search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி"

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கனும் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிஓஏ-விற்கு பரிந்துரை செய்துள்ளார்.
    ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் நிதியுதவி செய்து வருகின்றன.

    இந்நிலையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கலாம் என பிசிசிஐ-யின் தற்காலிக தலைவர் சிகே கண்ணா உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத் ராய்க்கு பரிந்துரை செய்துள்ளார்.

    தற்போது பிசிசிஐ-யின் முடிவுகள் அனைத்தும் நிர்வாகக் குழுவினால்தான் எடுக்கப்படுகிறது. இதுகுறித்து சிஇஓ தலைவர் வினோத் ராய்க்கு சிகே கண்ணா எழுத்தியுள்ள கடிதத்தில் ‘‘புல்வாமா தாக்குதலில் வீரர்கள் மரணம் அடைந்ததை நாடே துக்கமாக அனுசரித்து வரும் நிலையில், நாமும் அதனுடன் பங்கேற்றுள்ளோம்.

    மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நம்முடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளோம். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிசிசிஐ சார்பில் குறைந்தது ஐந்து கோடியாவது நிதியுதவி அளிக்க வேண்டும்.

    சையத் முஷ்தாக் அலி மற்றும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் ஐபில் தொடரின் தொடக்க விழா மற்றும் தொடக்க போட்டியிலும் அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்காக தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். #SalmanKhan #BeingHuman #Pulwamamartyrs #PulwamaAttack
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளும் தனிநபர்களும் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்தி நடிகர் அமிதாப் பச்சன் 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.



    இந்த வரிசையில் இந்தி திரையுலகின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உள்ள சல்மான் கானும் தற்போது இணைந்துள்ளார்.

    தனது ‘பீயிங் ஹியூமன்’ (Being Human) அறக்கட்டளை மூலம் நடிகர் சல்மான் கான் நிதி திரட்டி வருகிறார். சல்மான் கானின் இந்த முயற்சிக்கு மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜுஜு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். #SalmanKhan #BeingHuman #Pulwamamartyrs #PulwamaAttack
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் தியாகத்துக்கு மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் தனது மணல் ஓவியத்தால் ஒரு பெண் கலைஞர் அஞ்சலி செலுத்தியுள்ளார். #Pulwamaattack #Sandartist #Sandartisttribute #Juhubeach
    புவனேஸ்வர்:

    மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் தள்ளுவண்டியில் ‘வடா பாவ்’ (நொறுக்குத்தீனி) வியாபாரம் செய்துவருபவரின் மனைவி லக்‌ஷ்மி கவ்ட். வியாபார நெருக்கடி இல்லாமல் ஓய்வாக இருக்கும்போது ஜுஹு கடற்கரையில் மணல் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் ஒரு டன் மணலை பயன்படுத்தி, 9 மணிநேர உழைப்பில் மூவர்ண கொடியின் நிறத்தில் அழகிய மணல் ஓவியம் ஒன்றை நேற்று மாலை உருவாக்கி முடித்தார்.


    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜுஹு கடற்கரைக்கு வருகைதரும் மக்கள் இந்த மணல் ஓவியத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.



    இதேபோல் ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரை மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடற்கரையில் மணல் ஓவியங்கள் மூலம் புல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. #Pulwamaattack #Sandartist #Sandartisttribute #Juhubeach

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடல் தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தில் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #Subramanian
    கயத்தாறு:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமம், மேலத்தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன்(30) வீரமரணம் அடைந்தார்.

    இவர் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி(23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார்.

    நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    சுப்பிரமணியன் உடல் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மற்ற வீரர்கள் உடல்களுடன் திருச்சி வந்தது.



    திருச்சியில் இருந்து மதுரைக்கு விமானம் வந்தது.  அங்கு கயத்தாறு வீரர் சுப்பிரமணியனின் உடல் இறக்கப்பட்டது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன், போலீஸ் ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியனின் உடல் தனி வாகனத்தில் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு பணி நியமன உத்தரவை துணை முதல்-அமைச்சர் அளித்தார்.

    சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



    பின்னர் சுப்பிரமணியன் உடல் வீட்டின் அருகாமையில் உள்ள அவரது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல் துறை உயரதிகாரிகளும், அரசு உடரதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    மாலை சரியாக 6.15 மணியளவில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #Subramanian 
    புல்வாமா தற்கொலைப் படை தாக்குதலில் உயிர்நீத்த 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். #PulwamaAttack #AmitabhBachchan
    காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த் தியாகத்துக்காக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.

    இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர். அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தர்வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். #PulwamaTerroristAttack #PulwamaAttack #AmitabhBachchan #PulwamaRevenge #RIPBraveHearts 

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack
    அரியலூர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களிடம் ஆவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகிய 2 வீரர்கள் பலியானார்கள்.

    சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணியனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு.

    பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி , உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

    தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.

    இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றி சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.


    கார்குடி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக சிவச்சந்திரனின் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  நிர்மலா சீதாராமன் இங்கும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார்.

    சிவச்சந்திரனின் உடலுக்கு அவருடைய மகன் ராணுவ உடையில் அஞ்சலி செலுத்தினான்.

    அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான கருணை உதவி காசோலை சிவச்சந்திரனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

    சுமார் 5.10 மணியளவில் சிவச்சந்திரன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack #CRPFAttack #SivaChandran 
    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #Pulwamaattack
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அம்மாநில மந்திரிகள் பங்கேற்றனர்.



    தனது உரையினிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக பேசிய மோடி, ‘இது மிகவும் துயரமான நேரமாகும். நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திகொண்டு அறிவார்த்தமாக சிந்திக்க வேண்டிய நேரமுமாகும். புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும்’ என சூளுரைத்துள்ளார். #Pulwamaattack #Pulwamaattackavenge #Modi 
    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் அமைதி பேரணி நடந்தது. #Mamatamarch #candlelightmarch #Pulwamaattack
    கொல்கத்தா:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று மாலை கொல்கத்தா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, வாயில் கருப்புத்துணி கட்டியவாறு,  நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். #Mamatamarch  #candlelightmarch #Pulwamaattack
    பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றி ராணுவம் முடிவு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். #PMModi #PulwamaAttack #CRPF

    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் நேற்று தெரிவித்தார். பயங்கரவாதிகளை ஒழித்து கட்ட ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்றும் தெரிவித்தார். மராட்டிய மாநிலம் யவதாமில் நடந்த பொது நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    இந்திய பிரிவினைக்கு பிறகு ஒரு நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது, திவாலாகி கொண்டு இருக்கும் அந்த நாடு இன்று பயங்கரவாதத்தின் சின்னமாக இருக்கிறது.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டுவது குறித்து ராணுவம் முடிவு செய்யும் பதிலடி கொடுப்பது குறித்து நமது வீரர்கள் முடிவு செய்வார்கள்.

    இவ்வாறு மோடி பேசினார். #PMModi #PulwamaAttack #CRPF

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #PulwamaAttack #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இத்தாக்குதலில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் மகன் சி. சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

    இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தனது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் நேற்று உத்தரவிட்டேன்.



    மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சுப்ரமணியனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவசந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    மறைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PulwamaAttack #CRPF #EdappadiPalaniswami
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கயத்தாறு சவலாப்பேரிக்கு வருகிறார். #PulwamaAttack #Subramaniyan #CRPF
    கயத்தாறு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.

    இவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது30) வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    வீரமரணமடைந்த சுப்பிரமணியன் உடல் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவருக்கு சொந்தமான இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.



    வீரமரணமடைந்த சுப்பிரமணியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கயத்தாறு சவலாப்பேரி செல்லும் அவர் சுப்பிரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

    மேலும் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சுப்பிரமணியன் உடலுக்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே சவலாப்பேரி கிராமத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உறவினர், நண்பர்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஏராளமானோர் சவலாப்பேரி கிராமத்திற்கு திரண்டு வந்து சுப்பிரமணியன் படத்தை அலங்கரித்து வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #PulwamaAttack #Subramaniyan #CRPF
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியானா 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் தெரிவித்த உருக்கமான தகவல்களை பார்க்கலாம். #JammuKashmir #CRPF
    தூத்துக்குடி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியனும் (வயது 30) வீர மரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந் தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    இதுகுறித்து சுப்பிரமணியனின் உறவினர்கள் தெரிவித்த உருக்கமான தகவல்கள் வருமாறு:-

    சுப்பிரமணியன் ஐ.டி.ஐ. படித்து விட்டு, கடந்த 5 ஆண்டு களாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வந்தார். அவர் முதலில் சென்னையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பயிற்சி பெற்றார். பின்னர் அவர் உத்தரபிரதேசத்திலும், தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பணியாற்றினார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சுப்பிரமணியம் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து அவர் மீண்டும் பணியில் சேர்ந்த அன்றே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக அவர் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் பணியில் சேர்ந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். ஆனால், அவருக்கு இந்த நிலை ஏற்படும் என்று நாங்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    சுப்பிரமணியனின் தந்தை கணபதி விவசாயி ஆவார். தாயார் மருதம் அம்மாள். சுப்பிரமணியனுக்கு பேச்சியம்மாள், வேல்தாய் ஆகிய 2 அக்காள்களும், கிருஷ்ணசாமி என்ற அண்ணனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தாசில்தார் லிங்கராஜ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    சுப்பிரமணியனின் உடல் இன்று (சனிக்கிழமை) அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

    இதே போல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் பலியாகி உள்ளார். அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் குறித்த விவரம் வருமாறு:-

    உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி சிங்காரவள்ளி. இந்த விவசாய தம்பதிக்கு 2-வது மகனாக பிறந்தவர் சிவசந்திரன் (வயது 33). எம்.ஏ. பிஎட். பட்டதாரியான இவருக்கு நாட்டின் மீது அதிக பற்று ஏற்பட்டதால், ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் நடந்த ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வானார். 2010-ம் ஆண்டு முதல் சிவசந்திரன் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் இவரும் பலியான சம்பவம் அந்த கிராமத்தை மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    சிவசந்திரன் தனது கிராமத்தை சேர்ந்த காந்திமதி (28) என்கிற பெண்ணை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் சிவமுனியன் என்கிற மகன் உள்ளான். மேலும் காந்திமதி தற்போது கர்ப்பமாக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி சிவசந்திரன் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து விட்டு, கடந்த வாரம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற கடந்த 9-ந் தேதி சிவசந்திரன் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு காஷ்மீர் சென்றார்.

    நேற்று முன்தினம் மதியம் தான் சிவசந்திரன் தனது குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது மனைவி காந்திமதியிடம் மகன் சிவமுனியனை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், கர்ப்பமாக உள்ள நீயும் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும், நன்கு உடலை கவனித்து கொள்ளுமாறும் சிவசந்திரன் பேசியதாக தெரிவித்தார்.

    வீர மரணம் அடைந்த சிவசந்திரனுக்கு ஜெயந்தி என்கிற அக்காவும், ஜெயசித்ரா என்கிற தங்கையும், செல்வசந்திரன் என்கிற தம்பியும் உள்ளனர். இதில் செல்வசந்திரன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஆண்டு வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். ஜெயந்தி திருமணமாகி கார்குடி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மனநிலை பாதிக்கப்பட்டவரான ஜெயசித்ரா வீட்டில் பெற்றோரின் பராமரிப்பில் உள்ளார். சின்னையன்- சிங்காரவள்ளி தம்பதி ஏற்கனவே இளைய மகன் செல்வசந்திரனை மின்சாரம் தாக்கியதில் பறி கொடுத்தனர். இந்நிலையில் சிவசந்திரனையும் பறிகொடுத்து விட்டு தவித்து வருகின்றனர்.

    சிவசந்திரனின் தந்தை சின்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறு வயது முதலே சிவசந்திரன் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்து வந்தார். எப்போதும் நாடு, நாடு என்று கூறுவார். நாட்டை காப்பாற்ற சென்றவர் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டார். விடுமுறையில் வந்திருந்தவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பே பணிக்கு சென்றார். நேற்று மதியம் (அதாவது நேற்று முன்தினம் மதியம்) 12 மணியளவில் சிவசந்திரன் அவரது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவரை அர்ப்பணித்து கொண்டார். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு கூறி கதறி அழுதார்.

    மேலும் சிவசந்திரன் வீட்டிற்கு அருகில் உள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. #JammuKashmir #CRPF 
    ×