கூலி தொழிலாளி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார்.
கூலி தொழிலாளி தற்கொலை
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தாமணி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவியே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார். உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சாந்தாமணி பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். போரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com