search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சவம்"

    • 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று ஐப்பசி முதல் நாளில் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசுவரர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து மதியம் தேவகோட்டை விருசுழி ஆற்றை வந்தடைந்தது.

    ஆற்றில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப் பட்டன.

    முடிவில் அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றடைந்தன. இந்த விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அடசி வயல் கள்ளிக்குடி சேன்டல் பெரியாண், திருமண வயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.

    • வருகிற 30-ம் தேதி சண்முகருக்கு 108 சங்காபிஷேகம்.
    • 31-ந் தேதி இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, அணுகையுடன் தொடங்கி அடுத்த மாதம் 4 - ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு 25ஆம் தேதி அன்று சந்திரசேகரர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்முகர் சமேதமாக வீரகேசரி வீரபாகு உடன் மலைக் கோயிலில் இருந்து படியிறங்கி உற்சவம் மண்டபத்தில் காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் எழுந்தருதல் நிகழ்ச்சியும், தினமும் இரு வேளையும் சந்திரசேகர் வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனுடன் எதிர்கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்ற பின் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற 30ஆம் தேதி அன்று வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வும் மற்றும் கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்வும் தெற்கு வீதியில் சூர பத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் நடைபெற்று திருவீதி வழியாக சண்முகர் உலா வந்து கோயிலை வந்தடைகிறார்.

    அதனை தொடர்ந்து 31ஆம் தேதி அன்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி மற்றும் இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன.

    அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை பெருமாள் கோவிலில் கருட வீதி உற்சவம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.
    • வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றும் ஆகும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவில் உள்ளது. இது திருமலையாழ்வாரின் அவதார திருத்தலம் ஆகும். வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றும் ஆகும்.

    தென்கலை வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியார் மணவாளமாமுனிகள், குரு திருவாய்மொழி பிள்ளையிடம் உபதேச சாரங்களை கற்று தெளிந்தது இந்த கோவிலில் தான். இங்கு கோவில் கொண்டுள்ள பெருமாளை வழிபடுவோர் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

    இறைவனை பூரம் நட்சத்திரத்தில் வணங்கி வழிபடுவோருக்கு திருமணத்தடைகள் நீங்கும்.பதவி உயர்வுகள் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும்.

    கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு ஸ்தபன, விசேட திருமஞ்சனமும், 11.30 மணிக்கு விசேட தீபாராதனை, தீர்த்த கோஷ்டி பிரசாதம் வழங்குதலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயகப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நடந்தது.
    • 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை ஆகியவை நடக்கிறது.

    கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு கொலுச்சாவடிக்கு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்க விரும்புவோர், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

    மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு வருகிற 26-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ந் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ந் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ந் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடர்பாக புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முன்னொரு காலத்தில் மஹிசாசூரன் என்பவன் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அவனுக்கு அழிவு ஏற்பட கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களை துன்புறுத்தினான். இதுபற்றி தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பார்வதி தேவி 9 நாட்கள் விரதம் இருந்து, அந்த அரக்கனை வதம் செய்தார். "மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் என்று பொருள். அதாவது இந்த உலகில் அறியாமை இருள்நீங்கி, அறிவு என்னும் ஒளி வீசி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தத்துவம். அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நவராத்திரி கலைவிழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

    • காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது.
    • பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காரைக்கால்: 

    காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, விடை யாற்றி உத்ஸவ நிகழ்ச்சி யுடன் நிறைவு பெற்றது. இறைவனின் திருவா யால் 'அம்மையே' என்ற ழைக்கப்பட்ட பெரு மைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில், காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டு தோறும் நடைபெறும் காரைக்கால் அம்மையார் மாங்கனித்தி ருவிழா, கடந்த ஜூலை 11-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து, திருக்கல்யா ணம், பிச்சாண்டவர் வீதி யுலா, மாங்கனி இறைப்பு, அமுது படையல் மற்றும் புஷ்பபல்லாக்கு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மை யார் மணிமண்டபத்தில், தினந்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. நேற்று காலை 9 மணிக்கு விடையாற்றி உத்ஸவ நிகழ்ச்சி நடை பெற்றது.

    அதுசமயம், கைலாச நாதர் கோவிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனை செய்யப்பட்டு, பிரா காரப் புறப்பாடு நடை பெற்றது. அதேபோல், அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, பிரகார வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கில் வெற்றி செல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முக சுந்தரம், உறுப்பி னர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், திரளான பக்கதர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளை கொட்டு உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • இன்று இரவு சிம்மவாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சுவாமிகள் ஆகியோர் வெள்ளி சிம்மாசனத்தில் ஆடி வீதி வழியாக வலம் வருவர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று இரவு சிம்மவாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சுவாமிகள் ஆகியோர் வெள்ளி சிம்மாசனத்தில் ஆடி வீதி வழியாக வலம் வருவர்.

    இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை இரவு அன்ன வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    அடுத்தபடியாக ஆகஸ்டு 1-ம் தேதி இரவு வெள்ளி சிம்மாசனத்திலும், 2-ம் தேதி இரவு வெள்ளி யானை வாகனத்திலும், 3-ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும், 4-ம் தேதி இரவு வெள்ளி கிளி வாகனத்திலும், 5-ம் தேதி இரவு புஷ்ப்பல்லக்கு வாகனத்திலும், 6-ம் தேதி இரவு தங்க குதிரை வாகனத்திலும், 7-ம் தேதி இரவு புஷ்ப விமானத்திலும், 8-ம் தேதி இரவு கனக தண்டியல் வாகனத்திலும் அம்மன் அருள் பாலித்த பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக் கொட்டு உற்சவம் தொடங்கி இருப்பது, பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    • மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் புகழ்பெற்ற சுந்தரகுஜா ம்பிகை சமேத அட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில்ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண மணகோலத்தில் காட்சிய ளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடையில் மணப்பெண் கோலத்தில் சுந்தரகுஜாம்பிகை, அட்சயலிங்க எழுந்தருளினர். யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாதியுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று, மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
    • வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை நாளையும் (19-ந் தேதி), 15 நவநீத சேவை நாளை மறுநாளும் (20-ந் தேதி) தஞ்சையின் 4 ராஜவீதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்கான உற்சவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

    நாளை காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 12 மணி வரை தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கீழராஜவீதி, தெற்குவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் சேவை உற்சவம் நடைபெற உள்ளது.நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து நவநீத சேவையில் புறப்பட்டு காலை 7.30 மணி முதல் 11 மணி வரை சேவையில் மேற்கூறிய 4 ராஜவீதிகளில் உற்சவம் நடைபெறுகிறது.

    21-ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் சனனதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதனை தவிர நாளை மதியம் 3 மணிக்கு ராஜராஜ சமய சங்கத்தில் திருவாய்மொழி தொடக்கமும், 20-ம் தேதி இரவு 8 மணிக்கு சாற்றுமுறை உற்சவமும் நடைபெறுகிறது.ததியாராதனைகள் மேலவீதி கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி அருகில் சக்காநாயக்கன் தெருவில் உள்ள ராஜராஜ சமய சங்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்த உற்சவங்களில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமாளை சேவித்து பயன்பெறவும், உற்சவ விவரங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்படியும் விழா அமைப்பாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.இந்த 24 கருட சேவையும், 15 நவநீத சேவையும் கடந்த பல ஆண்டுகளாக தஞ்சையில் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
    • 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆனி உற்சவம் வருகிற ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது‌. அன்று முதல் 11ம-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    இந்த நாட்களில் சாய ரட்சை பூஜைக்கு பின்னர் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்ட பத்தில் எழுந்தருள் வார்கள். அதனை தொடர்ந்து சுவாமி - அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஜூலை 5-ந் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு ஆறுகால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    கால பூஜைகள் முடிந்த பின்னர் 7 மணிக்கு மேல் நடராஜர்- சிவகாமி அம்மன் 4 மாசி வீதிகளில் வீதி உலா வருகின்றனர். ஆனி உத்திர திருமஞ்சனம் அபிஷேகத்திற்கான பொருட்களை 5-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 13-ந் தேதி ஆனி பவுர்ணமி அன்று உச்சிக்கால வேளையில் சொக்கநாதப் பெருமானுக்கு முக்கனிகளை கொண்டு பூஜைகள் நடைபெறும். உற்சவம் முடியும் 13-ந் தேதி வெள்ளி குதிரை வாக னத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

    விழா நடக்கும் ஜூலை 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கோவில் மற்றும் உபயதாரர் சார்பாக உபய திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடைபெறாது.

    மேற்கண்ட தகவலை கோவில் துணை ஆணை யர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    • மானாமதுரை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி பால்குட உற்சவ விழா நடந்தது.
    • மாரியம்மன் சன்னதியில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் எஸ். கரிசல்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன்கோவிலில் வைகாசி பால்குட உற்சவம் மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க பால்குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பின்னர் மாரியம்மன் சன்னதியில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது.

    பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் மூலவர் முத்துமாரி அம்மனுக்கு புனித நீராலும், பால், திரவிய பொருள்கள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் அபி ஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவில திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ராலெ பாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    ×