என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாமலையார்"
- சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர்.
- கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் தான். ஆன்மிக பூமி, சித்த பூமி, நினைத்தாலே முக்தியை தரும் அற்புதத் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது, உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலம்.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது மகா புண்ணியம் என்பார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும், சிவபெருமான் ஜோதி வடிவாக மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது.
ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் "என்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவர்" என்று பதிலளித்தார். பின்னர், சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக மாறி நின்றார்.
இதையடுத்து பிரம்மதேவர், அன்னப் பறவை வடிவம் கொண்டு, சிவபெருமானின் முடியைக் காணவும், திருமால் வராக (பன்றி) வடிவம் எடுத்து ஈசனின் அடியைக் காணவும் புறப்பட்டனர். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை. திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் தெரிவித்தார்.
ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறியதுடன், அதற்கு சாட்சியாக சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றையும் அழைத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில் இருக்காது என்றும், தாழம்பூவை இனி சிரசில் சூடமாட்டேன் என்றும் சாபம் அளித்தார்.
சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் மலையாக உருமாறினார். பின்பு வழிபடுவதற்கு ஏற்றவாறு சுயம்பு லிங்கமாக மலையடிவாரத்தில் தோன்றினார். அந்த சுயம்புலிங்கத்தை மையமாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.
சிவபெருமான் மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது. பல யுகங்களை தாண்டி நிற்கும் இந்த மலையில் முனிவர்களும், சித்தர்களும் வலம் வந்து வழிபட்டிருக்கிறார்கள். சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அதிகாலையில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறாா், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதே இதன் தத்துவம்.
பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கோவில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வருவார். இந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் அவர் சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை. அவர் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும்.
அதன்பிறகே, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக, 7½ அடி உயர கொப்பரையில், ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றும் உரிமை, பர்வதராஜ குலத்தினருக்கு உரியது. இந்த மகா தீபம், தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபமானது, மலையை சுற்றியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்துக்கும் தெரியும் என்கிறார்கள். எரிந்த தீபத்தில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிற மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.
- ஜோதி வடிவாக காட்சி அளித்த சிவபெருமானே மலையாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
- சிவமும் சக்தியும் ஒன்று என்ற உண்மையை பிருங்கி முனிவர் உணர்ந்தார்.
திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 233-வது தலமாகவும், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகவும் இக்கோவில் உள்ளது.
ஒருமுறை படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றி, எனது அடி அல்லது முடியை எவர் கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார். இதையடுத்து, விஷ்ணு பகவான் வராக (பன்றி) அவதாரமெடுத்து சிவனின் பாதங்களைக்காண பூமிக்குள் சென்றார். ஆனால் அவரால் காணமுடியவில்லை. அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து, சிவபெருமானின் திருமுடியை கண்டு வர மேலே கிளம்பினார். அவராலும் திருமுடியைக் காண முடியவில்லை.
அப்பொழுது சிவபெருமான் தலையில் இருந்த தாழம்பூவானது கீழே விழுந்தது. அன்னப்பறவையாக மேலே சென்ற பிரம்மா தாழம்பூவிடம், ''நான் சிவபெருமானின் முடியை கண்டதாக கூறுவேன். நீ சாட்சியாக இரு" என்று கூறவே, தாழம்பூவும் சரி என்று ஒப்புக்கொண்டது. சொன்னது போல பிரம்மாவும் சிவபெருமானிடம் தான் முடியைக்கண்டதாக கூறவே, தாழம்பூவும், பிரம்மாவுக்கு சாட்சியாக இருந்தது.
பொய் கூறிய பிரம்மனுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது என்றும், தாழம்பூவை இனி தனது சிரசில் சூடமாட்டேன் என்று சிவபெருமான் இருவருக்கும் சாபமிட்டார். ஆகையால்தான் தாழம்பூவானது சிவபெருமானுக்கு அணிவதில்லை. சிவபெருமான் ஜோதி வடிவாக பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சிக்கொடுத்த இடம் திருவண்ணாமலை என்று கூறப்படுகிறது.
ஜோதி வடிவாக காட்சி அளித்த சிவபெருமானே மலையாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அந்த மலை தான் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
சிறந்த சிவ பக்தரான பிருங்கி முனிவர், பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அதன்படி பார்வதி தேவி, இத்தலத்தில் மீண்டும் சிவபெருமானுடன் இணைய வேண்டி தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், தனது இடது பாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். சிவமும் சக்தியும் ஒன்று என்ற உண்மையை பிருங்கி முனிவர் உணர்ந்தார். இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு மொத்தம் 9 பெரிய கோபுரங்களும், 140-க்கும் மேற்பட்ட சன்னிதிகளும் அமைந்துள்ளன. அதில் 22 விநாயகர் சன்னிதிகளும் அடங்கும். சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன. இங்கு திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.
கோவிலின் கிழக்கு பகுதியில் 217 அடி உயரத்தில் ராஜகோபுரம் காணப்படுகிறது. மேற்கு பகுதியில் உள்ள கோபுரம் 'பேய்க் கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது. 'மேலக் கோபுரம்' என்பது 'மேக்கோபுரம்' என்றாகி, பின் நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது. தெற்குக் கோபுரம் 'திருமஞ்சன கோபுரம்' என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. வடக்குக் கோபுரம் 'அம்மணி அம்மன் கோபுரம்' என்றழைக்கப்படுகிறது. அம்மணி அம்மாள் என்ற பக்தை பல தடங்கல்களுக்கு மத்தியில் ஒவ்வொரு வீடாக சென்று பொருள் ஈட்டி வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். இதன் காரணமாகவே இவ்வம்மையார் பெயரில், அம்மணி அம்மன் கோபுரம் விளங்குகிறது.
பொதுவாக ஆலயங்களில் அம்பாள் சன்னிதி முன்பாக சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னிதியில் சிம்மத்திற்கு பதிலாக நந்தி உள்ளது. ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்துவிட்டார். இதை பிரதிபலிக்கும் விதமாக உண்ணாமுலை அம்மன் சன்னிதி முன்பு நந்தி உள்ளது.
இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகுசாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத்தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேளையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.
இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என கிட்டத்தட்ட 360 தீர்த்தங்கள் உள்ளன. பிரம்ம தீர்த்த கரையில் கால பைரவர் சன்னிதி உள்ளது. இவரது சிலையானது திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் 6 அடி உயரத்துக்கு காணப்படுகிறது. இவர் எட்டு திருக்கரங்களுடன் ஆயுதம் ஏந்தியும், கபால மாலையுடனும் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமி நாட்களிலும், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுகிறது. எனவே இங்கு கிரிவலம் வருவது மிகவும் விசேஷமானது. கிரிவல பாதையின் தூரம் 14 கி.மீ. ஆகும். கிரிவல பாதையில் சன்னிதிகளும், மகான்களின் சமாதிகளும் காணப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலை மலையை சுற்றி இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன.
கார்த்திகை திருவிழா
திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா வருகிற 21-11-2025 முதல் 7-12-2025 வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 21-ந் தேதி முதல் நாள் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. 22-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், 23-ந் தேதி விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. 24-ந் தேதி கோவில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினம், சம்பந்த விநாயகர் சன்னிதியில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. இறைவன் வெள்ளி வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும் பவனி வருவார்.
25-ந் தேதி தங்க சூரியபிரபையிலும், வெள்ளி இந்திர விமானத்திலும் உலா வருகிறார். 26-ந் தேதி வெள்ளி அன்ன வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 28-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 29-ந் தேதி வெள்ளி ரதத்திலும் பவனி வரும் காட்சி நடைபெறும். 30-ந் தேதி கோவிலில் மகா ரத உற்சவம் நடைபெறுகிறது. டிசம்பர் 1-ந் தேதி பிச்சாண்டவர் உற்சவமும், குதிரை வாகனத்தில் பவனியும் நடக்கிறது. 2-ந் தேதி கயிலாச வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும் உலா வருகிறார்.
3-ந் தேதி அதிகாலையில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, பின்பு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து அம்மன், விநாயகர், முருகன் போன்ற பிற சன்னிதிகளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
4-ந் தேதி சந்திரசேகர் தெப்ப உற்சவமும், 5-ந் தேதி பராசக்தி தெப்ப உற்சவமும், 6-ந் தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இறுதி நாளான 7-ந் தேதி சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருவார்.
தினசரி பூஜை
காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. காலை 5.15 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜை, 6 மணிக்கு உஷாகால பூஜை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, 11 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்து, பகல் 12.30 மணிக்கு நடைசாற்றப்படுகிறது. கோவில் மீண்டும் மாலை 3.30 மணிக்கு திறக்கப்படும். 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை, 9.15 மணிக்கு பள்ளியறை பூஜை முடிந்து இரவு 9.30 மணிக்கு நடைசாற்றப்படுகிறது.
- பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.
- கோவிலில் இருந்த ரசிகர்கள் ஸ்ரீகாந்த் உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
- காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
- மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.
சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.
காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திட்டை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை
- மாட்டுப் பொங்கல் அன்று நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
- கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.
மாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.
அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.
கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.
முழு முதற்கடவுள் என்பதால் இவரை வணங்கி விட்டு சன்னதிக்குள் செல்வர்.
ஆனால் இங்கு முருகன் சன்னதி இருக்கிறது.
பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.
- இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.
- முருகன், இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.
சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான்.
அருணகிரியார் முருகனை வேண்டவே அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.
இதனால் இவர், "கம்பத்திளையானார்" என்று பெயர் பெற்றார்.
இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது.
இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் "கோபுரத்திளையனார்" என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார்.
அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார்.
அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர்.
இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.
- பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
- பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.
திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.
இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.
எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.
தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.
ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.
பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.
இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.
மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
- திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
- இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
1. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.
3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.
4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.
6. திருவண்ணாமலை ஈசனை "தீப மங்கள ஜோதி நமோ நம" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும்.
இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.
8. திருவண்ணாமலை தலத்தில் தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
9. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்., என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.
13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.
15. கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள்.
அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.
16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும், "இறைவன் ஒருவனே" என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.
17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.
பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.
18. திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்கின்றனர்.
19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகமாகும்.
20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்" இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.
21. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.
22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
23. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.
24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.
25. இத்திருக்கோவிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.
தெற்கு கோபுரமானது, திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம், பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.
26. கோவிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.
27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.
28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.
30. வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோவிலில் உள்ளது.
- திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
- வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால், பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்
திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் வரும் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இது தொடர்பாக கூறப்படும் புராண நிகழ்வு வருமாறு:
ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு நிறைய செல்வங்களை வழங்க வேண்டும் என்று திருமகளை வற்புறுத்தினார்களாம்.
ஆனால் திருமகள் அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்தாள்.
அங்கு தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தாள்.
அன்றைய தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.
அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறப் பெண்களுக்கு லட்சுமி கடாட்சமும்,
இல்லற இன்பமும், அமைதியும், மாங்கல்ய பலமும் நிச்சமயாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனக்கோளாறுகளை நீக்கவல்லது இந்த வெள்ளிக்கிழமை கிரிவலமாகும்.
எனவே வரும் கார்த்திகை தீப தின கிரிவலத்தை தவற விடாதீர்கள்.
- புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.
- இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.
மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோவிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார்.
அங்கு ஒரு புற்று இருந்தது.
புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.
பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார்.
இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.
கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோவிலில் அருளுகிறார்.
இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது.
மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை.
மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை.
திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு.
- கோவிலில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
- இங்கு வரதராஜ பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோவிலில் கருவரையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
மூலவரின் முன்பாக அழகிய வடிவுடன் பக்தர்களுக்கு அருள் பாளிக்கும் வரதராச பெருமாளை உயிரோட்டமாக பார்த்து கொண்டேயிருக்கலாம்.
பொதுவாக இறைவன் கிழக்கு முகமாகவே அருள்பாளிப்பார்.
ஆனால், இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வரதராசப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் சுவாமிக்கு வழிபாடும் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்று வருகிறது.
திருமணத்தடை புத்திர தோஷம் உள்ளவர்கள் இவ்வரதராச பெருமாள் இறைவனை உள்ளன்போடு
சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர,
விரைவில் திருமணமும் ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபட்டு வர, மகப்பேறும் பெறுவதாக ஐதீகம்.
திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் பூஜா முறையான வைகானச ஆகமப்படி,
இவ்வரதராச பெருமாளுக்கு பூஜை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் சென்று வரதராசரை தரிசிக்க இயலாதவர்கள் இத்திருத்திலத்தில் தரிசித்து அருளைப் பெறுகின்றனர்.
- இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
- நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த சன்னதி ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது.
ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி திருநாளில் இவ்விஜய விநாயகருக்கு காலை அபிஷேகம்,
சந்தன காப்பு மாலை, ஸ்ரீமூஷிக வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடும், நடைபெற்று வருகிறது.
பவுர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாள் தேய்பிறையில் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை அபிஷேகமும்,
தூப தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்று, சுவாமி உற்சவ மூர்த்தி திருக்கோவிலை வலம் வருவார்.
இத்திருக்கோவிலின் மூலவரான அருள்மிகு அருணாச்சலேசுவரருக்கு, ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும்,
விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இத்திருக்கோவிலில் பிரதோஷ வேளையில் நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பெருமானுக்கு நிவேதிக்கிறார்கள்.
அருகம்புல் ஆராதனையும், வில்வதளத்தில் அர்ச்சனையும் அலங்காரமும் வெகு விமரிசையாக பிரதோஷ காலத்தில் பக்த கோடிகளால் நடைபெறும்.
இத்திருக்கோவிலில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ நாயனார் ரிஷப வாகனத்தில்,
குடை மற்றும் வெண்சாமரங்களுடன், தேவாரம் மற்றும் மங்கல பண் இன்னிசையோடு திருக்கோவிலினை பக்தர்கள் சூழ, பவனி வருவர்.
பக்த கோடிகள் பவுர்ணமியில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இயலாதோர்,
இந்த அருணாசலேசுவரரை தரிசித்து வேண்டும் வரத்தினையும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவதாக நம்புகின்றனர்.
இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இரவு நான்கு கால பூஜைகளும் வில்வ தளத்தால் அர்ச்சிக்கப்பட்டு அனைத்து வித அபிஷேகங்களும், நடைபெற்று
ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வஸ்திரங்களுடன் ஈசன் காட்சி அளித்து அருள்பாளித்து வருகிறார்.






