search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்"

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
    • தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை கோர்ட் சுட்டிக்காட்டியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர்.

    இதையடுத்து உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் அந்த நபர் பதிவு செய்து காத்திருந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. எனவே அவரது 17 வயதே ஆன மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

    ஆனால் மருத்துவ சட்டவிதிகளின் படி மைனர் பெண் உறுப்பு தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள், 17 வயது சிறுமியின் உறுப்பை தானமாக பெற மறுத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு சிறுமி அவரது, தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

    தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க சிறுமிக்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு அவரை பாராட்டவும் செய்தது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    மேலும் இதுபோன்ற மகளை பெற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டது.

    • எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது.
    • எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன.

    மதுரா :

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் சார்பில் பல்வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை செர்கார் கிட்டங்கியில் போலீசார் பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்தபோது, கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கூறிய தகவல்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தது. "எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன. அவை 581 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டன. எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது" என்று அவர் வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, "எலிகளை கட்டுப்படுத்தவும், எலிகள் 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டதற்கான ஆதாரங்களை வரும் 26-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவும்" போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு முன்பு ஒருமுறை, 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக போலீசார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள்.
    • தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    மும்பை :

    மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் சிறையில் கொசு தொல்லை மிதமிஞ்சி இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதியிடம், "சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை, இதோ பாருங்கள்... சிறையில் பிடித்த கொசுக்களை கொண்டு வந்து இருக்கிறேன்" என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த செத்துப்போன கொசுக்களை லக்டவாலா காட்டினார்.

    "என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் காரணமாக கொசுவலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கொசு வலைக்கு பதிலாக வேறு கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு லக்டவாலாவை அறிவுறுத்திய கோர்ட்டு, கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக கொசு அடங்கிய பாட்டிலை தாதா லக்டவாலா கோர்ட்டுக்கு கொண்டு வந்து நீதிபதியிடம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் தாதாவின் நூதன முயற்சி அவருக்கு பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊழல் வழக்குகளில் 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேக்கம்.
    • சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக 75 வழக்குகள் துறைசார் விசாரணையில் உள்ளன.

    புதுடெல்லி :

    சி.பி.ஐ. தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாகவும் மத்திய கண்காணிப்பு ஆணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) ஆண்டறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * சி.பி.ஐ. தொடுத்துள்ள ஏறத்தாழ 6,700 ஊழல் வழக்குகள் கோர்ட்டு விசாரணையில் உள்ளன. அவற்றில் 275 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன.

    * 1,939 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையும், 2,273 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 811 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையும், 1,399 வழக்குகள் 3 ஆண்டுகளுக்குள்ளும் தேங்கி உள்ளன. இது, கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரம்.

    * 9.935 மேல்முறையீட்டு வழக்குகளில் 9,698 ஐகோர்ட்டுகளிலும், 237 சுப்ரீம் கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன. 1.099 மறு ஆய்வு முறையீடுகளும் ஐகோர்ட்டுகளில் தேங்கி உள்ளன.

    * 10 ஆயிரத்து 974 அப்பீல் மற்றும் மறு ஆய்வு முறையீடுகளில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், 558 வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,749 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 3,665 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 2,818 வழக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,823 வழக்குகள் 2 ஆண்டுகளுக்குள்ளும் நிலுவையில் உள்ளன.

    * 645 ஊழல் வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவற்றில் 35 வழக்குகளில் விசாரணை 5 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது.

    * 2021-ம் ஆண்டு 549 சிவில் சர்வீசஸ் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ்) அதிகாரிகள் மீதும், 221 அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டட்) அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

    * சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக 75 வழக்குகள் துறைசார் விசாரணையில் உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 2020-ம் ஆண்டு காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்
    • போலீசாரின் விசாரணையில் அவர் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி, பண மோசடி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி(வயது 28). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 2020-ம் ஆண்டு காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் காசி மீது மேலும் பல பெண்கள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பாலியல் தொல்லை, கந்து வட்டி, போக்சோ உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    போலீசாரின் விசாரணையில் அவர் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி, பண மோசடி செய்தது மட்டுமின்றி பாலி யல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியது தெரிய வந்தது.

    இதையடுத்து காசி தொடர்பான வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் அவரது லேப்டாப்பில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் இருந்தன. இந்த வழக்கில் காசிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

    மேலும் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நண்பரை கைது செய்யும் நடவ டிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வழக்கு தொடர்பான தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார். காசி மற்றும் அவரது தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தனக்கு ஜாமீன் வழங்குமாறு மதுரை ஐகோர்ட்டில் காசியின் தந்தை தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 3-வது முறையாக நேற்று ஜாமீன் கேட்டு மீண்டும் அவர் மனுதாக்கல் செய்தார்.

    மனு விசாரித்த மதுரை ஐகோர்ட்டு காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்கியது

    இந்த நிலையில் ஏற்கனவே காசியின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கந்துவட்டி வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவிலில் உள்ள 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.‌ விசாரணைக்காக காசி இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

    இந்த கந்து வட்டி வழக்கில் ஏற்கனவே 34 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு இருந்த நிலையில் 35-வது சாட்சியத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    • நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
    • வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    இம்மாதம் 1-ந் தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25-ந் தேதி நிலவரப்படி 25 ஐகோர்ட்டுகளில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது.

    நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை கேள்வி நேரத்தில், கடந்த ஆண்டில் உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் கூறியதாவது:-

    மற்ற நாடுகளில் ராணுவ செலவினம் குறித்த விவரங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இல்லை.

    இருப்பினும், சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில், இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

    முதல் இடத்தில் அமெரிக்காவும் (80 ஆயிரத்து 67 கோடி டாலர் செலவு), இரண்டாம் இடத்தில் சீனாவும் (29 ஆயிரத்து 335 கோடி டாலர்), 3-வது இடத்தில் இந்தியாவும் (7 ஆயிரத்து 660 கோடி டாலர்) இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    46 இடங்களில், ரேடார் நிலையங்கள் நிறுவி கடலோர பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.
    • ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பனகல் கட்டிடம் வளாகத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.

    இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் மோகன்தாஸ், முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    சேலம்:

    நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர். தொழில் அதிபரான இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவர், சீர்காழி தென்பாதி திரிபுரசுந்தரி நகரில் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    கடந்த திங்கட்கிழமை அன்று காலையில் ரமேஷ்பாபு சீர்காழி பிடாரிவடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் அதிபர் வீட்டுக்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் இளவரசன் (25) என்பவர் ஓட்டினார்.

    அப்போது ரமேஷ் பாபுவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து பேசி கொண்டிருந்தபோது மற்றொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய 3 பேர் இன்று மதியம் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எண்.2-ல் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில், நாகை மாவட்டம் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34) மற்றும் புதுச்சேரி, மேல்காத்த மங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    சரண் அடைந்த இவர்கள் 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    ×