search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம்"

    அரியலூரில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்

    • அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிப்பு

    அரியலூர், 

    அரியலூர் ராஜாளி நகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறை–தீர்க்–கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.

    எனவே மின் நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் செயற்பொறியாளர் அய்யனார் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான வட்டார அளவிலான குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழி, வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, கோமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அகோர மூர்த்தி, மக்கள் புறத்தொ டர்பு அலுவலர் மங்களதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி, 'கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார். கூட் டத்தில் வட்டார அளவிலான சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.

    • மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ. தி.மு.க. சார்பில் காரணைப் புதுச்சேரி, பெருமாட்டுநல்லூர் மற்றும் காயரம்பேடு ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    காயரம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம். எல்.ஏ. தன்சிங், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் காட்டூர் கன்னியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், காயரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திருவாக்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக பிரிவு செயலாளருமான செல்ல பாண்டியன் கலந்துகொண்டு பூத் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் 11 பூத் கமிட்டி நிர்வாகிகளும், பெரு மாட்டுநல்லூர் ஊராட்சியில் 6 பூத் கமிட்டி நிர்வாகிகளும், காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கிளை பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மதன்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் வேங்கடமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நிர்வாகிகள் ரங்கன், பொன்.தர்மராஜ், துளசிங்கம், கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
    • கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் செந்தில்குமார், நீலமேகம், சிவன ருட்செல்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை பணியா ளர்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலி பாட்டில்கள் சேகரிக்க நிர்பந்திக்க கூடாது. காலி பாட்டில்களை சேகரிக்க நிர்பந்திக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து வரும் 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இப்பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக பிற்பகல் 3 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    பின்னர் அங்கு நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ள பந்தலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜேஸ்குமார் எம்.பி. நாமக்கல்லுக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமையில் நடந்தது
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி குறித்து ஆலோசனை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமை தாங்கினார். குன்னூர் நகர செயலாளர் ராமசாமி வரவேற்றார்.

    கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான பாண்டி செல்வம், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் பிரேம்குமார், லாரன்ஸ், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, பேரூர் செயலாளர்கள் சஞ்சீவ், கிருஷ்ணகுமார், ரமேஷ், கண்ட்டோண்ட்மென்ட் நகரிய செயலாளர் மார்ட்டின், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ் குமார், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு.வாசிம் ராஜா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பில்லன், சதக்கத்துல்லா ,சீலா கேத்தரின், செல்வம், காளிதாஸ் மற்றும் குன்னூர் நகர நிர்வாகிகள் தாஸ், முருகேசன், சாந்தா சந்திரன், ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பழனிச்சாமி, சார்லி, கருணாநிதி மாவட்ட ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் ராம்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பத்மநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் தலைமை கழக பேச்சாளர் ஜாகீர், குன்னூர் நகர தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜெயராம் ராஜா, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பாக நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார்.

    • நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
    • நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்–போது அவர் கூறியதாவது:-

    வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில், இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்கும் இளைஞரணி பட்டியல் இறுதி செய்யப்பட்டதில், தமிழகத்திலேயே அதிக அளவில் பெயர் கொடுத்த முதல் 2 மாவட்டங்களில் ஒன்று நாமக்கல், மற்றொன்று சேலம்.

    இதையொட்டி வருகிற 18-ந் தேதி காலையில் சேலத்தில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டம் வருகை தருகிறார். அன்று மாலை 4 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார். இதில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது. இந்த திட்டங்களுக்கு விதித்திட்டவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.

    மேலும் எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், கபிலர்மலை, நாமக்கல் ஒன்றியங்களை இணைத்து ரூ.750 கோடி மதிப்–பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். நாமக்கல் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது என்றும், செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இளைஞர்களை பங்கேற்க செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • தீபாவளி பண்டிகை நிறைவடைந்ததை தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது
    • சென்னை, கோவைக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    திருச்சி,

    சென்னை, கோவை போன்ற மாநகரில் வேலை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருந்த திருச்சி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் இறுதியில் வந்தனர். பின்னர் விடுமுறை முடிந்து கொண்டாட்டம் நிறைவடைந்து நேற்று மாலை முதல் அந்த மக்கள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு புறப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து மக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததால் பஸ்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை முதல் சென்னைக்கு 162 சிறப்பு பஸ்களும், விழுப்புரம் மண்டலம் சார்பில் 60 பஸ்களும் இயக்கப்பட்டது. அதேபோன்று திருச்சியில் இருந்து கோவைக்கு 112 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடிய விடிய இயக்கப்பட்டது.

    அதேபோன்று திருச்சி மண்டலம் சார்பில் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுவாக தீபாவளி பண்டிகை நிறைவடையும்போது தென் மாவட்டங்களுக்கு சென்றிருக்கும் மக்கள் மீண்டும் வேலை நிமித்தமாக திருச்சி மற்றும் சென்னை போன்ற நகருக்கு புறப்பட்டு வருவார்கள்.

    ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக திருச்சியில் இருந்து நிறைய பேர் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரைக்கு பஸ்களுக்காக மக்கள் காத்திருந்தனர்.

    இதனால் திருச்சியில் இருந்து மதுரைக்கு 35 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டதாக திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, நேற்று சென்னைக்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லை. தாமதம் இல்லாமல் தங்கள் விரும்பிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல பஸ் வசதி செய்து தரப்பட்டது என்றார்.

    • அம்மாபேட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சாலியமங்களம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏவி.சூரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி .

    அம்மாபேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, முன்னாள் அமைச்சர் சிவபதி, கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, பேசும் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மாவட்ட பொருளாளர் ராம்குமார், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை தலைவர் திருமாவளவன், மெலட்டூர் நகர செயலர் சின்னதுரை, ஓன்றிய இணை செயலாளர் சுமத்ராமோகன் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில், நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம், பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    நாடு முழுவதும் நாளை (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இறுதிக்கட்டமாக இன்று புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.

    கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாகவே கோவையில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கடைவீதி களில் திரண்டு புத்தாடைகளை வாங்கினர். காலை முதலே கடைகளில் மக்கள் குவியத் தொடங்கினர்.

    இதனால் ஜவுளிக்கடை கள், இனிப்பு, பட்டாசு, நகைக்கடைகள் முன் கூட்டியே திறக்கப்பட்டு விற்பனையை தொடங்கின. ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கு அவர்கள் ஆடைகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

    இதனால் கடைவீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளித்தது. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டு பொதுமக்களிடம் தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்து கொள்ள அறிவுறுத்துவதுடன், கவனமாக இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் போலீசார் சாதாரண உடை அணிந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்கும் என்பதால் அனைத்து கடை வீதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா மூலம் கடைவீதிகள் கண்காணிக்கப்படுகின்றன.

    இதுதவிர கடைவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். கோவையில் தீபாவளி பண்டிகையொ ட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடைவீதிகளில் ஜவுளி எடுக்க மக்கள் குவிந்துள்ளதால், மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

    ×