search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சவம்"

    • தொடர்ந்து, 8-ந்தேதி காலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு 4-ந்தேதி காலை வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 6-ந்தேதி இரவு விக்னேஸ்வர பூஜையும், 7-ந் தேதி காலை வள்ளி தேவசேனா, சண்முக பெருமாள், வேடமூர்த்தி, வள்ளிநாயகி நாரதர், நம்பிராஜன், நந்தமோகினி உற்சவ மண்டபம் எழுந்தருளுகின்றனர்.

    8-ந்தேதி காலை அரச லாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், சண்முக பெருமாள், வள்ளிநாயகியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து, 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், வள்ளிதேவசேனா, சண்மு கசாமிபுறப்படுதல், வேடமூர்த்தி, வள்ளிநா யகியார் பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெறுகிறது.

    பின்னர், 12-ந்தேதி காலை சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகமும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, விழாவில் தங்க சூரிய பிரபை 20-ந்தேதியும், தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதில் நவநீத கோலத்தில் காட்சியளித்த ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் அடித்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 22-ந்தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும் நடக்கிறது.
    • விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜ கோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடி மரத்தில் கருட பகவான் உருவம் பொறித்த கொடியை வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் ஏற்றினர். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ராஜகோபால–சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன், கோவில் நிர்வாக அதிகாரி மாதவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வருகிற 20-ந் தேதி தங்க சூரிய பிரபை விழாவும், 22-ந்தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவையும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி உற்சவம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. அன்று காலை நவநீத சேபையில் ராஜகோபாலன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இரவில் தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் சாமி காட்சி தருகிறார். தொடர்ந்து வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழாவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார்
    • இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி இன்று–டன் (3-ந்தேதி) நிறைவ–டைகிறது. தெப்பத் திருவிழாவை–யொட்டி தினமும் நம்பெரு–மாள் பல்வேறு வாக–னங்க–ளில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதை–யொட்டி மாலை 3 மணிய–ளவில் நம்பெருமாள் உபய– நாச்சியார்களுடன் மூலஸ்தா–னத்திலிருந்து திருச்சி விகையில் புறப்பட்டு மேல–வாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்ச–வம் கண்டருளுளினார். இரவு 9.15 மணிக்கு தெப் பக்குளத்தின் மைய மண்ட–பம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப் பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந் தார்.9-ம் திருநாளான இன்று (3-ந்தேதி) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதை–யொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தா–னத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டார்.

    வழிநடை உப–யங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேர்ந் தார்.பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத் திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்தக் காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறை–வடைகிறது.விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் இணை–ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள பனங்காடி கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோ விலில் திருக்கல்யாணம் வைபோகம் நேற்றிரவு நடைபெற்றது.

    இதனை யொட்டி முன்னதாக காலை சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து வரத விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க சீர் வரிசை கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பின் மாலை மாற்றும் வைபோகமும் பின் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்க ல்யாணம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விழா நடந்ததையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    • அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நடந்ததையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில் மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் அனைவருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சிவன், அங்காளம்மன், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தொடர்ந்து பக்தர்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து. இரவு குதிரை வாகனத்தில் அங்காளம்மன் சாமி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.

    • பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்::

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நல்லி

    யாம்பாளையம் அருள்முருகன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.

    உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, கலச பூஜை, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல், காயத்திரி ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு

    மேல் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிர மணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடை பெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை கட்டப்பட்டது.

    திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். திருக்கல்யாண விழா ஏற்பாடு களை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் மதனகோபாலசாமி கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவிலின் வடக்குபகுதியில் 10 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கபட்டிருந்த சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து இராப்பத்து நிகழ்ச்சி 10 நாட்கள் சிறப்பு ஆராதனையுடன் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி உற்சவ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே சன்னதி அக்ரஹாரம் வழியாக வந்து கோவில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து மீண்டும் சொர்க்கவாசல் வழியாக கோவிலை அடைந்தார்.

    பல்லக்கில் இருந்து உற்சவ பெருமாள் இறங்கியதும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் குழுவினர் பெருமாள் முன்பு நம்மாழ்வாரின் பாசுரங்களை பாடி சேவித்து நம்மாழ்வாருக்கு அரங்கநாதர் மோட்சம் அருளிய நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து கோவிலின் வடக்குபகுதியில் 10 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கபட்டிருந்த சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது. இனி அடுத்த வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.


    • கொலு மண்டபத்தில் வருகிற 6-ந் தேதி நடக்கிறது
    • அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத் திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவாதிரையை யொட்டி ஊஞ்சல் உற்சவம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டிஅன்று அதிகாலை 4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 6.15 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும் அதைத்தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும் உச்சிகால அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாரா தனை, 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் மேல்சாந்திகள் கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள்.ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது. பின்னர் ஊஞ்சலில் எழுந்தருளி இருக்கும் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த தாலாட்டு நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்திகள் நடத்து கிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. பின் னர் அத்தாள பூஜையும் ஏகாந்த தீபாராதனை யும் நடக்கிறது.

    இந்த ஊஞ்சல் உற்சவத்தை தரிசிக்க திரளான பக்தர் கள் திரள்வார்கள். இதற்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் மண்ட கப்படி கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 10-ம்ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன், பிள்ளையார் ஆகிய சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா காட்சி செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பச்சைகாளி, சிவன், காத்தவராயன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்த நடனம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தை பேட்டையை ஒட்டி உள்ள பெரிய தெப்பக்குளத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • கடந்த 51 ஆண்டு களாக பல்வேறு காரணங்களால் இந்த விழா நடைபெறவில்லை.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தை பேட்டையை ஒட்டி உள்ள பெரிய தெப்பக்குளத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 51 ஆண்டு களாக பல்வேறு காரணங்களால் இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தெப்ப தேர உற்சவம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்பினர்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தெப்பத்தேர் விழா நடத்த அனுமதி அளித்தது.விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இன்று தெப்பத்திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தெப்பக்குளம்

    கிருஷ்ண தேவராயர் மன்னர் காலத்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இந்த தெப்பக்குளம் 1512-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் திருமலையில் இருந்து பரிவார மூர்த்தி களுடன் நகருக்கு எழுந்த ருளியும்போது பெரிய தெப்ப குளத்தில் தெப்போற்சவம் நடந்ததாக கூறப்படுகிறது. திருச்சி சமயபுரம், ஸ்ரீரங்கம் தெப்பத்தேர் அமைத்து நடத்தும் குழுவினர் இந்த தேரை உருவாக்கியுள்ளனர்.

    90பேரல்களை கட்டி அதன் மீது பலகைகள் அமைத்து சவுக்கு கட்டைகளை வைத்து கட்டியுள்ளனர். நேற்று தெப்பத்தேர் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

    இன்று மாலை நடைபெறும் தெப்பத் தேர் உற்சவத்தை காண பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    • தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.
    • சுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுகையுடன் தொடங்கியது. வருகிற 4 - ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்சியும் தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதி வழியாக ஸ்ரீ சண்முகர் உலா வந்து கோயிலை வந்தடைந்தார்.

    விழாவில் இன்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளன. பின்னர் மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது.

    மேற்படி நாட்களில் ஸ்ரீ சுவாமிநாத சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது .

    இதனை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடாக பக்தர்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    ×