என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சூரசம்ஹாரம்
  X

  சூரசம்ஹார நிகழ்ச்சியில் எழுந்தருளிய சுவாமிநாதசாமி.

  சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சூரசம்ஹாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.
  • சுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது.

  சுவாமிமலை:

  அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுகையுடன் தொடங்கியது. வருகிற 4 - ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

  மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்சியும் தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதி வழியாக ஸ்ரீ சண்முகர் உலா வந்து கோயிலை வந்தடைந்தார்.

  விழாவில் இன்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளன. பின்னர் மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது.

  மேற்படி நாட்களில் ஸ்ரீ சுவாமிநாத சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது .

  இதனை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடாக பக்தர்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியா ளர்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×