search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருவிளக்கு"

    • தெருவிளக்கு, சாலை-கழிவுநீர் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சாயல்குடி

    சாயல்குடி பேரூராட்சி யில் கவுன்சில் கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலை வர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். பேரூராட்சி கூட்டத்தில் துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், மகளிர் உரிமைத் தொகை வழங்கிய முதல்- அமைச்ச ருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பேரூராட்சி தலைவர் மாரி யப்பன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சாயல்குடி பகுதியில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடை களை பிடித்து உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பேரூராட்சி உறுப்பினர் காமராஜ், சாயல்குடி பேரூ ராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் புதிய மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரணி பகுதியில் நடைபாதை அமைக்க விரைந்து பணிகள் மேற்கொ ள்ள வேண்டும் என பேசினார்.

    துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட வி.வி. ஆர் .நகர் பேருந்து நிறுத்தத்தில் விபத்து ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் மாணிக்கவேல், சீனி ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.

    பேரூராட்சி உறுப்பினர் அழகர் வேல் பாண்டியன், 8-வது வார்டில் 6-வது தெருவில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் இந்திராணி, 12-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி உறுப்பினர் கோவிந்தன், சாயல்குடி பேரூராட்சி 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். இதேபோல் பேரூராட்சி உறுப்பினர்கள் மாணிக்க வள்ளி பால் பாண்டியன், ஆபிதா அனிபா அண்ணா, இந்திரா செல்லத்துரை , சண்முகத் தாய் சுப்பிரமணியன், அமுதா, குமரையா உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார்.

    • சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
    • சர்வீஸ் சாலையிலும் மின்விளக்குகள் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தில் இருந்து ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வரை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு சாலையின் ஓரங்களில் தெரு மின்விளக்குகள் உள்ளன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த தெருவிளக்குகள் எரியாமல் தேசிய நெடுஞ்சாலை இருட்டாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மின்விளக்குள் எரியாமல் உள்ளதால் வாகன விபத்துக்கள் அதிகரித்து உள்ளதாக கனரக வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட வாகன ஓட்டிகள், பொது மக்கள் கூறும்போது, மின்விளக்குகள் எரியாததால் நல்லூர் டோல்கேட் அருகில் தினமும் விபத்து ஏற்படுவதாகவும், சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைப்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் சர்வீஸ் சாலையிலும் மின்விளக்குகள் இல்லை என்று குற்றம் சாட்டினர்.இதில் ஊராட்சி தலைவர்கள், ஜெகநாதபுரம் மணிகண்டன், ஆத்தூர் சற்குணம், புதிய எருமை வெட்டிபாளையம் கோதண்டம், பழைய எருமை வெட்டிபாளையம் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து உதவி கமிஷனர் மலைச்சாமி கூறும்போது, இரண்டு வாரங்களில் நெடுஞ்சாலை துறை, டோல்கேட் நிர்வாகம், போலீசாருடன் இணைந்து அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • காளிதாஸ் தனது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் தாலுகா திரிகூடபுரம் பஞ்சாயத்து காந்தி நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் பஞ்சாயத்தின் 9-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

    வாக்குவாதம்

    சம்பவத்தன்று இவரும், இவரது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 38) அவருடைய வீட்டின் முன்பு நீண்ட காலமாக எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு திடீரென காணாமல் போய் விட்டதாகவும், இதனை சரி செய்யுமாறும் காளிதாசிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. உடனே வெள்ளத்துரை வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து காளிதாஸ், அவரது சகோதரர் காளிமுத்து மற்றும் உறவினர் கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி கிழித்துள்ளார். இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கைது

    இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரையை கைது செய்தனர். மேலும் வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் காளிதாஸ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வசந்திரமேஷ் 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது என கூறினார்.
    • குடி நீர், தெருவிளக்கு பிரச்சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும் என கூறினார்.


    பண்ருட்டி நகர் மன்ற கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணைத் தலைவர் சிவா,கமிஷனர்மகேஸ்வரிமுன்னிலைவகித்தனர். என்ஜினீயர் பவுல் செல்வம்,துப்புரவு அலுவலர் முருகேசன், மேலாளர் அசோக்குமார், மற்றும்கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட அஜெண்டாவை உதவியாளர்சோமசுந்தரம் படித்தார்.

    கூட்டத்தில் நடந்தவிவாதம் வருமாறு:- கிருஷ்ணராஜ் (வாழ்வுரிமை கட்சி): வார்டு பகுதியில் குடிநீர் இணைப்புகள் உடனே வழங்க வேண் டும். பொதுமக்கள் கடு மையாக அவதிப்பட்டு வருகின்றனர். வசந்திரமேஷ் (தி.மு.க): 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்குகள் எரியவில்லை. மோகன் (அ.தி.மு.க): எனது வார்டில் உள்ள குறைகளைசரி செய்யக்கோரி கொடுத்த மனு க்கள் என்ன ஆனது.ஆதி திராவிட மக்கள் வசிக்கும் நந்தனார் காலணியில் 3சாலைகள் உள்ளன. அதில் ஒன்று மண்சாலையாக உள்ளது. ஒன்று நடக்க கூட முடியாத அளவுக்கு உள்ளது உடனே சரி செய்ய வேண்டும் .

    ராமலிங்கம் (தி.மு.க.): கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்றுபண்ருட்டி நகரில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட பன்றி களைபிடித்து வனப்பகுதியில் விட்டதற்கு நன்றி. சோழன் (தி.மு.க): 50 வருடமாகவே ஓடாத தேரை ஓடவைத்ததற்கும் வார்டு பகுதியில்வளர்ச்சி பணிகளை உடனே நிறைவேற்றி தந்தமைக்கு நன்றியையும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணையாளர் மகேஷ்வரி: ஆதிதிராவிட மக்கள் அதிகம்வசிக்கும் பகுதியில் நமக்கு நாமேதிட்டத்தின் மூலம் பணிகள் செய்ய 5-ல் ஒரு பங்குஅதாவது திட்ட மதிப்பீடு ஐந்து லட்சம் என்றால் ஒரு லட்சம் செலுத்தினால் போதும் . ராமதாஸ்(சுயே): ரயில்வே காலணியில் சாலை, தெரு விளக்குகால்வாய் அமைத்து தர வேண்டும். 

    ஜரின்னிசா (தி.மு.க) தண்டு பாளையத்தில் கழிவு நீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலை எல்லாம் வழிந்து சுகாதாரகேடுஏற்படுகிறது. ஏ.கே.எஸ். மண்டபம் பின் புறம் உள்ள தெருக்களில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தெரு மின் விளக்கு அமைத்து தரவேண்டும்

    தலைவர் ராஜேந்திரன்: ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை .பண்ருட்டி நகராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வாடுகளிலும் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 33 வார்டுகளில் பொதுமக்கள் நலன் கருதி வளர்ச்சி பணிகள் செய்யப்படும். நாய்கள் பிடிக்கப்படும். சமுதாய கூடம் பணி டெண்டர் விடப்பட்டுள்ளது. குடி நீர், தெருவிளக்கு பிரச் சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும். ெரயில்வே காலணியில் கல்வெட்டு அமைத்து சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் . பண்ருட்டி நகராட்சியில் முதன்மை நகராட்சியாகபாடுபட்டுவருகின்றேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • மதுரை தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்க்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல ங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டலம் 4-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமை தாங்குகிறார்கள். இதில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜர் புரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    ×