search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cotton mill"

    • தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா கணியூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35).இவர் உடுமலை பகுதிக்கு உட்பட்ட சமத்துவபுரம் அருகே பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் இருந்து பரவிய தீ அங்கு கொட்டப்பட்டிருந்த பஞ்சுகளில் மீது விழுந்து தீ பற்றிக் கொண்டது. இதனை கண்ட தொழிலாளர்கள் அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    • நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென அந்த மில்லினுள் இருந்து கரும் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.
    • இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள், முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரடிவாவி முத்தாண்டிபாளையத்தில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமாக பஞ்சு மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு வந்த பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென அந்த மில்லினுள் இருந்து கரும் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வெளியில் தப்பி வந்துள்ளனர்.மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென மில் முழுவதும் பரவியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புதுறையினர் மூன்று தனியார் தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள், முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    • மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா்.
    • பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளா் சம்மேளனத்தின்(சிஐடியூ) 8வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் மூா்த்தி வரவேற்றாா். சிஐடியூ. மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

    மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:- பஞ்சாலைகளில் பயிற்சியாளா்களின் குறைந்தபட்ச தினசரி கூலியை ரூ.493 ஆக அமல்படுத்த வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்க வேண்டும். ஏப்ரல் மாதம் பேசி முடிவு செய்யப்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளின் ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். கொரோனா காலத்தில் 2020 மாா்ச் மாதத்தில் நிறுத்தப்பட்ட தேசிய பஞ்சாலைகளை இயக்கி தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

    புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்கள் பணியாற்றும் ஆலைகளில் விசாகா பாலியல் புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். பஞ்சாலை தொழிலாளா்களுக்கு பென்சன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னிமலை அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. #FireAccident
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, ஊத்துக்குளி ரோடு, காந்திநகரில் வசிப்பவர் குமரன் (வயது 36). இவர் சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர் ரோடு, அஞ்சநேயர் கோவில் கோவில் பின்புறம் ஜெ.ஜெ., நகரில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான குடோனில் குமரன் டெக்ஸ் என்ற பெயரில் பனியன் வேஸ்ட் பஞ்சில் இருந்து பாலிஸ்டர் கலந்து கலர் நூல் உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.

    இதில் 22 பேர் பணியாற்றி வருகின்றனர். காலை வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்ட போது தீடீர் என அங்கு கிடந்த பஞ்சு பகுதியில் புகை கிளம்பி உள்ளது. உடனடியாக பணியாளர்கள் வெளியேறி புகை வந்த பகுதியில் உள்ள தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது புகை மூட்டமாக மாறியது. அங்கு இருந்தவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து தீ அணைக்க அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனடியாக பெருந்துறைக்கு தகவல் கொடுத்து அங்கு இருந்தும் தீயணைப்பு வாகனம் வந்து குடோனில் இருபுறமும் ஒரு மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்த தீ விபத்தில் அங்கு இருந்த 15 டன் பஞ்சு, 60 பேல் நூல் கோன் மற்றும் பாலிஸ்டர் பஞ்சு எறிந்து நாசம் ஆகியது, இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும். மேலும் அங்கு இருந்த இயந்திரமும் தீயில் கருகியது. குடோனிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார், வருவாய் ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சென்னிமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஞ்சுமில் எந்திரம் ஓடிக் கொண்டிருந்ததால். அதன் உஷ்ணத்தில் கழிவு பஞ்சில் தீ பிடித்ததா? அல்லது வேறு எப்படி தீ பிடித்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  #FireAccident


    ×