search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம் அருவி"

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
    • விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி, களக்காடு, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 9 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் 3 மணிக்கு பிறகு புதிய பஸ் நிலையம், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. பாளையில் 1.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் மாநகர பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 34 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை கொட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை எஸ்டேட்டுகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    தென்காசி மாவட்டத்திலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பழைய குற்றாலம் அருவியில் நேற்றிரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை மழை குறைந்து பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் தணிந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 7.5 மில்லிமீட்டர் மழை கொட்டியது. செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதிகளான ராமநதி, கருப்பா நதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு பரவலாக மழை பெய்தது. மேலும் ஆவுடையானூர் பகுதியில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்த பசுமாடு மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தது.

    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
    • கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் விளைவாக பிரதான அணையான 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 19 அடி உயர்ந்த நிலையில், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 94.40 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 106.17 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,909 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 51.60 அடியாக உள்ளது. அணைக்கு 340 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 3.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 1.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த அணை முழுகொள்ளளவான 36 அடியை எட்டி 2 வாரங்களுக்கும் மேலாக உபரிநீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படு கிறது. குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையில் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து இன்று காலை 116 அடியை எட்டியது. அந்த அணை நிரம்ப இன்னும் 16 அடி நீரே தேவைப்படுகிறது.

    கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது. ராமநதி நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 64 அடியாக உள்ளது. கருப்பாநதியில் 44.62 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது.

    குற்றாலம் அருவி பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது. அங்கு மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தொடர் விடுமுறையையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 2 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை விட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்ததால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 700 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2906 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 70.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 73.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 82 அடியாக இருந்த நிலையில், மேலும் 5 அடி உயர்ந்து இன்று 87.20 அடியாக நீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 954.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணையில் 45.50 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு 63 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கொடுமுடியாறு அணை பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 19 அடியாக உள்ளது. அணை பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் 22 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணையில் 12.50 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருக்கிறது. குறிப்பாக ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் 48 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 41 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 30 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளை பொறுத்தவரை களக்காடு, ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரத்தில் 9.60 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும், களக்காட்டில் 2.80 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 2.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது. தென்காசியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை ராமநதி அணை பகுதியில் 8.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. குண்டாறு அணை பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அணை நிரம்பி 2 வாரம் ஆகும் நிலையில், அணைக்கு வரும் 18 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 98 அடியாக இருந்த நிலையில், தொடர்மழையால் நீர் இருப்பு மேலும் 1 அடி உயர்ந்து 99 அடியானது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குறிப்பாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் அவ்வப்போது தண்ணீர் அதிகரித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் ஆர்ப்பரிப்பு குறைந்தவுடன் மீண்டும் அவர்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தொடர் விடுமுறையையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. கூட்டம் அதிகரித்து வருவதால், அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு உள்ளனர்.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 3.20 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.80 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 70 அடியும், சேர்வலாறு அணையில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 722 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 45.35 அடியாக உள்ளது. இதே போல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பை, வி.கே.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சேரன்மகாதேவியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

    நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் 19 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 15 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. ஏற்கனவே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு உள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பு 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பிய நிலையில் தொடர்ந்து அந்த பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது . இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 11.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 152 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 98 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் என்னும் ஓரிரு நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கருப்பாநதி உள்ளிட்ட பகுதிகளில் 2.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் லேசான சாரல் பெய்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியின் பிடியில் இருந்த பகுதிகளில் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 67.60 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 1 அடி உயர்ந்து 68.40 அடியானது. இதேபோல் நேற்று 82.41 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 83.07 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 826 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. இந்த அணை பகுதியில் நேற்று 6.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 8 மில்லிமீட்டரும், ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. புறநகர் பகுதியில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மூலக்கரைப்பட்டியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகர பகுதியில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. அதிகபட்சமாக குண்டாறில் 2.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    குற்றாலம் ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளிலும் அதிக அளவில் தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் இன்று காலை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரத்தில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை பெய்தது. வேடநத்தம், வைப்பார், எட்டயபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
    • சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலத்தில் முக்கிய அருவிகளாக விளங்கி வரும் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் காலை முதல் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதாலும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக இன்று காலை முதலே வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வரிசையில் நின்று குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
    • குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் மேகமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகம் காணப்பட்டது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மெயின் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    குளிக்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகளை வரிசையில் நின்று குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் மேகமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    • குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • சுரண்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளில் தற்பொழுது பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தொடர்ந்து சீரான அளவில் தண்ணீர் கொட்டி வருவதால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மட்டுமின்றி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்ததன் காரணமாக தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேலும் குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் அதில் குளிப்பதற்காக கடந்த நாட்களை விட இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்பட்டது.

    • குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் அளவில் வெயில் வாட்டிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது தொடர் சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்றைய காலை நிலவரப்படி ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    பழைய குற்றால அருவிக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க எவ்வித தடையும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடுமையான வெயிலின் காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இந்தத் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.
    • சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டி காணப்படும்.

    குற்றாலத்தில் அமைந்துள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி அடர்ந்த வனப்பகுதியின் இடையே வரும் அருவி நீரானது வனப்பகுதியில் இருக்கும் மூலிகை செடிகள் மரங்களை கடந்து வருவதால் மூலிகை நிறைந்த குறிப்பாக பிணிகளை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாக குற்றால அருவிகள் பார்க்கப்பட்டு வருகிறது.

    இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்த குளியல் போடுவர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.

    ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு போதிய அளவில் பெய்யவில்லை. சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த 2 மாதங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து கண்ணாமூச்சி காட்டுகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் போதிய நீரோட்டம் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் கடந்த ஆண்டு குற்றால அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது பல மடங்கு குறைந்தது.

    குற்றாலத்தில் முழுமையாக சீசன் இல்லாததால் சீசனை எதிர்பார்த்து அமைக்கப்பட்டு இருந்த வியாபார நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வாடகை வாகனங்கள் என சுற்றுலா துறையை நம்பியே லட்சக்கணக்கான பணம் முதலீடு செய்தவர்கள் பலரும் போதிய வருமானமின்றி புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மலைவாசல் தளங்களில் கிடைக்கும் பழ வகைகள் அனைத்தையும் சீசன் காலங்களில் குற்றாலம் வரும் பயணிகளின் கண் முன்னே காண்பித்து அவர்களை ருசிக்க வைக்க நினைத்த வியாபாரிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது.

    சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    • மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • சாரல் மழை நீடித்தால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை என்பதால் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்தனர்.

    மேலும் வெளியூர்களில் இருந்தும் குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்தனர்.

    இன்று காலையில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் வந்து குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவி கரைகளை ஒட்டி அமைந்துள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை வாங்கி ருசித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் காலை முதல் வெயில் மற்றும் காற்று வீசி வருகிறது. சாரல் மழை நீடித்தால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர் சாரல் மழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×