search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி"

    • மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

    ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வரை 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்கள் சேர்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியில் 4,959 பேரும் மேல்நிலைப் பள்ளியில் 5,452 பேரும் சேர்ந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 3,890 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 பேரும் சேர்ந்து அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளனர்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளில் மட்டும் 46,586 பேரும் நடுநிலைப் பள்ளிகளில் 21,853 பேரும் சேர்ந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிகளில் 6,287 பேரும், மேல்நிலைப் பள்ளிகளில் 5,350 பேரும் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கான அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.

    • ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
    • பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

    சென்னை:

    முதலமைச்சரின் முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாதவாறு உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வகையில் 'நேரடி பயனாளர் பரிவர்த்தனை' முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இப்பணியை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

    அப்போதே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

    பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நேரத்திலும், சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

    பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைக்கும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த்துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும்.

    விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தளத்தின் வாயிலாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    • வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

    தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மணற்கேணி செயலியார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    அதேபோல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒரு கான்செப்ட் எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். தனியார் பள்ளி கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தார்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறது.

    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்றரை லட்சம் கோடி தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் 44 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளில் பந்தல் அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.

    ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை சீர் அடையும் போது அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.
    • அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    'கல்வி மட்டுமே சமத்துவம் மலர்ச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற கலைஞரின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.

    பல்வேறு புதிய திட்டங்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தி உள்ளார். எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ. 44,042 கோடி ஒதுக்கி உள்ளார்.

    தமிழ்நாடு அரசு கல்வித் துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது.

    அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

    மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆயிரத்து 209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் 22 ஆயிரத்து 931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    மேலும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம்.

    சென்னை:

    நாடு முழுவதும் 75-வயது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலை உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதன்பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் , விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில், பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா' என பதிவிட்டு குடியரசு தின விழாவில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    • மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.
    • ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

    "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

    ஆலயம் பதினாயிரம் நாட்டல்

    அன்னயாவினும் புண்ணியம் கோடி

    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது!

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள் என கூறியுள்ளார்.

    • தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் முறையே மே மாதம் 10, 14, 6-ந்தேதிகளில் வெளியிடப்படுகிறது.

    இதனிடையே பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் ஏற்படுமா? என கேள்வியும் எழுந்தது.

    இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கூறியதாவது:-

    10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை. தேர்வுக்கான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் பாராளுமன்ற தேர்தல் தேதி இருக்கும்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

    • உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.
    • மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    * 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை.

    * உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததற்கு பின்பாக பள்ளிகள் திறக்கப்படும்.

    * தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
    • ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்வது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே இருக்கிறார்.அந்த சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

    மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு அது தயார் செய்யப்படாமல் இருந்தது. வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா-வங்கி புத்தகங்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென அரசு பள்ளிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளி வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்று ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவு தயாரிக்கும் கூடத்திற்கும் சென்று சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியதாவது:-

    நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் பேசுகிறேன். இது பெருமையாக உள்ளது. நமக்கு என்று ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

    அதன் விவரம் வருமாறு:-

    2024 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10-ல் வெளியிடப்படும்.

    மார்ச் 26-ந்தேதி : தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

    மார்ச் 28-ந்தேதி : ஆங்கிலம்

    ஏப்ரல் 1-ந்தேதி : கணிதம்

    ஏப்ரல் 4-ந்தேதி : அறிவியல்

    ஏப்ரல் 6-ந்தேதி : மற்ற மொழிப்பாடம்

    ஏப்ரல் 8-ந்தேதி : சமூக அறிவியல்

    11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி முடிவடைகிறது. பொதுத்தேர்வு 2024 மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி நிறைவு பெறும். மே 14-ந்தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

    மார்ச் 4-ந்தேதி : மொழிப்பாடம்

    மார்ச் 7-ந்தேதி : ஆங்கிலம்

    மார்ச் 12-ந்தேதி : இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள்

    மார்ச் 14-ந்தேதி : கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள்,

    நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

    மார்ச் 18-ந்தேதி : உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

    மார்ச் 21-ந்தேதி : வேதியியல், கணக்கு, நிலவியல்

    மார்ச் 25-ந்தேதி : கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)

    12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது. மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். மே 6-ம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    மார்ச் 21-ந்தேதி : மொழிப்பாடம்

    மார்ச் 5-ந்தேதி : ஆங்கிலம்

    மார்ச் 8-ந்தேதி : கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

    மார்ச் 11-ந்தேதி : வேதியியல், கணக்கு, நிலவியல்

    மார்ச் 15-ந்தேதி : இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள்

    மார்ச் 19-ந்தேதி : கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)

    மார்ச் 22-ந்தேதி : உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்.

    • ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.
    • ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    சென்னை:

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தீபாவளிக்குப் பின் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.

    ஜேஇஇ, பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும்.

    ஆசிரியர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.

    ×