மார்கழி திருவாதிரையை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கொலு மண்டபத்தில் வருகிற 6-ந் தேதி நடக்கிறதுஅம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன்
கன்னியாகுமரி பகவதி அம்மன்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத் திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவாதிரையை யொட்டி ஊஞ்சல் உற்சவம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டிஅன்று அதிகாலை 4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 6.15 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும் அதைத்தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும் உச்சிகால அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாரா தனை, 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் மேல்சாந்திகள் கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள்.ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது. பின்னர் ஊஞ்சலில் எழுந்தருளி இருக்கும் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த தாலாட்டு நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்திகள் நடத்து கிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. பின் னர் அத்தாள பூஜையும் ஏகாந்த தீபாராதனை யும் நடக்கிறது.

இந்த ஊஞ்சல் உற்சவத்தை தரிசிக்க திரளான பக்தர் கள் திரள்வார்கள். இதற்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் மண்ட கப்படி கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com