கடையநல்லூர் அரசு மருத்துமனையில் தாய்பால் வாரவிழா

தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடையநல்லூர் அரசு மருத்துமனையில் தாய்பால் வாரவிழா
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு மருத்துவர் அனிதாபாலின் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் மீனாட்சி, குழந்தைகள் நல மருத்துவர்கள் முரளிதரன், ராஜ்குமார், பொதுநல அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணகுமார் மற்றும் செவிலிய கண்காணிப்பாளர், செவிலியர்கள், மருத்துவ மனை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை மருத்துவர் அனிதாபாலின் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தாய்ப்பா லின் அவசியம் குறித்து பேசினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவமனை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் சந்தேகங்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்குமார் விளக்க மளித்தார். மருத்துவர் மீனாட்சி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com