மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செல்ல குவிந்த பக்தர்கள்

கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
மாதேஸ்வரன் மலைக்கு செல்ல, மேட்டூர் பஸ் நிலையத்தில் பக்தர்கள் காத்திருந்த காட்சி. 
மாதேஸ்வரன் மலைக்கு செல்ல, மேட்டூர் பஸ் நிலையத்தில் பக்தர்கள் காத்திருந்த காட்சி. 
Published on

மேட்டூர்:

கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். மேலும் அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால், மாதேஸ்வர மலை கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் மேட்டூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

இதையடுத்து கர்நாடக மற்றும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் மேட்டூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com