search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirukalyana"

    • பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்::

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லி

    யாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.

    உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, கலச பூஜை, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், காயத்திரி ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு

    மேல் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடை பெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை கட்டப்பட்டது.

    திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். திருக்கல்யாண விழா ஏற்பாடு களை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×