search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர்"

    • கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 86 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 63 ஆயிரத்து 237 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ரவிச்சந்தி ரன் வழங்கி பேசியதாவது:-

    மகளிர் உரிமைத்தொகை

    தென்காசி மாவட்டத்தில் மகளிர் உதவித்தொகை கோரி 3லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அதை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது அதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேரின் மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது தென்காசி மாவட்டத்தை பொருத்த வரை 8 ஆயிரம் ஏ.டி.எம். அட்டைகள் வரப் பெற்றுள்ளன. தென்காசி ஐ.சி.ஐ. பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பயனா ளிகளுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்குகிறார்.

    டெங்கு காய்ச்சல்

    ஒவ்வொரு மாதமும் 15 -ந்தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இத்தொகை வரவு வைக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., அனைத்து துறை அதிகாரி கள் மற்றும் ஒன்றிய சேர்மன் சுப்பம்மாள் பால் ராஜ், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றிய கவுன்சிலர் பகவதியப்பன், கொடிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் உடையார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக் களை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

    • மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது.
    • கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., மாணவர்களை அழைத்து அவர்கள் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பண்பொழி சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. அதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., கல்லூரி மாணவர்களை அழைத்து மாணவர்களின் கைகளால் அடிக்கல்லை நாட்டினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, நகராட்சி உதவி பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப பிரிவு உதவியாளர் சுரேஷ், அரசு ஒப்பந்ததாரர் வேல் துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சிவன்மாரி ராணுவம் மற்றும் காவலர் தேர்வு பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200 பயிற்சி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் கடையநல்லூர் மங்களாபுரத்தில் சிவன்மாரி ராணுவம் மற்றும் காவலர் தேர்வு பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் மயில் தலைமை தாங்கினார். ராணுவ பயிற்சி மைய நிறுவனர் சிவன் மாரி வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப் செயலாளர் இத்ரீஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் டாக்டர் மீரான்மைதீன், முகமது கானித், முகமது இஸ்மாயில், மைதீன், கருப்பசாமி மற்றும் 200 பயிற்சி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 100 மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு சாக்கு மூட்டையை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
    • சமீபத்தில் மாயமான இளம் பெண்களின் பட்டியலை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு ஒன்று உள்ளது.

    இளம்பெண் கொலை

    இந்த கிணற்றில், ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சாக்கு மூட்டையை கயிறு கட்டி மேலே எடுத்து இளம்பெண் உடலை மீட்டனர்.

    கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வலது கையில் எம்.வி. என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் 'ஹார்டின்' படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு சாக்கு மூட்டையை ஏற்றி வந்தது தெரிய வந்தது. எனவே அவர்கள் தான் அந்த பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

    2 தனிப்படை

    இதுதொடர்பாக விசாரணை நடத்து வதற்காக டி.எஸ்.பி. அசோக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி, கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்ப ட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் மாயமான இளம் பெண்களின் பட்டியலை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அழுகிய நிலையில் காணப்படும் அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் கையில் உள்ள குறியீடு ஆகியவற்றை பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
    • மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி தீ பற்றி எரிவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் கடையநல்லூரில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள கிருஷ்ணா புரம் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்து குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்குள்ள மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து காய்ந்து கிடக்கின்றது.

    காற்றின் வேகத்தால் அந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. தற்போதும் அதேபோல் மலையில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பரவி வருகிறது.

    அதனை அணைக்கும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.
    • வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு மருத்துவர் அனிதாபாலின் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் மீனாட்சி, குழந்தைகள் நல மருத்துவர்கள் முரளிதரன், ராஜ்குமார், பொதுநல அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணகுமார் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர், செவிலியர்கள், மருத்துவ மனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பா லின் அவசியம் குறித்து பேசினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவமனை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சந்தேகங்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்குமார் விளக்க மளித்தார். மருத்துவர் மீனாட்சி நன்றி கூறினார்.

    • முத்தையாசாமி தனது தோட்டத்தில் 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.
    • கோழிகளை திருடியது கார்த்தி, சதீஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த பார்வதியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்தையாசாமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அச்சன்புதூரில் உள்ளது. அங்கு 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த நாட்டுக்கோழிகளை காணவில்லை. அவை அனைத்தும் திருடப்பட்டிரு ப்பதை அறிந்த முத்தையாசாமி, அச்சன்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில், கோழிகளை திருடியது அதே ஊரில் வடகாசி அம்மன்கோவில் தெருவில் வசிக்கும் கார்த்தி(வயது 19), அவரது நண்பர் சதீஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து 10 கோழிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோழிகளை விற்ற பணம் ரூ.14 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் 'திடீர்' ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், கைதிகள் அறை, கணினி அறை, வழக்குகளில் உள்ள இருசக்கர வாக னங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உடையார் சாமி, தலைமை காவலர்கள் உள்பட போலீ சார் உடனிருந்தனர்.

    • கிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் முடிவு பெற்றது.
    • பேரணியில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் மக்கா அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    அறக்கட்டளை நிறுவனத்த லைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கி னார். அறக்கட்டளை செய லாளர் சம்சுதீன், அறக்கட்ட ளை பொறுப்பா ளர்கள் ஹீரா, காஜாமைதீன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு பேரணியை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக வார்டு கவுன்சிலர்கள் கண்ணன் என்ற பாலசுப்பிரமணியன், சுபா ராஜேந்திர பிரசாத், பூங்கோதை கருப்பையா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் முடிவு பெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் போதை தடுப்பு விழிப்பு ணர்வு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷேக் மைதீன், யாசின், பைசல் அமீர்கான் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.முடிவில் அறக்க ட்டளை பொறு ப்பாளர் மீராசா இப்ராஹிம் நன்றி கூறினார்.

    • விழாவில் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் தாளாளர் பட்டத்து சாஹிப் ஹஸன்மக்தூம் ஆலிம் சாகிப் தலைமையில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹிமான் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் தாளாளருடன் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடந்து 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்ற உறுப்பினர்கள் முகமதுஅலி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் நிலோபர் அப்பாஸ், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முகமதுபுகாரி, முன்னாள் பட்டதாரி ஆசிரியர் உதுமான், தி.மு.க. நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாஹிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காளிதாஸ் தனது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் தாலுகா திரிகூடபுரம் பஞ்சாயத்து காந்தி நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் பஞ்சாயத்தின் 9-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

    வாக்குவாதம்

    சம்பவத்தன்று இவரும், இவரது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 38) அவருடைய வீட்டின் முன்பு நீண்ட காலமாக எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு திடீரென காணாமல் போய் விட்டதாகவும், இதனை சரி செய்யுமாறும் காளிதாசிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. உடனே வெள்ளத்துரை வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து காளிதாஸ், அவரது சகோதரர் காளிமுத்து மற்றும் உறவினர் கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி கிழித்துள்ளார். இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கைது

    இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரையை கைது செய்தனர். மேலும் வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் காளிதாஸ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வி தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வர இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
    • பின்னால் நின்ற நபர் ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தர கூறி உள்ளார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமம் கண்ணப்பர் தெருவில் வசிப்பவர் செல்வி. இவர் தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வருவதற்காக புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஏ.டி.எம் சென்று வருமாறு தனது அண்ணன் மகன் இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.

    அங்கு சென்று அவர் பணம் எடுத்தபோது, அவரது பின்னால் நின்ற நபர் அவரது கார்டு ரகசிய எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாதது போல ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி உள்ளார். அப்போது 2 பேரின் கார்டு களும் தவறி கீழே விழுந்ததும், மர்ம நபர் இசக்கிதுரையின் கார்டை மாற்றி எடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    சிறிது நேரத்தில் அந்த கார்டில் இருந்து 2 முறை தலா ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கி துரை தன்னிடம் இருந்த கார்டை எடுத்து பார்த்தபோது அது ஈரோட்டை சேர்ந்த நபரின் கார்டு என்பது தெரியவந்தது. உடனே வங்கிக்கு சென்று அங்கிருந்தவர்கள் மூலம் கார்டு உரிமையாளருக்கு போன் செய்தபோது, மர்ம நபர் அந்த கார்டின் உரிமையாளரிடம் இருந்து இதேபோல் கார்டை ஏமாற்றி பறித்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த நபர் குறித்து கடையநல்லூர் போலீசில் இசக்கிதுரை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். கடையநல்லூர் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×