search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை மிரட்டல்"

    • கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கணவர் தெரிவித்துள்ளார்.
    • வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இதற்காக கணவன், மனைவி கோபம் கொண்டு செய்யும் சம்பவங்கள் பல முறை செய்திகளாகி இருக்கின்றன. அந்த வகையில், ஆக்ராவில் வசித்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சண்டயை தொடர்ந்து பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் காவல் நிலையத்தில் புகாராக எழுந்து, வழக்கு பதியும் வரைசென்றுள்ளது. கணவருடன் சண்டையிட்ட மனைவி, அதன்பிறகு தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் "கணவரை கொலை செய்பவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஸ்டேட்டஸ் தொடர்பாக கணவன் ஆக்ராவின் பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல் அதிகாரி ஷியாம் சிங் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளார். புகாரில் கடந்த 2023 டிசம்பரில் தனது மாமியார் தன்னை தொடர்பு கொண்டு கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே, கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக 2022 டிசம்பர் மாதம் மனைவி தனது கணவனை பிறந்து சென்று தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

    கணவன், மனைவி இடையே இந்தளவுக்கு சண்டை ஏற்பட காரணம் மனைவி தனது வீட்டின் அருகே வசிக்கும் வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும், மனைவியின் காதலன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கணவன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    • மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பேராச்சி செல்வி (வயது 35) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்குள்ள மறுகால்தலை பரும்பு பகுதியில் அனுமதியின்றி சிலர் சரள் மண் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    உடனே அவர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அங்கு சென்றார். அப்போது மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    ஒரு கட்டத்தில் மண் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ.வை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பேராச்சி செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேஷ் (30), அவினாப்பேரியை சேர்ந்த உலகநாதன் மகன் செல்லத்துரை (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேராச்சி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    • மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.
    • காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது மற்றொரு காரில் நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நவீன்குமார் மற்றும் 2 பேர் வந்தனர். மேயரின் காரை இடிப்பது போல் நவீன்குமார் தனது காரை நிறுத்தியதாக தெரிகிறது.

    இதை பார்த்த மேயரின் தபேதர் மணிகண்டன் (37) தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதர் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த கத்தியை எடுத்து மேயருக்கும், மணிகண்டனுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து நவீன்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து மணிகண்டன் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சம்பவ இடத்துக்கு ஜான் செல்லத்துரை தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.
    • மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் வீட்டில் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சடையாண்டி (வயது 48). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கோவை கிணத்துக்கிடவில் உள்ள ஒரு கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வ.உ.சி. தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மகேந்திரன் (47) என்பவர் குடி போதையில் தகராறு செய்து கொண்டு இருந்தார்.

    சடையாண்டி வீட்டின் அருகே அவர் சத்தம் போட்டு கொண்டு இருந்ததால் அவரும் அவரது மனைவியும் இதனை தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி மிரட்டினர். மேலும் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்று விடுவதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சடையாண்டி இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு ஜான் செல்லத்துரை தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் வீட்டில் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ளரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீ.பா ளை யம் கிரா மத்தைச் சேர்ந்த வர் சுரேஷ் (வயது 46) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடூர் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மற்றும் வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்த மாயவேல் மகன் தமிழரசன் (20) ஆகியோர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சுரேஷ் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் குடிபோதையில் சுரேஷ் வீட்டிற்கு சென்று நீ மாடூர் காரனுக்குத்தான் ஆதரவாக பேசினாய் எனக்கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கையை கிழித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் இவர் மீது கேரள மாநிலத்தில் அடிதடி சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    • பொக்லைன் எந்திரம் பறிமுதல்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி, அம்பலூர், கொடையாட்சி, உதயேந்திரம், சி.வி.பட்டறைபகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது.

    அவரது உத்தரவின்பே ரில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அளிக்கப் பட்ட வீட்டுமனை பகுதிக்கு அருகே 10 அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டு அதிலிருந்து மணல் கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தாசில்தார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.

    அப்போது டிரைவர் பிரகாசம் மற்றும்துறையேரி பகுதியை சேர்ந்த வி.சி.அன்பரசு, அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் பொக்லைன் எந்திரத்தை ஏன் பறிமுதல் செய்கிறாய் என கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தாசில்தார் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி போக விடாமல் தடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆகியோருடன் இணைந்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    மேலும் அன்பரசு, சிவக்குமார் மற்றும் டிரைவர் பிரகாசம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேவஸ்தா னம் கிராம நிர்வாக அலுவலர் மீரா வாணி யம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரை சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 57) விவசாயி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வேலு என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரன் தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மாரியம்மன் கோவில் தெரு அருகே வந்தபோது வேலு, அவரது மனைவி அய்யம்மாள், மகன் விஜி மற்றும் உறவினர் கேசவேலு ஆகியோர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி (50) ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த ராமச்சந்திரன் மற்றும் வளர்மதி ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து ராமச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வேலு, அய்யம்மாள், விஜி மற்றும் கேசவேலு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடியரசிக்கும் அதே பகுதியை 2 பேருக்கும் முன்விரோதம் இருந்தது.
    • இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    நாகப்பட்டினம்;-

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவரது மனைவி கொடியரசி (வயது 28).

    இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (23), ரஞ்சித் (22) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தமும், ரஞ்சித்தும் சேர்ந்து கொடியரசி வீட்டின் அருகே சென்றுள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த கொடியரசியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கொடியரசி வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யப்பன் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49) விவசாயி.

    சம்பவத்தன்று அய்யப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை வழிமறித்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட 2-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, வன்கொ டுமை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டபட்ட அய்யப்னுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றத்துறை வக்கீல் அர்ச்சுனன் வாதாடினார்.

    • அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர் பாக குறித்து மனு கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மந்தி பாளையம் பகுதியில் புதி தாக அமைக்கப்பட்ட மனைப்பி ரிவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்ற னர். இவர்க ளுக்கு குடிநீர் தொட்டி அங்க ன்வாடி மையம் அமைப்ப தற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தினை அதே பகுதி யைச் சேர்ந்த பாவாடை என்ப வர் குடிசை வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து அதே பகுதி யைச் சேர்ந்த திருஞான மூர்த்தி மனைவி செந்தாமரை (வயது34) தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிர மிப்பு அகற்றுவது தொடர்பாக குறித்து மனு கொடுத்தார்.

    இதன் காரண மாக ஆத்திரமடைந்த பாவா டை மற்றும் அவரது ஆதர வாளர்க ளுடன் செந்தா மரை வீட்டிற்கு சென்று செந்தா மரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செந்தா மரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டு பின் மேல்சிகிச் சைக்கு கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்தாமரை புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பாவாடை, நாகராஜ், துரைராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
    • அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அடுத்த பொய்ய பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் சர்வேசன்( வயது 34) அவரது மனைவி விஜயா தேவி, உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தினை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த போலீசில் பணியாற்றி வரும் போலீசார் இருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்து பாதை அமைத்து அவரது நிலத்திற்கு செல்வதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    அதை மீறி அவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தங்கள் நிலப்பயிர்களை அழித்து பாதையை பயன்படுத்தி வருவதாகவும் இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    ×