search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teppather"

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தை பேட்டையை ஒட்டி உள்ள பெரிய தெப்பக்குளத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • கடந்த 51 ஆண்டு களாக பல்வேறு காரணங்களால் இந்த விழா நடைபெறவில்லை.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தை பேட்டையை ஒட்டி உள்ள பெரிய தெப்பக்குளத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 51 ஆண்டு களாக பல்வேறு காரணங்களால் இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தெப்ப தேர உற்சவம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்பினர்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தெப்பத்தேர் விழா நடத்த அனுமதி அளித்தது.விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இன்று தெப்பத்திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தெப்பக்குளம்

    கிருஷ்ண தேவராயர் மன்னர் காலத்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இந்த தெப்பக்குளம் 1512-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் திருமலையில் இருந்து பரிவார மூர்த்தி களுடன் நகருக்கு எழுந்த ருளியும்போது பெரிய தெப்ப குளத்தில் தெப்போற்சவம் நடந்ததாக கூறப்படுகிறது. திருச்சி சமயபுரம், ஸ்ரீரங்கம் தெப்பத்தேர் அமைத்து நடத்தும் குழுவினர் இந்த தேரை உருவாக்கியுள்ளனர்.

    90பேரல்களை கட்டி அதன் மீது பலகைகள் அமைத்து சவுக்கு கட்டைகளை வைத்து கட்டியுள்ளனர். நேற்று தெப்பத்தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

    இன்று மாலை நடைபெறும் தெப்பத் தேர் உற்சவத்தை காண பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    ×