என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுரண்டையில் பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
- பெண் காவலர்கள் ராஜேஸ்வரி, அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- தெருவிற்குள் வரக்கூடாது என்று கூறி பாண்டி என்ற பாண்டியராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சுரண்டை:
சுரண்டை வரகுணராமபுரம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி அருகே பெண் முதல்நிலை காவலர்கள் ராஜேஸ்வரி மற்றும் அன்பரசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாண்டி என்ற பாண்டியராஜ் (வயது34) என்பவர் அவர்களை வழிமறித்து இந்த தெருவிற்குள் நீங்கள் வரக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முதல்நிலை காவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் விசாரணை நடத்தி பாண்டி என்ற பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
Next Story






