே அடைய வேண்டுமெனத் தவமிருந்தார்கள்.

    அவர்களுள் அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தேவசேனை என்ற பெயரில் வளர்ந்தாள்.

    தேவர்கள் சேனைக்கு அதிபதியான செந்தமிழ் முருகன் தேவசேனையைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துத் திருமணம் முடித்துக் கொண்டார்.

    தேவசேனைக்குத் திருமணம் நடந்த இத்திருத்தலத்தில் மற்றொரு அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றான் திருமுருகன்.

    பெரும்புலவர் நக்கீரர் தலயாத்திரை செய்து வருகின்ற போது திருப்பரங்குன்றத்தில் ஒரு குளக்கரையில் உட்கார்ந்து நித்ய பூஜா அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார்.

    குளக் கரையிலிருந்த அரசமரத்து இலை ஒன்று உதிர்ந்து பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது.

    நீரில் விழுந்த பகுதி மீனாகவும், தரையில் விபந்த பகுதி பறவையாகவும் மாறின.

    ஒன்றையன்று இழுத்துக் கொள்ள ஆரம்பித்தன.

    இந்த சலசலப்பால் நக்கீரனது அனுஷ்டானம் கலைந்து போயிற்று.

    உடனே கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை மலைக்குகை ஒன்றில் சிறை வைத்தது.

    குகைக்குள்ளே ஏற்கனவே இன்னும் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

    ஆயிரம் பேர் சிறையில் சேரக் காத்திருந்த கற்கிமுகி ஒருசேர அத்தனை பேரையும் விழுங்கிப் பசியாறக் காத்திருந்ததாம்.

    நக்கீரர் திருமுருகனை மனத்திலிருந்து திருமுருகாற்றுப் படையைப் பாடியவுடன் அக்குகையைப் பிளந்து அத்துணை பேருக்கும் விடுதலை நல்கி, பூதத்தையும் திருமுருகன் அழித்ததாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்துள்ளார் நக்கீரர்.

    திருப்பரங்குன்றத்துப் பதியிலே நடந்த தேவசேனா தேவியின் திருமணத்திற்கு பிரம்மா திருமணச் சடங்குகளை முன்னின்று நடத்தவும், சூரியனும், சந்திரனும், ரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும்,

    உமையம்மையும், தென்னவர்கோன் பரமேசுவரனும் இணையாக நின்று வாழ்த்திக் களிக்கவும், ஆயிரங் கண்ணுடைய இந்திரன் தகப்பனார் கடமையாக தாரை நீர் வார்த்துக் கொடுக்கவும், தேவியைக் கரம் பிடித்தான் பரகுன்றத்துக் குமரன்.

    திருமுருகன் திருப்பரங்குன்றத்தில் தேவசேனா தேவியைத் திருமணம் செய்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.

    எனவேதான் இவ்விழாவைப் பெரிய திருவிழாவாக, பிரமோத்சவமாக இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    • திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.
    • பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

    பொய்கையில் வழிந்தோடும் நீர் நிலைகள் அருவியும் சுனையும் மிகுந்து இயற்கைப் பொலிவோடு அன்றைய திருப்பரங்குன்றம் விளங்கியது.

    திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள குமரப் பெருமான் போகத்துக்குரிய மாலையாகிய கடம்பினையும், வீரத்திற்குரிய மாலையாகிய காந்தளையும் அணிந்து விளங்குவதாகத் திருமுருகாற்றுப் படையில் ஒரு செய்தி வருகிறது.

    சீரலைவாய் போரில் திருமுருகன் சூரபத்மனை அழித்து ஆட்கொண்டு "பணிப்பகை மயிலும் சேவற் பதாகையும்" போலே கந்தவேளின் வாகனமான மயிலாகவும் கொடியில் நிமிர்ந்து நிற்கும் சேவலாகவும் கொண்டு, தனது தொண்டனாக ஏற்றுக் கொண்டான்.

    பிறகு திருச்செந்தூரிலிருந்து திருப்பரங்குன்றம் வந்தமர்ந்தான் குமரன்.

    குன்றின் வட பாகத்தில் குமரப் பெருமானது திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருக்கோவிலின் நுழைவு வாயில் உள்ள ஆஸ்தான மண்டபம் சுந்தர பாண்டியன் கட்டியது.

    அறுபத்தாறு கற் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம்.

    மண்டபத்தின் தூண்களில் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த யாளிகள் & குதிரை வீரர்கள் & சிவனாரின் திரிபுரத கற்பக விநாயகருக்கருகில் உள்ள குடைவரைக் கோவிலில் சத்யகிரீசுவரர் என்னும் சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியாகத் திருக்காட்சி தருகின்றனார்.

    இக்கோவிலின் உட்புறச் சுவர்களில் சோமாஸ்கந்தரின் உருவமும், வெளிப்புறச் சுவரில் சிவபெருமான் பார்வதி உருவங்களும் காட்சியளிக்கின்றன.

    அர்த்த மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் உள்ள குகைக் கோவிலில் அன்னபூரண தேவி தன் பரிவாரங்களுடன் காட்சி தருகின்றாள்.

    திருமணக் கோலம் கொண்ட திருமுருகன் உயர்ந்த இடத்தில் எல்லா தெய்வங்களும் புடைசூழத் திருக்காட்சியளிப்பது ஓர் அற்புதக் காட்சி.

    அந்த அருட்காட்சியைக் காண ஆயிரம் கண்கள் போதாது.

    திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தின் கீழ்த்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.

    இந்தப் பொய்கை முருகப் பெருமான் திருக்கரத்து வேலினால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.

    திருமுருகன் திருப்பரங்குன்றம் வந்தடைந்த போது தேவதச்சனை அழைத்துத் தனக்கொரு திருக்கோவில் அமைத்துக் கொடுக்க செய்து அங்கே இருந்து அருளாட்சி செய்வதாக ஒரு செய்தியும் உண்டு.

    மலைச்சுவரோடு பதிந்திருக்கிற படியால் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    திருப்பரங்குன்றத்து நாயகன் திருக்கரத்தில் உள்ள வேல் படைக்கு அபிஷேகமும் முருகனுக்கு புனுகும், எண்ணெய்க் காப்பும்தான் சாத்துபடி செய்யப்படுகன்றன.

    • களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜ் (வயது 48). விவசாயி.

    இவர் களக்காடு மலையடிவாரத்தில் தேங்காய் உருளி அருவி அருகே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான விளை நிலங்களை குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் நேற்று பகலில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    வனப்பகுதியில் பற்றிய காட்டு தீ திடீர் என மலையடிவாரத்தை தாண்டி, பால்ராஜ் பயிர் செய்து வரும் விளைநிலங்களை சூழ்ந்தது. 8 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் வாழைகளும், தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் வாழைவாரி கம்புகளும் தீயில் கருகி சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். தீயில் கருகிய வாழைகள் ஏத்தன், ரசகதலி, மட்டி வகையை சேர்ந்தது ஆகும். தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் காட்டுத் தீ விபத்துக்கு மர்ம நபர்களின் சதி வேலை காரணமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
    • 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார்.

    சென்னை:

    சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 27 வயதான இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வ தேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார்.

    அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்த ராஜசேகருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுமார் 1 வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு.

    இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

    எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலை யும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயார் ஆனார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

    ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமையான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜசேகர் அடைந்து சாதித்து காட்டியுள்ளார்.

    • கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். மேலும் அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால், மாதேஸ்வர மலை கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் மேட்டூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதையடுத்து கர்நாடக மற்றும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் மேட்டூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

    ×