என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ராயகிரியில் இலவச மருத்துவ முகாம்

- பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ராயகிரியில் நடைபெற்றது.
- முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ராயகிரியில் பொது மக்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் மற்றும் ராயகிரி பஞ்சாயத்து தலைவர் விவேகானந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்றனர். இதன் சிறப்பம்சமாக யோகா, அக்குபஞ்சர், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள், வயது முதிர்வு சார்ந்த உபாதைகள், சீரான உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு, இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டது. டாக்டர் ஏ.வேடியப்பன், டாக்டர் நிலா மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் ஆகியோர் பங்குபெற்ற பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி னார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள் மற்றும் அலு வலர்கள் செய்திருந்தனர்.