search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சவம்"

    • சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

    இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர்.

    ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

    அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாட ல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.

    நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மயூரநாதர் ஆலயத்திலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மயூரநாதர் சுவாமி, வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, மற்றும் விஸ்வநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம் இவற்றிலிருந்து இறைவன் அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.

    பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் திருவாவடுதுறை ஆதீனம் நிறுவாகிகள், தருமபுரம் ஆதீனம் நிறுவாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவம் நடந்தது.
    • வரும் 18-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

    இந்த கோவிலின்உட்பிர காரத்தில் வள்ளி, தேவயானை சமேத ஆறுமுகக்கடவுள் அமைந்துள்ளது.

    இந்த ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நேற்று 13.11.2023 மாலை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுப்பிர மணியசுவாமி கேடயத்தில் நான்கு வீதிகளில் வீதியுலா காட்சி நடந்தது.

    விழா நாட்களில் மயில் வாகனத்தில் எழுந்தருளி தினசரி வீதியுலா நடை பெறும்.

    வரும் 18.11.2023 அன்று இரவு வேதாரண்யம் மேலவீதியில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
    • ரெங்கநாச்சியர் நவராத்திரி உற்சவம்


    திருச்சி


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 15-ந்தேதி தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தாயார் திருவடி சேவை 21-ந் தேதி நடைபெறுகிறது.


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ் தானத்திலிருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெறும். இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார்.


    2ம் திருநாள் முதல் 6ம் திருநாளான 20-ந்தேதி மற்றும் 8ம் திருநாளான 22-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ் தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளான 21–ந்தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.


    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




    • புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    எடப்பாடி:

    புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக எடப்பாடி மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்ப உற்சவம்

    விழாவின் முக்கிய நிகழ்வாக எடப்பாடி பெரிய ஏரியில் தெப்ப தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏரியின் மறுகரையில் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியை வந்தடைந்தார்.

    இதேபோல் எடப்பாடி அடுத்துள்ள வீரப்பம்பாளையம் வெள்ளைகரடு மலை கோவிலில் உள்ள திம்மராய பெருமாள் சன்னதி, பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், எடப்பாடி நரசிம்ம மூக்கரை பெருமாள் கோவில், பூலாம்பட்டி மலைமாட்டுப் பெருமாள் கோவில், ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் முளைகொட்டு உற்சவம் நடந்தது.
    • பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்ட னர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நொச்சி ஊரணி கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்ட னர்.

    தொடர்ந்து 100-க்கும் அதிகமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பலர் தங்களது நேர்த்திக்கடனை நிறை வேற்றினர். ஒயிலாட்டம், அன்னதானம் நடைபெற்றது.

    இதில் நொச்சிஊரணி ஊராட்சி மன்ற தலைவர் சீனி அரசு, கிராம தலைவர் தங்கையா, செயலாளர் ரத்தினம், துணைச் செயலா ளர் இருளாண்டி, பொருளா ளர் அழகர் பெருமாள் உட்பட சுற்றுபுற கிராமங் களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
    • மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி,திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் பவித்ர உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல இந்தாண்டு பவித்ர உற்சவம் கடந்த 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் 2-ம் நாள் உற்சவமும் நேற்று 3-ம் நாள் உற்சவமும் நடந்தது. இதனை முன்னிட்டு காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.
    • 18-ம் ஆண்டு பார்வதிதேவி சமேத சிவேந்திர சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இங்கு மூலவராக விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் திகழ்கிறார்.

    இங்கு பார்வதி தேவி மற்றும் கங்கா தேவி சமேதராக சிவேந்திரர் காட்சி தருகிறார்.

    இங்குள்ள பகுளாமுகி காளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தஞ்சாவூரில் மிகவும் உயரமான விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் சிவ துர்க்கை அம்மன் இங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் நாளை ( ஞாயிற்றுகிழமை ) 18-ம் ஆண்டு பார்வதிதேவி சமேத சிவேந்திர சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    முன்னதாக மாலை 4 மணிக்கு நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து கல்யாண சீர்வரிசைகள் பக்தர்கள் எடுத்து வருகின்றனர்.

    இரவு 7.30 மணிக்கு பார்வதிதேவி சமேத சிவேந்திரருக்கு மாங்கல்ய தாரணம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இந்த விழாவிற்காக ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
    • வீடுகள் தோறும் குத்துவிளக்கேற்றி வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    பூதலூர்:

    வடக்கு பூதலூர் கோவில்பத்து இணைப்பில் அமைந்துள்ள வடபத்திரகாளி, காமாட்சி அம்மன் கோவிலில் 5-வது ஆண்டாக வட பத்திரகாளி திருநடன உற்சவ திருவிழா நடைபெற்றது.

    விழாவினை ஒட்டி கோவிலில் வளாகத்தில் பொங்கல் வைத்து சாமிக்கு அபிஷேக நடைபெற்றது.

    தொடர்ந்து விண்ணமங்கலம் வெண்ணாற்றில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

    இரவு ஸ்ரீகாமாட்சி அம்மன் மின் அலங்கார தேரில் வீதி உலா நடைபெற்றது. வடபத்திரகாளி திரு நடன உற்சவ விழா இன்று காலை நடைபெற்றது.

    மேளதாளங்கள் முழங்க வடபத்திர காளி வீடு வீடாகச் சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். வீடுகள் தோறும் குத்துவிளக்கேற்றி வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    • குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
    • பாடைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஞாயிறு தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் தங்களது குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    அதனைத் தொடர்ந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

    தேரை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வந்தது.

    இதேபோல், ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், படையல் இட்டும், பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பில்லை காவடி மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகள் எடுத்தும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    குன்னூர்,

    குன்னூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வருடந்தோறும் தேர்த்திருவிழா வெகு விமரி சயைாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    முக்கிய திருவிழாவான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை யொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது.

    தொடர்ந்து மதியம் வேணுகோபால் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் தாலி மற்றும் பூஜை பொருட்களுடன் சீர் தட்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பின்னர் அனைவருக்கும் கல்யாண உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை கம்பு நடுதல், அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் தேர் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    முதல் நாள் மங்கள இசையும் அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு அபிஷேக மும், 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராம நாம ஜெபமும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பல்சுவை பட்டிமன்றமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது.

    2-வதுநாள் மங்கள இசையும் அதைத் தொடர்ந்து கலச பூஜையும், நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு சிறப்பு பஜனையும், கலை 9.30 மணிக்கு அபிஷே கமும், 11.15மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் 5.15 மணிக்கு ஸ்ரீராமஜெயம் எழுத்து போட்டியும் நடந்தது. 11.30 மணிக்கு மகா அன்னதான மும் நடந்தது. மாலையில் சமயசொற்பொழிவும், தீபா ராதனையும் நடந்தது.அதன் பிறகு ஸ்ரீ ராமநாம சங்கீர்த்த னமும் சாயராட்சை தீபாராதனையும், இரவு ராமபெருமானுக்கு பிச்சி, முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து, ரோஜா, துளசி, பச்சை, கொழுந்து, அரளி, தெற்றிபூ போன்ற பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் ஸ்ரீராம ருக்கு ஊஞ்சலில்தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் பக்தர் களுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடு களை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்து இருந்தனர்.

    • திருவையாறு ஐயாறப்பர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
    • நந்தியம்பெருமானுக்கு திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பல வகைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர், அம்பாள் சுயசாம்பிகை கண்ணாடி பல்லாக்கிலும் நந்திகேஸ்வரர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.

    இதனை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல வகைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம், பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    இன்று காலை ஐயாறப்பர் அம்பாள், அறம் வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், சுயசாம்பிகை தனி பல்லகிலும் நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் இருந்து புறப்பட்டு தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூர் மாவட்டம் திருமழாபாடிக்கு சென்றது.

    திருமழாப்பாடியில் இன்று இரவு வைத்தியநாதன் சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    நந்தி பார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள். அதனை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    பிறகு சாமிப்புறபட்டு திருவையாறை வந்தடையும்.

    விழா ஏற்பாடுகளை தருமபுரஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின்பேரில் தருமபுர ஆதீன கட்டளை விசாரனை ஸ்ரீமத் ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×