search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர் கோவில் கும்பாபிஷேகம்"

    • பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
    • நாட்டின் 73 சதவீத மக்களான ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் கலந்து கொள்ளவில்லை.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் சிலை பிரதிஷ்டை, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள நாட்டில் உள்ள பெரும்பாலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலானோர் நேரில் கலந்து கொண்டனர்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிசேக் பச்சன், அபிசேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அழைப்பிதழ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மற்றும் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் அழைக்கப்பட்டனர். அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் என யாரும் கலந்து கொள்ளவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 73 சதம்வீதம் பேர் எனத்தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஐஸ்வர்ரா ராய் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "இந்திய மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட விரக்தியில் ராகுல் காந்தி இந்தியாவின் பெருமைக்குரிய ஐஸ்வர்ரா ராயை இழிவுப்படுத்தும் புதிய மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

    நான்காவது தலைமுறை அரசியல் வம்சம், எந்தவித சாதனையும் இல்லாததோடு, ராகுல் காந்தியின் முழு குடும்பத்தையும் விட இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராய் மீது இப்போது அவதூறுகளை கையாள்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

    ஐஸ்வர்யா ராயை இழிவு படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசிய பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ள பா.ஜனதா, கர்நாடகத்தை சேர்ந்தவர் இழிவுப்படுத்தப்படும்போது சித்தராமையா அமைதியாக இருக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளது.

    "உங்களுடைய தலைவர் தொடர்ந்து சக கன்னடியரை இழிவு படுத்தும் நிலையில், உங்கள் கன்னட பெருமையை நிலைநாட்டி, அத்தகைய அவமரியாதைக்கு எதிராக பேசுவீர்களா அல்லது உங்கள் முதல்வர் நாற்காலியை பாதுகாக்க அமைதியாக இருப்பீர்களா? என சித்தராமையாவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.
    • அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடந்த பூமிபூஜையை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமர் ஆலயம் கட்டப்பட்டு வந்தது.

    அயோத்தி ராமர் கோவிலை 3 கட்டங்களாக அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதல் பகுதி ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. நாகரா கட்டிடக்கலை அடிப்படையில் 2.27 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்களுடன் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.

    மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் ஆலயம் கம்பீரமாக காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்களுடன் கூடிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 நுழைவு வாயில்களும் கட்டப்பட்டுள்ளன.

    கோவிலின் தரை தளப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அங்குதான் ஸ்ரீராமரின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கருவறையில் மூலவராக 5 வயதுடைய பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதையடுத்து 3 ராமர் சிலைகள் செய்யப்பட்டன. அதில் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த பிரபல நிபுணர் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. சுமார் 200 கிலோ எடை கொண்ட இந்த சிலை பழமையான கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான விழா இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படும் என்று அயோத்தி ராமர் ஆலய நிர்வாகிகள் அறிவித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தினமும் கருவறை புனித நீரால் சுத்தப்படுத்தப்பட்டு யாக சாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. கடந்த வியாழக்கிழமை இரவு 51 அங்குல ஸ்ரீபால ராமர் சிலை கருவறை பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

    அந்த சிலைக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இறுதிக்கட்ட சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை இறுதி யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.


    இதையடுத்து இன்று காலை அயோத்தி நகரம் ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது. அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    விழாவுக்கு சுமார் 8 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி வரலாறு காணாத கோலாகலத்தை இன்று கண்டது.

    விழாவின் நாயகரான ஸ்ரீ பாலராமரை சிறப்பிக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு மேல் அவரது விமானம் அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பிரதமர் மோடி சென்று இறங்கினார். பிறகு அங்கிருந்து கார் மூலம் அயோத்தி கோவிலுக்கு 12.05 மணிக்கு வந்தார்.

    சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள் ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தினார்கள்.

    கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் குறித்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.


    திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. அப்போது 121 வேதவிற்பனர்கள் பிராண பிரதிஷ்டைக்கான மந்திரங்களை ஓதினார்கள். இதன் மூலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம் இன்று முறைப்படி தொடங்கி உள்ளது.

    ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.

    மதியம் 1 மணி வரை சுமார் ஒருமணி நேரம் கருவறை பூஜைகள் நடக்கின்றன.

    • சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்.
    • நேரலைக்கு சட்டப்படி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    சென்னையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வலம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு அனுமதிக்க கூடாது என்று காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டது.

    இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது:-

    வாய்மொழி உத்தரவை வைத்து எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வாய்மொழி உத்தரவை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது. சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்.

    அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலை, ராமர் பெயரில் பூஜை ஆகியவற்றை வாய்மொழி உத்தரவைக் கொண்டு தடுக்கக்கூடாது.

    நேரலைக்கு சட்டப்படி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜனவரி 29-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க அளிக்க வேண்டும் என கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் அயோத்தி நகரமே பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.

    இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வலம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு அனுமதிக்க கூடாது என்று காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று காலை 10.30 மணிக்கு முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • 380 அடி நீளம், 250 அடி அகலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 161 அடி உயரம் கொண்டது.
    • 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் உள்ளன.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
    • எல்.கே. அத்வானி வயது மூப்பு காரணமாக கலந்த கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 16-ந்தேதியில் இருந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால், மற்ற தலைவர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    96 வயதான பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வயது மூப்பு காரணமாக கலந்த கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் கலந்து கொள்ள இருப்பதாக விஸ்வ இந்து பரிசத் தெரிவித்து இருக்கிறது.

     


    இதனிடையே, ராமர் கோவில் திறப்பு விழா குறித்து எல்.கே. அத்வானி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "ரத யாத்திரை புறப்பட்ட போதே, ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்படும் என்ற விதி இருப்பதை நான் உணர்ந்தேன். யாத்திரை துவங்கிய சில தினங்களிலேயே, நான் வெறும் தேரோட்டி மட்டும் தான் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையான கருத்து யாத்திரை... ராமர் பிறந்த இடத்திற்கே சென்றதால் ரதம் அனைவரும் வணங்கக்கூடிய ஒன்றாக இருந்தது."

    "யாத்திரையின் போது பல்வேறு அனுபவங்கள் என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. முகம் தெரியாத நிறைய பேர் கிராமங்களில் இருந்து, என்னை சந்திக்க வந்தார்கள். அவர்களின் முகம் முழுக்க உணர்ச்சி நிரம்பி இருந்தது. அவர்கள் எனக்கு வணக்கம் தெரிவிப்பர். ராமர் கோஷம் எழுப்புவர். அப்போது, மக்கள் ராமர் கோவில் வேண்டும் என்ற கனவுடன் இருந்தனர் என்ற தகவல் தெளிவாக இருந்தது."

    "தற்போது பிரதமர் மோடி கோவிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார், அவர் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் சார்பில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்," என தெரிவித்துள்ளார்.

    • 96 வயதான எல்.கே. அத்வானி கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் இருந்து வருகிறது.
    • ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தீவிரமாக இருந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 16-ந்தேதியில் இருந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முக்கியமானவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால், மற்ற தலைவர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி கலந்து கொள்வார் என விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது. 96 வயதான அவர், வயது மூப்பு காரணமாக கலந்த கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. தற்போது கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டள்ளது.

    இதுகுறித்து விஸ்வ இந்து பரிசத் தலைவர் அலோக் குமார் கூறுகையில் "கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக அத்வானி தெரிவித்தார். தேவைப்பட்டால் அவருக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதேவேளையில் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்" என்றார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என 1980, 1990-களில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தீவிரமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா கட்சியை தொடங்கியவர்களில் இருவரும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், வயது மூப்பு காரணமாக  அயோத்தி கும்பாபிஷேக விழாவில் இருவரும் கலந்து கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர்.

    இந்நிலையில், வருகிற 22-ந்தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.


    அதற்காக வரும் 21-ந்தேதியே நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர்.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8000 பேரில் 3500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர். 8000 பேருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வரும் 23-ந்தேதி சென்னை திரும்புகிறார்.

    ×