search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலி"

    • சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). கூலி தொழிலாளி.
    • சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் ஏகாம்பரம் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சாரம் கூட்ரோடு அருகே சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் ஏகாம்பரம் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏகாம்பரம் உயிரிழந்தார். விபத்து குறித்து ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
    • ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது.

    திருப்பூர் :

    உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இது குறித்து தூய்மை பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) செயலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டுநர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் ரூ. 330 மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரூ. 300 வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை பணியில் தனியார் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போது, தினக்கூலியை நிர்ணயித்து வழங்க வேண்டும் என பட்டியல் வழங்கியுள்ளது. ஆனால் அது வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது. இதில் இ.எஸ்.ஐ., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 16.21. பணியாளர் பங்களிப்பு ரூ. 3.74 பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் தொழிலாளர் பி.எப்., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 64.87. பணியாளர் பங்களிப்பு ரூ. 59.88 பிடித்தம் செய்ய வேண்டும்.

    சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ. 12.88 இதில் ஒதுக்கப்படுகிறது. இதற்கு சேவைக்கட்டணம் 10 சதவீதம், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் பிடித்தம் போக தினமும், ரூ. 435.43 வழங்க வேண்டும். அதன்படி மாதம், 26 நாளுக்கு ஒருவருக்கு ரூ. 11,321.18 வழங்க வேண்டும். பிடித்தங்களுக்கு உரிய ஆவணம் வழங்க வேண்டும்.

    இதிலும் ஒப்பந்த தாரர் பங்களிப்புத் தொகை, பணியாளர்கள் கணக்கில் இருந்தே செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு பணியாளரிடம் இருந்தும் ஏறத்தாழ 3 ஆயிரம் வரை குறைகிறது.ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளப்படும் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் வழங்கும் கூலியை ஒப்பிடுகையில் திருப்பூரில் மிகவும் மோசமான நிலை உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் ரூ. 707 வழங்கி, பி.எப்., பிடித்தம் போக ரூ. 622 , திருச்சியில் 1,344 பேருக்கு தினக்கூலி ரூ. 575 , பிடித்தம் போக ரூ. 506 வழங்குகின்றனர்.கலெக்டர் நிர்ணயித்த அடிப்படையில் கூலி உயர்த்தி வழங்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்க வேண்டும். ஒப்பந்த முறை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்.
    • விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவருமான சீனிவாசராவ் 61 -வது நினைவு நாள் இன்று தஞ்சையில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் , இத்திட்டத்தை நகரங்கள், தினக் கூலி ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் பிரபாகர், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் துரை, ராமலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர மோகன், ஏ .ஐ .டி. யூ. சி மாநிலச் செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட தலைவர் சேவையா, அரசு போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், நுகர்பொருள் வாணிப கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் மருத்துவர் சுதந்திர பாரதி , கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் சீனிவாசராவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தாமணி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவியே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

    இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார். உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சாந்தாமணி பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். போரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா்.
    • பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளா் சம்மேளனத்தின்(சிஐடியூ) 8வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் மூா்த்தி வரவேற்றாா். சிஐடியூ. மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:- பஞ்சாலைகளில் பயிற்சியாளா்களின் குறைந்தபட்ச தினசரி கூலியை ரூ.493 ஆக அமல்படுத்த வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்க வேண்டும். ஏப்ரல் மாதம் பேசி முடிவு செய்யப்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளின் ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். கொரோனா காலத்தில் 2020 மாா்ச் மாதத்தில் நிறுத்தப்பட்ட தேசிய பஞ்சாலைகளை இயக்கி தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

    புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்கள் பணியாற்றும் ஆலைகளில் விசாகா பாலியல் புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். பஞ்சாலை தொழிலாளா்களுக்கு பென்சன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
    • அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் நேற்று தாரமங்கலம் வந்துவிட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.பவளத்தானுர் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அசோகன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அசோகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரிடம் அவர்களது உறவினர்கள் கூறும்போது,

    சம்பவத்தன்று இரவு வெங்கடேசன் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது உறவினர் மாரிமுத்து என்பவர் மது குடிப்பதற்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் மாரிமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார்.

    அதன் பின் வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கும் வந்த மாரிமுத்து மீண்டும் தரகுறைவாக பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் வெங்கடேஷ் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து மாரிமுத்துவை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

    ×