search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி ராமர் கோவில்"

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
    • அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ.1,450 கோடி செலவானது.

    ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதாம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22-ம் தேதி அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். 22-ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • 17-ந்தேதி குழந்தை வடிவிலான ராமர் சிலை ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.

    அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. 16-ந்தேதி முதல் அதற்கான வேலைகள் தொடங்க இருக்கிறது. கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

    இதற்கு முன்னதாக 17-ந்தேதி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

    கருவறையில் நிறுவப்படும் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய கூடுவார்கள். குறிப்பாக அயோத்தி நகருக்கு வெளியே உள்ள பக்தர்கள், பொது மக்களும் அதிக அளவில் தரிசனம் செய்வதற்காக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என அயோத்தி பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

    இதனால் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக கோவிலுக்குள் வைக்கப்படும் சிலை ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் இதுவரை இந்து அறநிலையத்துறையை அணுகவில்லை.
    • கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டியதில் எந்த தவறும் இல்லை.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் இதுவரை இந்து அறநிலையத்துறையை அணுகவில்லை. அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அறநிலையத்துறை தயாராக உள்ளது என்றார்.

    இதனிடையே, கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டியதில் எந்த தவறும் இல்லை. தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் பெயர் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமானது என்று கூறினார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
    • அயோத்தி விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ.1,450 கோடி செலவானது.

    ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தைக் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதற்கிடையே, அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதாம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, அதற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலும் அளிக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.

    • வருகின்ற 22-ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.
    • இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும்.

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வருகின்ற 22-ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.

    இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தாழ்மையுடன் பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை நாம் அனைவரும் செய்வோம் என்று உறுதி அளிப்போம்.

    ஜெய் ஸ்ரீ ராம் ...! என கூறியுள்ளார்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர்.

    இந்நிலையில், வருகிற 22-ந்தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.


    அதற்காக வரும் 21-ந்தேதியே நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர். 8000 பேருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வரும் 23-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ம் தேதிக்குள் முடிவடைந்து ஜனவரி 16-ம் தேதியில் இருந்து ஜனவரி 22-ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு

    உள்ளது. இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது எனபொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

    மேலும், துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுக்க இருக்கிறது.

    மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    அதேபோல் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களும் அதையும் ஏற்றுக்கொண்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

    ஆனால் விஷ்வ இந்து பரிசத், இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

    துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.
    • ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் முடிவடைந்து விடும். ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இருவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இருவரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் "எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குடும்பத்தின் மூத்தவர்கள். அவர்களின் வயதை கருத்தில் கொண்டு, அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

    • அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர் மோடி கோவில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தது முதலே கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

    அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தொழில் அதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்சய் குமார், பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி , பிரபல டி.வி. தொடரான ராமாயணாவில் ராமர் மற்றும் சீதாவாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா மற்றும் 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1990-ல் இருவேறு போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழந்த 50 கர சேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அவர்களை அழைத்து வருவது, உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொண்டுள்ளது.

    இது தவிர 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மத தலைவர்கள் மற்றும் மிக முக்கிய பிரபலங்கள், எழுத்தாளர்கள், நாட்டின் பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், இசையமைப்பாளர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் கோவில் டிரஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • அட்சதை அரிசியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.
    • பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருப்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 24-ந்தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேக விழாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில் அட்சத பூஜை பிரமாண்டமாக நடந்தது. அதில் நாடு முழுவதும் உள்ள அதன் 45 பிரிவுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பங்கேற்றனர். பூஜையின் நிறைவில், அட்சதை அரிசி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தடைந்த அட்சதை அரிசியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் பெற்று கொண்டனர். தொடர்ந்து, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து இந்து குடும்பங்களுக்கு வழங்க உள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பகுதி விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூறியதாவது:-

    மாநிலம் வாரியாக ராமர் கோவில் அட்சதை நிர்வாகிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. திருப்பூருக்கு வந்துள்ள அட்சதை அரிசியை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து இந்து குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் அட்சதையுடன் அரிசி கலக்கப்பட உள்ளது. பின் சிறிய பாக்கெட்டில் பேக் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து அட்சதை மற்றும் ஸ்ரீராமர் படத்துடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
    • இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

    அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அந்த வகையில் 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

    இந்தப் பணிக்காக 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு திரண்டு உள்ளார்கள்.

    இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவதே இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக்கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ.3கோடி செலவிடப்படுகிறது.

    இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    ×