என் மலர்
நீங்கள் தேடியது "Labor Department"
- ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
மதுரை
சென்னை முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆனையர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படியும், சென்னை சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி உத்தரவின்ப டியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சட்டமுறை எடையளவுச் சட்டம், எடையளவுகள் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைக் கடைகள், இனிப்புக் கடைகள், மற்றும் நிறுவனங்கள், பட்டாசுக் கடைகளில் இந்த சோதனை நடந்தது.
இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களிலும், சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் 15 நிறுவனங்க ளிலும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்ட நிறுவனங்களின்மீது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
மேலும் பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் உரிய காணப்படாத 9 பட்டாகக் கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2011-ம் வருட சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின்கீழ் பொட்டலப் பொருட்களின் விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்து வரும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிக நிறுவனங்களின் மீது முதலாவதாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், 2-வது முறையாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு நீதிமன்ற நடவடிக்கை தொடரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
தராசுகள் மற்றும் எடையளவுகளை பரிசீலனை செய்து முத்திரை ஆய்வர்களிடம் உரிய காலத்தின் முத்திரையிட்ட பின்பே வியாபாரத்திற்கு பயன்படுத்தவேண்டும்.
முத்திரையில்லாமல் எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு முதல்முறையாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.
- ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
- காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கிராமத்திற்கு உட்பட்ட மேல் பாதி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 47). மீன்பிடி தொழிலாளி. சங்கரனின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் 18 வயதில் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து மீன் பிடித்து விட்டு ஆறு பேர் வந்துவிட்டனர். இதில் சங்கரன் கரை திரும்பவில்லை. இதனை அறிந்த சங்கரனின் குழந்தைகள் பதறிப் போய் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன்பிடிக்க சென்று நீரில் மாயமான சங்கரனை தேடுபணியில் ஈடுபட்டு வந்தனர். 3-வது நாளான இன்றும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வருவாய் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
- 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர்.
திருப்பூர் :
சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுறுத்தலின்படி, திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தொடர்பாக 2 நாட்கள் கூட்டாய்வு நடந்தது.
இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மில் மற்றும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வந்த, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களாக 2 சிறுவர்கள், 14 வயது முதல் 18 வயது வரை உள்ள 4 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் அமர்த்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயகரமில்லாத தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு மொத்த வேலை நேரம் 6 மணி நேரமாகும். 3 மணி நேரம் கழித்து 1 மணி நேரம் ஓய்வு இடைவேளை விட வேண்டும். வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
எந்தவொரு நிறுவனமும் மற்றும் தொழிற்சாலைகளிலும் வளரிளம் பருவத்தினரை இரவு நேரங்களில் பணியமர்த்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொடர்புடைய தொழிலாளர் துறை, தொழிற்சாலை துறைக்கு அறிவிப்புபடிவம் அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் சட்டப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.
- வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளில் சுதந்திர தினத்தை கொண்டாட தொழிலாளர்துறை வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
- அமுதப்பெருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
மதுரை
மதுரை மண்டலத்திற்கு உதமிழக தொழிலாளர் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் அறிவுரைப்படி, மதுரை கூடுதல் கமிஷனர் குமரன் வழிகாட்டுதலின் படி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
மதுரை மண்டல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அப்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, வருகிற 15-ந் தேதி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும். எனவே அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர், ஆஸ்பத்திரிகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றிலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி வைக்க வேண்டும்.
அன்றைய நாட்களில், விளம்பர பலகைகளில் மூவர்ணம் இருக்க வேண்டும். பணியாளர்கள் தேசியக்கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். நிறுவனத்தின் வலைத்தளங்களில் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அத்துடன்வெளிமாநில தொழிலாளர்களின் பணி நிலைமை மற்றும் நலன்களை முறைப்படுத்தும் வகையில், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவன உரிமையாளர்கள், அவர்களின் பெயர், ஆதார் எண், செல்போன் எண், தொழிலாளி சார்ந்துள்ள மாநிலத்தில் உள்ள வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை தொழிலாளர் துறை இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால பலன்களை வழங்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது.
துணை கமிஷனரிடம் ஆன்லைனில், பணி நியமனம் குறித்து பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் உதவி கமிஷனரிடம் (அமலாக்கம்) உரிமம் பெற வேண்டும். கடைகள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு 8 மணி நேர வேலையின் போது, உட்கார்ந்து பணியாற்ற வசதியாக இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.அன்றைய நாட்களில், விளம்பர பலகைகளில் மூவர்ணம் இருக்க வேண்டும். பணியாளர்கள் தேசியக்கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். நிறுவனத்தின் வலைத்தளங்களில் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.






