மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள லட்சுமாயூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 40), கூலி தொழிலாளி. இவர் நேற்று தாரமங்கலம் வந்துவிட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.பவளத்தானுர் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் அசோகன் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்வதினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அசோகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com