காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி மாயம்

ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி மாயம்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கிராமத்திற்கு உட்பட்ட மேல் பாதி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 47). மீன்பிடி தொழிலாளி. சங்கரனின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் 18 வயதில் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவுடன் தனித்தனி படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து மீன் பிடித்து விட்டு ஆறு பேர் வந்துவிட்டனர். இதில் சங்கரன் கரை திரும்பவில்லை. இதனை அறிந்த சங்கரனின் குழந்தைகள் பதறிப் போய் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன்பிடிக்க சென்று நீரில் மாயமான சங்கரனை தேடுபணியில் ஈடுபட்டு வந்தனர். 3-வது நாளான இன்றும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் வருவாய் துறையினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com