என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சுந்தரகுஜாம்பிகை அம்பாள், அட்சயலிங்கசாமி.
அட்சயலிங்கசாமி கோவிலில் திருக்கல்யாணம்
- ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
- மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் புகழ்பெற்ற சுந்தரகுஜா ம்பிகை சமேத அட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில்ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண மணகோலத்தில் காட்சிய ளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடையில் மணப்பெண் கோலத்தில் சுந்தரகுஜாம்பிகை, அட்சயலிங்க எழுந்தருளினர். யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாதியுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று, மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Next Story






