search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா
    X

    மீனாட்சி அம்மன்

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
    • 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆனி உற்சவம் வருகிற ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது‌. அன்று முதல் 11ம-ந் தேதி வரை இந்த உற்சவம் நடைபெறும்.

    இந்த நாட்களில் சாய ரட்சை பூஜைக்கு பின்னர் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்ட பத்தில் எழுந்தருள் வார்கள். அதனை தொடர்ந்து சுவாமி - அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    ஜூலை 5-ந் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுக்கு ஆறுகால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    கால பூஜைகள் முடிந்த பின்னர் 7 மணிக்கு மேல் நடராஜர்- சிவகாமி அம்மன் 4 மாசி வீதிகளில் வீதி உலா வருகின்றனர். ஆனி உத்திர திருமஞ்சனம் அபிஷேகத்திற்கான பொருட்களை 5-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 13-ந் தேதி ஆனி பவுர்ணமி அன்று உச்சிக்கால வேளையில் சொக்கநாதப் பெருமானுக்கு முக்கனிகளை கொண்டு பூஜைகள் நடைபெறும். உற்சவம் முடியும் 13-ந் தேதி வெள்ளி குதிரை வாக னத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

    விழா நடக்கும் ஜூலை 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கோவில் மற்றும் உபயதாரர் சார்பாக உபய திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடைபெறாது.

    மேற்கண்ட தகவலை கோவில் துணை ஆணை யர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×