search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRPF Jawans Killed"

    காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ரோபோ சங்கர், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFJawans
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதில் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்தனர்.

    இவர்களது குடும்பங்களுக்கு நடிகர் ரோபோ சங்கர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.

    குண்டுவெடிப்பில் இறந்த அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினரைச் சந்தித்த நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.



    பின்னர் ‘ரோபோ’ சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நான் சினிமாக்காரன். என்னிடம் சினிமா சார்ந்த வி‌ஷயங்களை இந்த இடத்தில் எதுவும் கேட்க வேண்டாம். நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

    ’இன்றைக்கு நாம் குடும்பத்துடன் சந்தோ‌ஷமாக இருக்கிறோம் என்றால் அதற்கு இவர்களைப் போன்ற எல்லைசாமிகள் தான் காரணம். இன்றைக்கு நமது தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களை நாம் இழந்து நிற்கிறோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பாகும்.



    இக்குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பதே தெரியவில்லை. சிவசந்திரனால் மட்டுமே இந்த குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் பிரிவு என்பது ஈடுசெய்ய முடியாதது. இந்தக் குடும்பத்துக்கு என்னால் ஆன சிறு உதவியை வழங்க எண்ணினேன்.

    அவரது தாயாரிடம் பேசும்போது என் மகன் நாட்டுக்காக உயிரை விட்டுள்ளார். அது எனக்கு பெருமைதான் என அவர் தாய் கூறும்போது பெருமையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #CRPFJawans #RoboShankar

    புல்வாமா தற்கொலைப் படை தாக்குதலில் உயிர்நீத்த 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். #PulwamaAttack #AmitabhBachchan
    காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 மத்திய படை வீரர்கள் பலியானது ஒட்டுமொத்த இந்தியர்களை ஆவேசம் அடையச் செய்துள்ளது. 40 வீரர்களின் உயிர்த் தியாகத்துக்காக பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.

    இதில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர். அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தர்வர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார். #PulwamaTerroristAttack #PulwamaAttack #AmitabhBachchan #PulwamaRevenge #RIPBraveHearts 

    ×