search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்வீரர்கள்"

    • நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இப்பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக பிற்பகல் 3 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    பின்னர் அங்கு நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ள பந்தலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜேஸ்குமார் எம்.பி. நாமக்கல்லுக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அம்மாபேட்டையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சாலியமங்களம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஏவி.சூரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி .

    அம்மாபேரவை மாவட்ட செயலாளர் துரை சண்முகபிரபு, முன்னாள் அமைச்சர் சிவபதி, கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ, பேசும் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் நாம் கைபற்ற தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.

    மாவட்ட பொருளாளர் ராம்குமார், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை தலைவர் திருமாவளவன், மெலட்டூர் நகர செயலர் சின்னதுரை, ஓன்றிய இணை செயலாளர் சுமத்ராமோகன் உள்பட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • அருள்பிரபின் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராஜா வரவேற்றார்.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். குமரி மாவட்டம் வருகை தரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது. அழகியமண்டபத்தில் வைத்து நாளை (28-ந்தேதி) நடைபெறும் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் வெள்ளை சீருடையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, குளச்சல் சபீன், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அருள்பிரபின் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் அரங்கில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலேசியா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக நிர்வாக திறமை உள்ள ஒருவரை அறிவிக்க வேண்டும், வரும் பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக பணியாற்றி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் நல்ல பல திட்டங்களை பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் கவுன்சிலர் நிஜாம் அலிகான் மற்றும் சேவாதளம் மாநில தலைவர் பரமக்குடி அஜீஸ் ஆகியோர் பேசிய போது, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மிகச் சிறப்பாக காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார். ஆனால் தற்போது 5 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வேதனையாக உள்ளது, வரும் காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், சேவா தல தலைவர் அப்துல் அஜீஸ், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, நகர் துணைத் தலைவர் ஜெயக்குமார், மகளிர் அணி தலைவர் ராமலட்சுமி, பெமிலா விஜயகுமார், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டியன், ஜோதிபாலன் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், ராணுவ பிரிவு தலைவர் கோபால், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×