என் மலர்
இந்தியா

ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை வழக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு
- சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்.
- நேரலைக்கு சட்டப்படி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுடெல்லி:
சென்னையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில செயலாளர் வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. ராமர் பெயரில் பூஜை, பஜனை, ஊர்வலம், அன்னதானம், அர்ச்சனை ஆகியவற்றுக்கு அனுமதிக்க கூடாது என்று காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. நேரலை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது:-
வாய்மொழி உத்தரவை வைத்து எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வாய்மொழி உத்தரவை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது. சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்.
அயோத்தி ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நேரலை, ராமர் பெயரில் பூஜை ஆகியவற்றை வாய்மொழி உத்தரவைக் கொண்டு தடுக்கக்கூடாது.
நேரலைக்கு சட்டப்படி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனவரி 29-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க அளிக்க வேண்டும் என கூறி வழக்கை தள்ளிவைத்தார்.






