search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை மிரட்டல்"

    • காவலாளி கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூ பெத்த லேகம் பகுதியைச் சேர்ந்தவர் ராசித்தா (வயது 28). ஆசனம்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ராஜாசேகரன் (38). காவலாளி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசித்தாவிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பி தருமாறு ராஜசேகரிடம், ராசித்தா கேட்டார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன், ராசித்தாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை ராஜசேகரன் கைது செய்தனர்.

    • செல்போனில் பேசும் போது அருண்குமார் எனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.
    • அருண்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் 43 வயது இளம்பெண்.

    இவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணமாகி கணவர் உள்ளார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் எனக்கும் எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நாங்கள் சட்டப்படி விவாகரத்து பெற்றோம்.

    இதனால் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன்.

    கடந்த மாதம் 12-ந்தேதி நான் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றேன். அப்போது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நான் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் எனக்கு உதவிகள் செய்தார். அவருடன் நான் நெருங்கி பழகினேன். அவர் என்னிடம் தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையத்தை சேர்ந்த அருண்குமார்(வயது42) என கூறினார்.

    மேலும் அவர் மருந்து விற்பனை பிரதிநியாக வேலை பார்ப்பதாக கூறினார். இதனையடுத்து நாங்கள் செல்போன் எண்களை பறிமாற்றிக்கொண்டோம்.

    பின்னர் நான் கோவைக்கு புறப்பட்டு வந்தேன். அதன் பின்பு நாங்கள் செல்போன் மூலமாக அடிக்கடி பேசி பழகி வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானது. நாங்கள் செல்போனில் பேசும் போது அருண்குமார் எனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் என்னை பார்க்க வேண்டும் என கூறினார். அதன்பின்னர் அவர் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அவரை நான் எனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

    அப்போது நாங்கள் 2 பேரும் பலமுறை ஜாலியாக இருந்தோம். இந்த நிலையில் திடீரென அவர், என்னிடம் பணம் கேட்டார். நான் கொடுக்க மறுத்தேன்.

    இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் என்னை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் ஜாலியாக இருந்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய அருண்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரிக்கு போனில் கொலை மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போனில் பேசியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என்பது கண்டறியப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போலீஸ் தலைமை கட்டுப்பாட்டு அறை திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

    அதில் பேசியவர் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்த நிலையில், முதல்-மந்திரிக்கு போனில் கொலை மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முதல்-மந்திரிக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போனில் பேசியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என்பது கண்டறியப்பட்டது. அந்த சிறுவனிடம் விசாரித்தபோது, விளையாட்டாக போன் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று அந்த சிறுவனை போலீசார் எச்சரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆயுத பூஜைக்கு அழைக்காததால் ஆத்திரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் வள்ளலார் பூங்கா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் இந்து முன்னணி சார்பில் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பூஜை போடுவதற்காகவும் பெயர் திறக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்.

    அப்போது அங்கு வந்த சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்த மதன் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகியோர் நானும் ஆட்டோ டிரைவர் தான் என்னை ஏன் ஆயுத பூஜைக்கு கூப்பிடவில்லை என தகராறு செய்து சந்திரசேகரை தாக்கி உள்ளனர்.

    மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    அப்போது அங்கிருந்த சக ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் விலக்கி அனுப்பினர். இது குறித்து சந்திரசேகர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மதன் மற்றும் அவரது மைத்துனர் ஆதித்யன் ஆகிய இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • டேனியலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
    • கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சின்னபள்ளம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 44). இவர் பூதப்பாடியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பஸ் மேனேஜராக உள்ளார்.

    இவர் நேற்று மதியம் தனது மனைவி எலிசபெத் (40), மகள் ஜோவிட்டா ஜாஸ்மின் (20) ஆகியோருடன் தனது மோட்டார் சைக்கி ளில் பூதப்பாடியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடைக்கு சென்றனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன பள்ளத்தை சேர்ந்த டேவிட் என்பவர் டேனியல் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் வந்தார்.

    இதையடுத்து டேனியல் எதற்காக என் மீது மோதுவது போல் வந்தாய் என டேவிட்டிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டேவிட் தனது மோட்டார் சைக்கிள் வைத்திருந்த அரிவாளை எடுத்து டேனியலை தாக்க முயன்றார்.

    இதை தடுத்த போது டேனியலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் தடுக்க முயன்ற எலிசபெத் மற்றும் ஜோவிட்டா ஜாஸ்மினுக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. பட்டப் பகலில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

    இதை தொடர்ந்து டேவிட், டேனியலை பார்த்து இப்போது தப்பித்து விட்டாய் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து காயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதியினர் 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பெண் காவலர்கள் ராஜேஸ்வரி, அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • தெருவிற்குள் வரக்கூடாது என்று கூறி பாண்டி என்ற பாண்டியராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    சுரண்டை:

    சுரண்டை வரகுணராமபுரம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகே பெண் முதல்நிலை காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாண்டி என்ற பாண்டியராஜ் (வயது34) என்பவர் அவர்களை வழிமறித்து இந்த தெருவிற்குள் நீங்கள் வரக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்நிலை காவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் விசாரணை நடத்தி பாண்டி என்ற பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    • இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    • இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56), காய்கறி வியாபாரி. அதேபகுதியை சேர்ந்தவர்கள் குமரன் (வயது42),ராஜா(வயது 40). அண்ணன் தம்பி. இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது கோவிந்தன்அதே பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்று உள்ளார்.

    ஹோட்டலுக்கு வந்த அண்ணன் தம்பி குமரன், ராஜா இருவரும் கோவிந்தனை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால்காயமடைந்த கோவிந்தன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு வழக்கு பதிவு செய்து குமரன் , ராஜா ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்

    • அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
    • இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்தவர் 32 வயது பெண்ணின் கணவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தற்போது தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு, அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் அப்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணிற்கு கொலைமிரட்டல் விடுத்த விஜய் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோர்ட்டு வாசலிலேயே குற்றம் சாட்டப்பட்ட நண்பர்கள், 3 பேரும், கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • வழக்கு விசாரணைக்கு அவர்கள் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜராகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த நண்பர்கள் பாலாஜி (வயது 26), விஷ்ணு(24), நரேந்திரன்(25). இவர்கள் மீது வேலம்பாளையம் போலீசில் அடி தடி வழக்கு உள்ளது.இந்த வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்-3 கோர்ட்டில் நடந்து வருகிறது.

    நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு அவர்கள் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜராகினர். இதில், வழக்கு சம்பவம் தொடர்பாக மதன்குமார் என்பவர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜராகி சாட்சி அளித்தார்.

    அதன்பின், கோர்ட்டிலிருந்து வெளியே வந்த அவரை கோர்ட்டு வாசலிலேயே குற்றம்சாட்டப்பட்ட நண்பர்கள், 3 பேரும், கொலை மிரட்டல் விடுத்தனர். அதிர்ச்சியடைந்த மதன்குமார் இதுகுறித்து நீதிபதியிடம் புகார் தெரிவித்தார். வீரபாண்டி போலீசில் மிரட்டல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • சேதுபதி அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்வதற்காக மணமகன் தேடி ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்தேன். இதனையடுத்து சேதுபதி என்பவர் என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். மேலும் பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாக கூறி போலியாக அடையாள அட்டை தயார் செய்து எனக்கு அனுப்பினார்.

    சேதுபதி அடிக்கடி என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார். இதனையடுத்து நான் அவரது செல்போன் எண்ணை முடக்கினேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி என்னை தொடர்பு கொண்ட சேதுபதி நான் திருமணம் செய்ய போகும் வாலிபரின் நடவடிக்கைகள் சரியில்லை. அவர் நல்லவர் இல்லை. எனவே அவரை திருமணம் செய்ய வேண்டாம் என உண்மைக்கு மாறான தகவல்களை என்னிடம் கூறினார்.

    மேலும் அவர் நான் திருமணம் செய்ய போகும் வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சேதுபதி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கர்ணகியும் வந்து ஆபாசமாக பேசி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • கலையரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை குட்டை தெருவை சேர்ந்த வர் சுப்பிரமணி (வயது52), இவரது மனைவி கர்ணகி (48), பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). அவரது மனைவி கலையரசி (45). இவர்கள் எதிரெதிர் வீட்டி னர். கடந்த 18-ந் தேதி மாலை ராஜேந்திரன் மனைவி கலையரசி வீட்டின் முன்பு தண்ணீர் தெளித்து வாசலை பெருக்கி கோலம்போட்டுக் கொண்டிருந்த போது எதிர் வீட்டு வாசலுக்கு தண்ணீர் சென்றதால் சுப்பிரமணியும் அவரது மனைவி கர்ணகியும் வந்து ஆபாசமாக பேசி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசில் கலையரசி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

    இதே போல கடந்த 30-ந் தேதி ராஜேந்திரன் தனது வாகனத்தை சுப்பிரமணி வீட்டு வாசலில் நிறுத்திய தாகவும் ஏன் எங்கள் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்து கிறீர்கள் என்று சுப்பிரமணி கேட்டுள்ளார் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்தி ரன் அவரது மனைவி கலை யரசி ஆகியோர் சுப்பிரமணி மற்றும் கர்ணகியையும் ராஜேந்திரன் மற்றும் மனைவி கலையரசி ஆகி யோர் ஆபாசமாக திட்டி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பண்ருட்டி போலீசில் கர்ணகி கொடுத்த புகாரின் பண்ருட்டி போலீசார் ராஜேந்திரன் மற்றும் மனைவி கலையரசி ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரத்தில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் லோகநாதன் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் அருகில் கையில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை பிடிக்க முயன்றனர். அப்போது லோகநாதன், தான் வைத்திருந்த வீச்சரிவாளை காண்பித்து, என்னை பிடித்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரையும் மிரட்டினார். இருப்பி னும் போலீசார் லோகநாதனை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார்.

    ×