search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகள்"

    • பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்டிஸ் .

    நாமக்கல்:

    லாரி தொழில் மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. இதனால் தினமும் நாமக்கல்லுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    நாமக்கல் பஸ் நிலையத்தி லிருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, கோவை, ஓசூர், சேலம் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனை போலீசாரும், அதிகாரிகளும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.

    இதனால் பயணிகள் தினமும் தற்போது அடிக்கும் வெயிலில் தவித்து வருகி றார்கள். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பஸ் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
    • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

     உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

    அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல ஆண்டுகள் பழமையான கடைகள் என்பதால் முழுமையாக இடிக்கப்பட்டது.
    • எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள வல்லம் கடைவீதியில் மேலப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் வளாகத்தை சுற்றி பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் 14 கடைகள் உள்ளன. இதில் ஹோட்டல், எலக்ட்ரிக்கல், பேன்ஸி கடைகள் இருந்து வந்தது.

    தற்போது வல்லம்-திருச்சி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக வல்லம் பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி வழியாக சுமார் 2 கி.மீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    அதே போல் வல்லம் கடைவீதி பள்ளிவாசல் எதிரே அமைந்துள்ள கடைகளில் முன்பகுதி இடிக்கப்பட்டது. பல ஆண்டுகள் பழமையான கடைகள் என்பதால் அதனை முழுமையாக இடிக்கப்பட்டது.

    இதில் இரண்டு கடைகளில் வாடகைக்கு இருந்த வாடகைதாரர்கள் இருவர் கடை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

    ஆகையால அந்த இரண்டு கடைகள் மட்டும் பாதி நிலையில் இடிக்கப்பட்டு நிலேயிலே உள்ளன. அந்த கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் கடைக்கு வெளியே சிறிய கதவுகள் அமைத்து பூட்டு போட்டு வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பூட்டப்பட்டு இருந்த ஒரு ஓட்டல் கடையின் உள்ளே திடீரென தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சையில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    இது குறித்து போலீசார், கடையில் தீ பற்றியதற்கான காரணம் என்ன? தீயை மர்ம நபர்கள் யாரேனும் பற்ற வைத்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.
    • விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.

    இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபா

    னக்கடைகள் மற்றும் பார்களை 5-ந் தேதி முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும்

    பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை

    செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கடைகள், உணவு நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமானகுடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலா ளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று, அதனை தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

    மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்டவிதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 38 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவு நிறுவனங்கள், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி உத்தரவின்பேரில் கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே இடத்தில் அனுமதியின்றி சிலர் கடைகள் அமைத்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    41 கடைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு இருப்பதாக வியாபாரிகள் குற்றசாட்டினர். எந்த அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டன என்பது குறித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாமன்ற கூட்டம் ஒப்புதல் படியே கடைகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை நடைமுறை படுத்த மாட்டோம்

    சுவாமிமலை:

    அனைத்து வணிகர்களும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து மாநில தலைவர் ஏ.எம். விக்ரமராஜா அறிவுறுத்தலின்படி சட்டையில் பேட்ச் அணிந்து மற்றும் கடைக்கு முன் போஸ்டர் ஒட்டியும் தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முதல் கட்ட ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜாவை அழைத்து பேசி டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை குறித்து முறைப்படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரை அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும், சிறு குறு வணிகர்களையும் எவ்வகையிலும் பாதிக்க மாட்டார்கள் எனவும் உறுதி அளித்துள்ளார்கள்.

    இதற்காக டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர்முகமது சுகைல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் ரகுராமன், கௌரவ தலைவர்அசோகன், முதன்மை துணைத் தலைவர்கள் ஜமால்முகமது, பாரதி, பாலமுருகன், ஹாஜாமைதீன் , துணைத் தலைவர்கள் சரவணன், செல்வசேகர், ஜாகிர் உசேன், கணேசன்மூர்த்தி, துணைச் செயலாளர்கள், ரவிச்சந்திரன், செல்வகுமார், அக்பர் அலி, இணைச் செயலாளர்கள், பிரபாகரன்,பாலமுருகன், கரிகாலன், ஒருங்கிணை ப்பாளர்,சந்திரசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் குமார், இணை ஒருங்கிணைப்பாளர், கருணாகரன், செய்தி தொடர்பாளர், லுக்மான் உமர், ஆகியோர் சார்பாகவும் மற்றும் வணிக அனைத்து உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரமைப்பின் மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    • கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
    • சாவிகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து காமராஜர் காய்கனி மார்க்கெட் தற்காலிகமாக குழந்தையேசு கோவில் அருகே உள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.20.26 கோடி செலவில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. அதன்படி 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. இருப்பினும் பல்வேறு இடையூறுகள் காரணமாக கடைகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் கலந்து பேசி சுமூக தீர்வு ஏற்பட்டது.இதையடுத்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. சாவிகள் ஒப்படைகக்ப்பட்ட தையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் மார்கழி மாதம் என்பதால் தயக்கம் காட்டினர்.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதியான ஆங்கில புத்தாண்டு தினம் முதல் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என வியாபாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகளில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி குழந்தையேசு கோவில் அருகில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் செயல்பட்ட காய்கனி மார்க்கெட் வருகிற 1-ந்தேதி முதல் அரண்மனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் செயல்படும் என காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக நல சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்து.
    • தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது.

    இந்த கோவிலின் அருகே உள்ள நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையோரம் சிலர் பூக்கடைகள் அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இதனால் இந்த சாலையில் செல்லும் ஏராளமான வாகனங்களுக்கும், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இது இடையூராக உள்ளது.

    தார்சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இந்த கடைகள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கடை முன்பு நின்று பூஜை பொருட்களை வாங்கி செல்வதால் விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது.

    எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரை கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கும், நெடுஞ்சாலைதுறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேரூராட்சி நிர்வாகம் “திடீர்” நடவடிக்கை
    • கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது.

    இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகள் அமைக்கப்பட்டுஉள்ளன.இதற்கிடையில் கன்னியா குமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந்தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண் டானா சந்திப்பு, போன்ற பகுதி களில் நடைபாதை களை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி மற்றும் உருட்டு வண்டி கடைகளை பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக அகற்றினார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    • தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ள ஏராளமான கடைகள் உள்ளன.
    • நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன.

    திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    இதே போல் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

    பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

    இதேபோல் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தீபாவளிக்கு பூக்களின் தேவை அதிகம் என்பதால் அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.

    அதன்படி நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.

    இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.

    இதேப்போல் முல்லைப் பூ விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் கனகாம்பரம் ரூ.1500, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.200-க்கும் விற்பனையாகின.

    இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது:-

    தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது. 3 கடைகள் மீதும் மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன்படி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல் மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்படும், என்றனர்.

    ×