search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meenakshi amman"

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள பிடாரி மீனாட்சியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள் (7-ந்தேதி) நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் ஆடுகளை பலியிடுவது வழக்கம். சாலையில் உள்ள ஆட்டு ரத்தத்தின் மீது தேர் செல்வது கோவிலின் சிறப்பு. இந்த தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். வருகிற 8-ந்தேதி காலை மீண்டும் தேர் புறப்பாடு, பிற்பகல் 2 மணிக்கு ராமநாதபுரம் கிராமத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

    அன்று இரவு மஞ்சள் நீராட்டுவிழா, காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    • கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது.



    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்ணஆகார்ஷன பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், சாமி தரிசனம் செய்த பக்தர்களையும் படத்தில் காணலாம்.

     மதுரை

    தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்தது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    அவர்கள் அதிகாலை முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்ததால் மீனாட்சி அம்மன் கோவில் வெளியிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

    மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இது பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டுச்சேலை- மனோரஞ்சிதம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் தற்காலிக கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதன கோபால சுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    • மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனையானது.
    • கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றனர். அப்போது அவர்கள் மீனாட்சி அம்மன்- சுந்தரே சுவரருக்கு பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் சாத்தி வழிபடுவது வழக்கம். இது தவிர கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலை கள், வேஷ்டி கள், துண்டுகள் சாத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை கோவில் நிர்வாகம் வாரம் ஒரு முறை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டு சேலைகள் விற்பனை மூலம் எவ்வளவு தொகை கிடைத்துள்ளது? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அன்பளிப்பாக வந்த பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் வகை யில் கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் ரூ. 5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 கிடைத்து உள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம், கோவிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு லட்சதீபம் நடக்கிறது.
    • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று இரவு, கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்தாய்ப்பாக இன்று இரவு மீனாட்சி கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. குறிப்பாக பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள படிகளில் தீபங்கள் ஏற்றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா வருகிற 12ந் தேதி நடக்கிறது.
    • சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மதுரை

    தமிழ் மரபில் பதினெண் சித்தர்களுள் ஒருவர்- சுந்தரானந்தர். இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். சட்டைமுனி சித்தரின் சீடர். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி, சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். 'வாக்கிய ஆத்திரம், வைத்தியத்திரட்டு, தீட்சா விதி, சிவயோகஞானம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா, பழைய திருக்கல்யாண மண்ட பத்தில் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்க உள்ளது. அப்போது சுந்தரானந்த சித்தருக்கு திருமுறை பாராயணம், புஷ்பாஞ்சலி நடக்க உள்ளது.

    இதனைத்தொடர்ந்து "எல்லாம் வல்ல சித்தர்கள்" என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானச ம்பந்தன் சொற்பொழிவாற்றுகிறார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரத்தை கவுரவித்து பணமுடிப்பு பழகுகிறார். அதன் பிறகு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சுந்தரானந்தர் குருபூஜை விழா நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் மூர்த்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • ஆவணி மூல திருவிழாவில் மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடந்தது.
    • வருகிற 9-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடந்து வருகிறது. அப்போது சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில், 12 லீலைகள் அரங்கேற்றம் செய்யப்படும். நேற்று ''மாணிக்கம் விற்ற லீலை'' நடந்தது.

    4-ம் நாளான இன்று ''தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை'' நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு சிறப்பு அலங்காரம்- அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சுவாமி தம்பதி சமேதராக ராமசாமி பிள்ளை மண்டபம், தெற்கு ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, கீழ பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது. வருகிற 9-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக ஆவணி மூல திருவிழா நடக்கவில்லை.

    இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் ஆவணி மூலத் திருவிழா தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
    • 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆனி உற்சவம் வருகிற ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது‌. அன்று முதல் 11ம-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    இந்த நாட்களில் சாய ரட்சை பூஜைக்கு பின்னர் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்ட பத்தில் எழுந்தருள் வார்கள். அதனை தொடர்ந்து சுவாமி - அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஜூலை 5-ந் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு ஆறுகால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    கால பூஜைகள் முடிந்த பின்னர் 7 மணிக்கு மேல் நடராஜர்- சிவகாமி அம்மன் 4 மாசி வீதிகளில் வீதி உலா வருகின்றனர். ஆனி உத்திர திருமஞ்சனம் அபிஷேகத்திற்கான பொருட்களை 5-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 13-ந் தேதி ஆனி பவுர்ணமி அன்று உச்சிக்கால வேளையில் சொக்கநாதப் பெருமானுக்கு முக்கனிகளை கொண்டு பூஜைகள் நடைபெறும். உற்சவம் முடியும் 13-ந் தேதி வெள்ளி குதிரை வாக னத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

    விழா நடக்கும் ஜூலை 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கோவில் மற்றும் உபயதாரர் சார்பாக உபய திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடைபெறாது.

    மேற்கண்ட தகவலை கோவில் துணை ஆணை யர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    ஆரணி கோவில் உற்சவத்தில் மீனாட்சியம்மன் கையில் அமர்ந்து கிளி அருள்பாலித்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. #MeenakshiAmman

    ஆரணி:

    ஆரணியில் அரியாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வருகிறது. 5-ம் நாள் விழாவான நேற்று இரவு அரியாத்தம்மன் உற்சவர் சிலை மதுரை மீனாட்சியம்மனை போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    அப்போது, அம்மனின் வலது கையில் உள்ள பழத்தின் மேல் உண்மையான பச்சைக்கிளி திடீரென வந்து உட்கார்ந்து அருள்பாலித்தது. கிளி பழத்தை கொத்தி கொத்தி கொத்தி சாப்பிட்டு சத்தமிட்டது.


    பக்தர்கள் அம்மன் கையில் அமர்ந்த கிளியை பார்த்து பரவசமடைந்தனர். இதையடுத்து, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பூஜையின்போது மீனாட்சியம்மன் முகத்தில் கிளி கொஞ்சி விளையாடியது. அருள்பாலித்த கிளியை ரசித்த பக்தர்கள் மெய் மறந்து மீனாட்சியம்மனை வழிபட்டனர். #MeenakshiAmman

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கியது. வருகிற 18-ந் தேதி வரை விழா நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாமியின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவனின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

    விழாவையொட்டி 18-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. ஆனால் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

    நவராத்திரி விழாவையொட்டி தினமும் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவையொட்டி பொற்றாமரை குளம், அம்மன், சாமி சன்னதி, பிரகாரங்கள், கோபுரங்கள் போன்றவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.



    கோவிலில் வரையப்பட்டிருந்த நீர்கோலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    இந்த விழாவையொட்டி 18-ந் தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நேரம், திரை போடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 4.30 மணி முதல் 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5 மணியில் இருந்து 7 மணி வரை சாமி தரிசனம். பின்னர் 7 மணியில் இருந்து 8 மணி வரை திரை போட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு 8 மணியில் இருந்து 10 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். அதை தொடர்ந்து 10 மணியில் இருந்து 10.45 மணி வரை திரை போடப்படும். பின்பு 10.45 மணியில் இருந்து 12.45 வரை சாமியை தரிசனம் செய்யலாம். மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடை அடைக்கப்படுகிறது.

    பின்பு மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை தரிசனம் செய்யலாம். 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். அந்த நேரங்களில் கொலுமண்டபத்தில் உள்ள உற்சவர் மீனாட்சியை தரிசனம் செய்யலாம். பின்பு இரவு 7.30 மணியில் இருந்து 10 மணி வரை அம்மனை தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியார் செய்து உள்ளனர். 
    மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான ஒன்று ஆவணி மூலத்திருவிழா. கருங்குருவி உபதேசம் செய்தல், நாரைக்கு முக்தி கொடுத்தல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை போன்ற வைபவங்கள் விமரிசையாக விழாவில் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிசேக ஆராதனைக்கு பின்னர் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விசே‌ஷ தீபாராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமியின் திருவிளையாடல் வைபவங்கள் விழாவாக நடைபெறுகிறது. தினமும் மீனாட்சி - சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது.

    15-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த கோலத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார். அதன் பின்னர் ஆவண மூல வீதிகளில் மீனாட்சி அம்மனுடன் வலம் வருகிறார். மறுநாள் (16-ந்தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், 17-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 18-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அளித்த வைபவம் என ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    தினமும் இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதிஉலா செல்கின்றனர். 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டிய லீலை நிகழ்த்திக் காட்டப்படுகிறது.

    21-ந் தேதி சுந்தரேசுவரர் வளையல் வியாபாரியாக வந்து சாபத்தின் பயனாக மதுரையில் பிறந்த ரிஷி பத்தினிகளுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு வீதிஉலா முடிந்து கோவி லுக்கு வரும் சுந்தரேசுவரருக்கு ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்பலக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிட்டுத் தோப்புக்கு செல்கின்றனர்.

    சுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

    அவர்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    26-ந்தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறுகிறது.
    சேலம் சீலநாயக்கன்பட்டி சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு சக்தி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் மகளிர் மன்றம் சார்பில் நேற்று மாலை கோவில் அருகில் அலங்கார மேடையில் சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    மதியம் 2 மணிக்கு மீனாட்சி அம்மன் தாய்வீட்டு சீதனமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி பெருமாளிடம் சீர் பெற்று சீர் வரிசை, முளைப்பாரிகையுடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக மணப்பந்தலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜையுடன் சுந்தரேஸ்வரர் மணப்பந்தலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதையடுத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. திருமண கோலத்தில் அருள்பாலித்த சாமிகளை பொதுமக்கள் பலர் தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், பெருமாள் கோவில் மேடு உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 
    மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின் ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான். தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த அவதார நிகழ்வு வித்தியாசமானது.
    மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின் ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான். தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த அவதார நிகழ்வு வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.

    மானிட உருவில் ஒரு குடும்ப தலைவியாகப் பொறுப்பேற்று- அதே சமயம் ஒரு பேரரசியாக இருந்து தம் மக்கள் அனைவருடைய உள்ளத்தையும் தன் கருணை கடாட்சத்தால் ஆண்டு வழிகாட்டியவள் மதுரை மீனாட்சி.கயல்மீன் போன்ற அழகிய கண்களையுடைய தெய்வப்பெண் நின்று நிகழ்த்திய ஆட்சி என ஆட்சி மகிமையை முன்வைத்தே ‘மீனாட்சி’ என்ற பெயர் அன்னைக்கு ஏற்பட்டது.

    தான் இடும் முட்டைகளை, எட்ட நின்று தன் கண்பார்வைத் திறத்தினாலேயே குஞ்சுகளைத் தோன்றச் செய்து, தனது பார்வை ஆற்றலினாலேயே அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பது மீனின் இயல்பாகும்.

    அதேபோன்று தனது அருட்கருணைத் திருக்கண் பார்வையினாலேயே தம் பக்தர்கள் அனைவரையும் தோற்றுவித்து, வளர்த்து, காத்து ரட்சித்து வருகிறாள். அன்னையின் இந்த அருட்செயல் காரணமாக ‘மீனாட்சி’ என் பெருமையுடன் மகிமையுடன் அழைக்கப்பட்டாள்.

    மதுரையிலே அம்மையும், அப்பனும் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலை சுந்தரேசுவரர் மீனாட்சி ஆலயம் என்று யாரும் கூறுவதில்லை. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் எனத்தான் பக்திப்பெருமிதத்துடன் அழைக்கின்றனர்.

    சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது. இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர் பிணைப்பிலே காணமுடிகின்றது.

    கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன் கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள். சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திருஉருவத்தை வழிபட்ட பிறகு தான் அம்மையைத் தரிசிக்க செல்வது வழக்கம். இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுந்தரேசுவரர் சன்னிதிக்கு சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கின்றது.

    மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.

    அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.

    அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில பக்தர்கள் அன்னை மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளியை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

    மதுரைமீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
    ×