search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி"

    • ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.
    • ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    சென்னை:

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தீபாவளிக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

    ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.

    ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என அமைச்சர் பார்வையிட்டார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தேனிக்கு வந்தார். முன்னதாக லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரத்தை கேட்டறிந்தார். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதா என கேட்டறிந்தார்.

    மாணவர்களின் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வி ஆண்டில் மேலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தையும் பார்வையிட்டு அங்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். மாணவர்களையும் தனியாக வரவழைத்து அவர்களிடம் தரமான கல்வி அளிக்கப்படுகிறதா? வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். அமைச்சர் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசு பள்ளிக்குள் வந்து ஆய்வு மேற்கொண்டதுடன் மாணவர்களிடமும் விசாரணை நடத்தியது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது.
    • மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த தளவாய்பாளையத்தில் இன்று கத்திரி நத்தம் ஊராட்சி மன்ற அலுவலக விரிவாக்க கட்டிடம் மற்றும் கூட்ட அறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பின்பற்றி இந்த மாதத்தில் தெலுங்கானா மாநிலத்திலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    பள்ளிகளில் பழுதடைந்த சுவர்கள், விரிசல் ஏற்பட்ட கட்டிடம் , பழுது அடைந்த கட்டிடங்களை அகற்றும் பணி ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கப்பட உள்ளதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்தப் பணிகள் நடந்து வருகிறது. மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுத்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளோம்.

    ஒரு திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று ஒரு திட்டத்தை கூறினால் அது கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியாது. தகுதி வாய்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை விடுபடாமல் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு சங்கத்துக்கும் போன் செய்து அழைத்திருந்தோம்.
    • எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் வந்து தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சென்னையில் நாளை போராட்டம் நடத்த உள்ளது.

    இந்த சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை காத்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு சங்க நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு சங்கத்துக்கும் போன் செய்து அழைத்திருந்தோம். அவர்களும் என்னிடம் காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருவதாக நேற்று தெரிவித்து இருந்தனர்.

    நான் இன்று காலை 8 மணியில் இருந்து எனது வீட்டில் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. பரவாயில்லை. அவர்களுக்குள்ளே ஒரு சில முரண்பாடுகள் இருக்கிறது. அப்போதும் கூட நான் எல்லோரும் பேசி ஒருமித்த கருத்தோடு என்னை பார்க்க வாருங்கள் என்றேன். உங்களுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.

    அதன்படி வீட்டில் 8 மணியில் இருந்து காத்திருந்தேன். 9 மணி வரை வரவில்லை. அதன் பிறகு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். இதன் பிறகு மறுபடியும் 10 மணியில் இருந்து எனது வீட்டுக்கு சென்று ஆசிரியர்களுக்காக காத்திருந்தேன்.

    இன்று நாள் முழுவதும் காத்திருக்கிறேன். அவர்களுக்காக எனது இல்லத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் வந்து தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம். பேச்சுவார்த்தைக்காக அவர்களை மீண்டும் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு விழாவில் பங்கேற்று விட்டு மதியம் மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காரில் புறப்பட்டார்.
    • பாதுகாப்பு பணிக்காக ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தருமபுரி:

    அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சேலம் வந்தார். அவர் அரசு விழாவில் பங்கேற்று விட்டு மதியம் மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார்.

    அப்போது அவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தபோது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் காரிமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மகேஷின் உடல் நிலை குறித்து விசாரித்தனர். மேலும் தருமபுரி மாவட்ட தி.மு.க செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மாநில பொறுப்பாளர் சூடபட்டி சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனே அமைச்சரை பார்ப்பதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு திரண்டனர்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் காட்டு தீ போல் பரவியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும்.
    • மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கூடங்களை திறக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். கோடை விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாடங்களை விரைந்து முடிக்க இனி சனிக்கிழமையிலும் வகுப்புகள் நடைபெறும்.

    மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான தகவல் வரவில்லை. 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
    • வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப்படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளி வாகனங்கள் நல்ல முறையில் இயங்குகிறதா? எனவும் அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற முழு விவரம் தெரியவரும்.

    முதலமைச்சரின் வானவில் மன்றம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளன.

    கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு தகுந்தாற்போல் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்திருந்தோம்.
    • சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந் தேதிக்கு தள்ளி வைத்திருந்தோம்.

    ஆனால் அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்கள் அதுவும் 10-ம் வகுப்புக்கு மேல் திறந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.
    • மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருச்சி:

    திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் மலைக்கோட்டை கிளையில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா நடந்தது.

    மேலும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் மண்டலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை பணிமனை கிளையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 லட்சம் பணப்பலன்களை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது. இன்றைக்கு அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர வேலை போக்குவரத்துக்கழகத்தில் உள்ளது.

    ஆனால் தமிழகத்தில் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதியத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறார். அதேபோன்று கடந்த ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பணியாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு போக்குவரத்து கழகத்திற்கு முதல்வர் ரூ.1,500 கோடி வழங்கினார். தற்போது மகளிருக்கு இலவச கட்டணம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த தொகையையும் சேர்த்து நடப்பாண்டுக்கு ரூ.2,200 கோடி வழங்க இருக்கிறார்.

    தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதேபோன்று கடந்த ஆட்சியில் ஒரு நடத்துனர், டிரைவர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் இப்போது முதல்வர் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

    இந்தியாவிலேயே 21 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படும் ஒரே மாநிலம் தமிழகம் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
    • கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் இப்போது கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம். ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில் திட்டமிட்டப்படி ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    ஏற்கனவே திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை.
    • பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் அறிவித்துள்ளார்.

    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது வினாக்கள் விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது பேசிய அவர், "விராலிமலை தொகுதி அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஓடி வந்த இந்தி பெண்ணே கேள் நீ தேடி வந்த நாடு இதுவல்லவே என்று தன்னுடைய 13-வது வயதில் போர் பாவை பாடி, 86-வது வயதில் தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்த கலைஞரின் நூற்றாண்டு ஒட்டி, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், பணியை குறிக்கும் விதத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் வருகிறது என்றார்.

    மேலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை. மேலும், பயன்பாடற்ற காவல் நிலைய குடியிருப்பு மற்றும் பொதுப்பணித்துறை சாலையாக இருப்பதாலும் பள்ளிக்கு இடம் வழங்க ஏற்றதாக இல்லை.

    எனவே பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்டவுடன் நபார்டு திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவண செய்யப்படும்", என்றார்.

    ×