search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மைப்பணியாளர்"

    • நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
    • காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தவர் பழனி. இவர் கடந்த 4-ந் தேதி இயற்கை எய்தினார். இவரது மனைவியும் காங்கயம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நகராட்சி 11-வது வார்டு பொதுமக்களின் உதவியோடு ரூ.35 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகர்மன்ற உறுப்பினர் கே.டி.அருண்குமார் பங்கேற்று, பழனியின் குடும்பத்தினருக்கு மேற்கண்ட தொகையை வழங்கினார். மேலும் நிதி உதவி வழங்கிய 11-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கள் கோரிக்கை மையம் சார்பில் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

    • தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.
    • இந்த நிகழ்ச்சியின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்புத்தொகை, ஆயுள் காப்பீடு ஆகிய தொகையை கடந்த சில மாதங்களாக வழங்காமல் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டு, முதற்கட்டமாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் வைப்புத்தொகையிலிருந்து பிடித்தம் செய்து, அதனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.

    • திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
    • ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது.

    திருப்பூர் :

    உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இது குறித்து தூய்மை பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) செயலாளர் ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி, குடிநீர் வழங்கல், வாகன ஓட்டுநர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஆகிய பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 1,500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் ரூ. 330 மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரூ. 300 வழங்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை பணியில் தனியார் நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போது, தினக்கூலியை நிர்ணயித்து வழங்க வேண்டும் என பட்டியல் வழங்கியுள்ளது. ஆனால் அது வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தப்படி பணியாளருக்கு ரூ. 662.97 மாநகராட்சி வழங்குகிறது. இதில் இ.எஸ்.ஐ., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 16.21. பணியாளர் பங்களிப்பு ரூ. 3.74 பிடித்தம் செய்ய வேண்டும். அதேபோல் தொழிலாளர் பி.எப்., ஒப்பந்ததாரர் பங்களிப்பு ரூ. 64.87. பணியாளர் பங்களிப்பு ரூ. 59.88 பிடித்தம் செய்ய வேண்டும்.

    சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ. 12.88 இதில் ஒதுக்கப்படுகிறது. இதற்கு சேவைக்கட்டணம் 10 சதவீதம், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் பிடித்தம் போக தினமும், ரூ. 435.43 வழங்க வேண்டும். அதன்படி மாதம், 26 நாளுக்கு ஒருவருக்கு ரூ. 11,321.18 வழங்க வேண்டும். பிடித்தங்களுக்கு உரிய ஆவணம் வழங்க வேண்டும்.

    இதிலும் ஒப்பந்த தாரர் பங்களிப்புத் தொகை, பணியாளர்கள் கணக்கில் இருந்தே செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு பணியாளரிடம் இருந்தும் ஏறத்தாழ 3 ஆயிரம் வரை குறைகிறது.ஒப்பந்த அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளப்படும் பிற மாநகராட்சி, நகராட்சிகளில் வழங்கும் கூலியை ஒப்பிடுகையில் திருப்பூரில் மிகவும் மோசமான நிலை உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் ரூ. 707 வழங்கி, பி.எப்., பிடித்தம் போக ரூ. 622 , திருச்சியில் 1,344 பேருக்கு தினக்கூலி ரூ. 575 , பிடித்தம் போக ரூ. 506 வழங்குகின்றனர்.கலெக்டர் நிர்ணயித்த அடிப்படையில் கூலி உயர்த்தி வழங்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்க வேண்டும். ஒப்பந்த முறை கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.

    ஈரோடு:

    கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). நகராட்சி தூய்மைப்பணியாளர். இவரது மனைவி மல்லிகா (49). இருவரும் கடந்த 25-ந் தேதி சொந்த ஊரானா ஈரோடு மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுவண்டிபாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.

    பின்னர் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முருகன் குளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மல்லிகா தன் கணவரை தேடி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×