கடையநல்லூர் அருகே நாட்டுக்கோழிகளை திருடி விற்ற 2 வாலிபர்கள் கைது

முத்தையாசாமி தனது தோட்டத்தில் 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.கோழிகளை திருடியது கார்த்தி, சதீஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது
கடையநல்லூர் அருகே நாட்டுக்கோழிகளை திருடி விற்ற 2 வாலிபர்கள் கைது
Published on

நெல்லை:

கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த பார்வதியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்தையாசாமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அச்சன்புதூரில் உள்ளது. அங்கு 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.

சம்பவத்தன்று காலை அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த நாட்டுக்கோழிகளை காணவில்லை. அவை அனைத்தும் திருடப்பட்டிரு ப்பதை அறிந்த முத்தையாசாமி, அச்சன்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், கோழிகளை திருடியது அதே ஊரில் வடகாசி அம்மன்கோவில் தெருவில் வசிக்கும் கார்த்தி(வயது 19), அவரது நண்பர் சதீஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து 10 கோழிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோழிகளை விற்ற பணம் ரூ.14 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com