search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமன்"

    • அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)
    • அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்

    திருவாரூர் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள முக்கிய புறக்கோவில்கள்

    1. அருள்மிகு அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்ற தலம்)

    2. அருள்மிகு கமலாம்பாள்

    3. அருள்மிகு நீலோத்பலாம்பாள்

    4. அருள்மிகு ராகுகால ரவுத்திர துர்க்கை

    5. அருள்மிகு ருணவிமோசனர்

    6. அருள்மிகு விஸ்வகர்மேஸ்வரர்

    7. அருள்மிகு தெட்சிணாமூர்த்தி சுவாமி

    8. அருள்மிகு ஆனந்தீஸ்வரர் கோவில்

    9. அருள்மிகு சித்திஸ்வரர் கோவில்

    10. அருள்மிகு ஹயக்ரீஸ்வரர் கோவில்

    11. அருள்மிகு தட்சனேஸ்வரர் கோவில்

    12. அருள்மிகு அண்ணாமலேஸ்வரர் கோவில்

    13. அருள்மிகு வருணேஸ்வரர்

    14. அருள்மிகு ஓட்டு தியாகேசர்

    15. அருள்மிகு துளசிராஜா பூஜித்த கோவில்

    16. அருள்மிகு தேவேந்திரன் பூஜித்த லிங்கம்

    17. அருள்மிகு சேரநாதர்

    18. அருள்மிகு பாண்டியநாதர்

    19. அருள்மிகு ஆடகேஸ்வரம்

    20. அருள்மிகு புலஸ்தியரட்சேஸ்வரர் கோவில்

    21. அருள்மிகு புலஸ்திய பிரம்மேஸ்வரர் கோவில்

    22. அருள்மிகு பக்தேஸ்வரர் கோவில்

    23. அருள்மிகு வில்வாதீஸ்வரர் கோவில்

    24. அருள்மிகு பாதாளேஸ்வரர்

    • இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.
    • திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் கருவறை சிறப்பு

    திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோவிலில் கருவறைச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன் ஆகிய உருவங்கள் கல் திருமேனிகளாக உள்ளன.

    இக்கருவறைச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளன.

    புற்றிடங் கொண்ட பரம்பொருள் கருவறை சுவர்கள் தூண்களால் சூழப்பட்டு அத்தூண்களுக்கு இடையே தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் ஆகிய உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன.

    லிங்கோற்பவரின் இருபுறமும் அன்னமூர்த்தியான பிரம்மனும் வராகமூர்த்தியான விஷ்ணுவும் நின்றுள்ளனர்.

    இது மட்டுமின்றி கருவறை சுவர்களும் கூரைகளும் முழுவதம் ஊசிமுனை இடைவெளியின்றி வண்ண வண்ண ஓவியங்களால் நிரம்பியுள்ளன.

    திரிபுரதகனம், காம தகனம், காலசம்காரம், கஜசம்காரம், ஜலந்தர வதம், தட்சயாக நாசம், அந்தகாசுரவதம், பிரம்ம சிரச்சேதம் ஆகிய அஷ்ட வீரட்ட வரலாறுகளும் நடராஜப் பெருமானின் ஆனந்தக் கூத்து தரிசனமும் மற்றும்

    புஜங்க லலித மூர்த்தி, ஜதியோ நந்தமூர்த்தி, ஊர்த்துவத்தாண்டவர் போன்ற பல்வேறு வகையான நடனமூர்த்திகளும் வண்ண சித்திரங்களாக உள்ளன.

    சட்டைநாதர், பிட்சாடணர், திரிசங்கு ரட்சக மூர்த்தி, ஆயதோத்தார மூர்த்தி, நீலகண்டர், அகோர வீரபத்திரர், மான் மழு தாங்கி கைகூப்பி நின்ற நிலையில் உள்ள நந்தி தேவர்,

    அமர்ந்த நிலையில் உள்ள அதிகார நந்தி, கால பைரவர், தண்டாயுதபாணி, நிருதி, யமன், வருணன், இந்திரன், அக்கினி, முதலிய எண் திசை பாலர்கள்,

    அடியார்கள் வணங்கும் சிவலிங்கம், கங்காளர், கங்காதரர், மகிஷாசுரமர்தனி, ராசிச் சக்கரம் போன்ற பலப் பல புராண வரலாறுகளும்

    சிவ வடிவங்களும் தெய்வங்களும் தேவர்களும் வண்ணச் சித்திரங்களாகச் சுவர்கள், கூரைகள் முழுவதும் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    ஆகையால் திருவாரூர் தலத்துக்கு செல்லும்போது நின்று, நிதானமாக இந்த வண்ண சித்திரங்களை பார்த்து ரசித்து வாருங்கள்.

    • ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.
    • திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்-ரவுத்திர துர்க்கை

    தியாகேசர் ஆலயத்தில் தெற்கு பிரகாரத்தில் ரவுத்திர துர்க்கைக்கு தனி ஆலயம் உள்ளது.

    மண பருவத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ராகுகால பூஜையின்போது இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கப் பெறலாம்.

    ரவுத்திர துர்க்கை என்பதற்கு பெயர் காரணம் அவளுடைய ருத்ராம்சம்.

    ராகு தோஷ நிவர்த்திக்கும் இந்த துர்க்கையை லட்சார்ச்சனை செய்து வழிபடலாம்.

    திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கைகள்.

    முதல் பிரகாரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி பிரதான துர்க்கை.

    இரண்டாம் பிரகாரத்தில் அதற்கு அங்கமாக முதல் பிரகாரத்தில் மூன்றும், இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் என எட்டு துர்க்கைகள் உள்ளன.

    • அனுமன், சிவபெருமானின் அம்சம்.
    • சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர்.

    விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை 'ஆதியந்த பிரபு' என்பார்கள். ஒரு புறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது இந்த வடிவம். `ஆதி' என்பது `முதல்' என்றும், `அந்தம்' என்பது `முடிவு' என்றும் பொருள்படும்.

    அந்த வகையில் முதல் கடவுளான விநாயகரை வணங்கி ஒரு காரியத்தை தொடங்கினால், அதை அனுமன் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள், இரண்டு பிரம்மச்சாரிகள் இணைந்த இந்த வடிவத்தை தங்கள் இஷ்டதெய்வமாக வழிபடுவார்கள்.

    அனுமன், சிவபெருமானின் அம்சம். அதே போல் சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர். இதனால் இவர்களை வழிபடுவது பரம்பொருளான ஈசனையும், அம்பாளையும் வணங்குவதற்கு சமமானது.

    • இவரை நகரின் காவல் தெய்வம் என்றும் சொல்லலாம்.
    • அனுமனை ராணி மங்கம்மாள் வழிபட்டதாக கூறப்படுகிறது.

    சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் சென்னையின் நுழைவாயிலான கிண்டியில், எம்.கே.என். சாலையில், மாங்குளம் அருகில் உள்ளது.

    வியாசராஜரால் நிறுவப்பட்ட இந்த ஆஞ்சநேயர், சென்னையின் நுழைவாயிலில் இருப்பதால் இவரை நகரின் காவல் தெய்வம் என்றும் சொல்லலாம்.

    இந்த அனுமனை ராணி மங்கம்மாள் வழிபட்டதாக கூறப்படுகிறது.

    இவருக்கு வெண்ணைக்காப்பு சாத்தி வேண்டிக் கொண்டால் தீராத நோய்தீரும். கல்யாண வரம் வேண்டுவோர் ஒன்பது வியாழக்கிழமை இவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வலம்வர கெட்டிமேளம் கொட்டுவது நிச்சயம் என்கிறார்கள்.

    • தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
    • வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோவில்களில் சக்தி வாய்ந்தது, காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோவில். கிஷ்கிந்தை ராஜ்யத்தில், சுக்ரீவனுக்கு மதியூகம் கொண்ட அமைச்சனாக, சொல்லின் செல்வனாக, உற்ற நண்பனாக விளங்கிய அனுமன், ராமரை தரிசனம் பெற்ற பின்னர் ஆஞ்சநேயராகப் பெயர்கொண்டு, சிரஞ்சீவியாகி, இன்றும், அனைவராலும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.

    வாயு புத்திரனாகிய ஸ்ரீ ஹனுமன் ஒருவரே வல்லமை படைத்தவர். விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் இணைக்கும் பிரமாண்ட வடிவம் எடுத்துத் தன் ஆற்றலை நிரூபித்தவர். கொடிய அசுரர்களையும், தீவினை புரிவோரையும் எளிதாக அழிக்கக்கூடிய பலம் பொருந்தியவர் என்றாலும், முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் போற்றும் வகையில் பணிவையும், எளிமையையும் கைக்கொண்டவர்.

    கொங்குவள நாட்டில் விராட மன்னர் ஆட்சி புரிந்த தலம் தாராபுரம். புராண வரலாற்றில் இடம் பெற்ற ஊர். பஞ்சபாண்டவர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் ஒரு வருடம் அஞ்ஞானவாசம் மேற்கொண்டபோது யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் பூண்டு வாழ்வதற்காக அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்தான் விராட நகர் என்ற இன்றைய தாராபுரம்.

    தாராபுரம் நகரானது வளமையான வயல்களால் சூழப்பட்டதாகும். வான் உயர்ந்து வளர்ந்த கனி மரங்களையும் தன்னகத்தே கொண்டது. சோலைகளும், நந்தவனங்களும் சூழ்ந்திருக்க வற்றாத ஜீவநதியான அமராவதி ஆறு இங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. தாங்கள் புனைவேடம் பூண்டிருந்த காலத்தில் தங்களது உடைமைகளையும், ஆயுதங்களையும் தில்லாபுரியம்மன் ஆலயத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள் பஞ்ச பாண்டவர்கள்.

    இத்தகைய புராண பிரசித்தி பெற்ற இடத்தில்தான் மாத்வ சம்பிரதாயத்தில் வந்த ஸ்ரீவியாசராஜர் எனும் மகான் இத்தலத்தில் அனுமனை பிரதிஷ்டை செய்ய விரும்பி அவ்வாறே செய்தார். பாரத தேசம் முழுவதும் 732 இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்த அவர் தாராபுரத்தையும் அவற்றில் ஒன்றாகத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், இத்தலத்தின் பெருமையை எளிதாக உணரலாம். அந்தவகையில் 89வது மூர்த்தமாக விளங்குகிறார் இந்த அனுமந்தசுவாமி.

    இது அடர்ந்த காட்டுப் பகுதியாக விளங்கியதால் 'காடு' என்ற அடைமொழியுடன், இந்த ஆஞ்சநேயர் 'காடு ஹனுமந்தராயன்' என்று போற்றப்பட்டார். 1810ல் கோவை கலெக்டராக விளங்கிய டீலன் துரை தாராபுரத்தில் முகாம் அமைத்திருந்தபோது அவருக்கு ராஜபிளவை என்ற கடுமையான நோய் ஏற்பட்டது. அப்பொழுது அவரைச் சுற்றியிருந்தவர்கள் இந்த ஆஞ்சநேயமூர்த்தியின் பராக்கிரமத்தை விளக்கிச் சொல்ல, அவர்களுடைய யோசனைப்படி அனுமந்தசுவாமியை அவர் தரிசனம் செய்ய, உடனே அந்த நோய் அவரை விட்டு விலகியது.

    இந்த நன்றிக்கடனாக, அவர் சுவாமிக்குத் தன் சொந்தப் பொறுப்பில் கர்ப்பகிரகத்தை கட்டிக் கொடுத்தாராம். திருப்பதி வெங்கடாசலபதியை போன்று 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு பிரமாண்டமாக விளங்குகிறார் அனுமந்தசுவாமி. இவரது இரண்டு பாதங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இடுப்பில் மணி சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்புப் பட்டையில் கத்தி செருகப்பட்டிருக்கிறது. வலது கை அபயம் காட்டி அருள்கிறது. இடது கையில் சௌகந்தி மலர் ஏந்தியிருக்கிறார். கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகள் அணிசெய்கின்றன.

    திருமுகம் வடகிழக்கு திசை நோக்க, அருள்பாலிக்கிறார். கிரீடத்தின் பின்புறத்தில் பட்டா கத்தி ஒன்றும் உள்ளது. தலைக்கு அருகே வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன. ஆஞ்சநேயருக்கு அடுத்து இடது புற மண்டபத்தில் ராமர் சந்நதி உள்ளது. சீதாதேவி, ஆஞ்சநேயர் சகிதமாக ராமர் திருக்காட்சி நல்குகிறார். ராமருக்கு அர்ச்சனைகள் செய்தபின் அனுமனுக்குச் செய்யப்படுகிறது. இது ஆரம்ப காலம் தொட்டு நடைபெறும் இந்தக் கோவிலின் சம்பிரதாயமாகும்.

    துங்கபத்ரா நதிக்கரையில் மந்த்ராலயம் என்கிற தலத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகையை (புனித மண்) கொண்டு வந்து இந்த ராமர் சந்நதியை அமைத்திருக்கிறார்கள். அரச மரம் சுமார் 250 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. நரசிம்ம தீர்த்த குளமும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. நவகிரக தோஷங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆஞ்சநேயரும், கணபதியும்தான் என்று சாஸ்திரங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

    நெய்தீபம், வெண்ணெய், வடை மாலை ஆகியவற்றைப் படைத்து 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. ஆஞ்சநேயரின் திருவடிகளை உளமாற துதித்து வணங்கிவந்தால், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கியே செல்லும். தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

    ஆலயத் தொடர்புக்கு தொலைபேசி எண். 0458 220749.

    • சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
    • பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

    தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு லட்சம் ராம நாமம் ஜெபமும், அதைத்தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு வடை மாலைகளாலான சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு முகூர்த்த அர்ச்சனையும் நடைபெறுகிறது. அந்த சமயம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மூலை அனுமாருக்கு குங்குமம், மஞ்சள், செந்தூரம் கொண்டு வந்து தந்து முகூர்த்த அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    இதைத்தொடர்ந்து கோவிலை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலையை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதம்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    அதேபோல் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.
    • அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை, புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் அணைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் மலை அடிவாரத்தின் வைகை ஆற்றுப்படுகையில், வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.

    வலது கையில் சஞ்சீவி மலையையும், இடது கையை தொடையில் ஊன்றியவாறும் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி இக்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரின் இடது கண் அயோத்தியையும், வலதுகண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்ப்பது போன்றும் உள்ளது.

    மனக்கஷ்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து 'அணைப்பட்டி ஆஞ்சநேயர்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான விதம் வியப்பானது.

    கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.

    அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, 'வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு' என்று கூறி மறைந்தார்.

    ஆஞ்சநேயருக்கு கோவில்

    கனவு கலைந்ததும் திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தை தேடினார். அப்போது கனவில் கண்டபடி, ஒரு இடத்தில் தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது.

    அந்த பாறையை தோண்டி பார்க்க முயன்றார். என்ன அதிசயம்...! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என ஜமீன்தார் அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    திருவிழாக்கள்

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோவிலில் அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

    செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கவும், பணி மாற்றம் விரும்புபவர்களும், பிற வேண்டுதல்களுக்காகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து வேண்டிச்செல்கின்றனர்.

    தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    பீமன் வழிபட்ட ஆஞ்சநேயர்

    ஆஞ்சநேயர் கோவில் தோன்றிய விதம் குறித்து புராதனகால செவிவழி செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. அதாவது, மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே மலை அடிவாரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி பீமனிடம் தர்மர் கூறினார். உடனே பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்றுக்கு வந்தார்.

    அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்தது. இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்கு திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மர் தனது ஞானத்தால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். பின்னர் தம்பியிடம் உன்னை ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்றார்.

    பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மர், தம் தம்பியான பீமனிடம், 'ஆஞ்சநேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா' என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டார். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்த செவி வழி செய்தி விளக்குகிறது.

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 1001 முறை ராமநாம ஜெபம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி 10,12-ம் வகுப்பு மாணவர்கள் எழுத உள்ள அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், 1001 முறை ராமநாம ஜெபமும் நடைபெற்று, பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது.
    • அன்னதானம் நடைபெற உள்ளது.

    திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் தை மாத மூல நட்சத்திர வைபவம் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் அன்று காலை 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், 11 மணிக்கு கோ பூஜை, பகல் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 1.30 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
    • வாங்கல் கொடுக்கல்களில் சிக்கல்கள் ஏற்படும்.

    சிவல்புரிசிங்காரம் பேசியதாவது:-

    அனுமன் மூல நட்சத்திரம், அமாவாசை திதியில் பிறந்தவர் எனவே அன்று பிறந்தவர்கள் எல்லாம் அனுமன் கவசம் பாடி சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்லலாம். அதுமட்டுமல்ல ஏழரைச் சனி,அஷ்டமத்துச் சனி,அா்த்தாஷ்டச் சனி, கண்டகச் சனி போன்றவற்றின் ஆதிக்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வாங்கல் கொடுக்கல்களில் சிக்கல்கள் ஏற்படும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்கள் அனுமனை வழிபட்டால் தடைகள் தானாக விலகும். எதிரிகள் பலம் குறையும்.எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    துளசி மாலை அணிவித்தால் துயரங்கள் துள்ளி ஓடும். வடைமாலை சூட்டினால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். இப்போது மிதுனம்,கடகம், துலாம், தனுசு,மகரம். கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சனி ஆதிக்கத்தில் இருப்பவர்கள். அவர்கள் அவசியம் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்.அதுமட்டுமல்லாமல் மற்ற ராசிக்காரர்களும் அனுமன் வழிபாட்டை மேற்கொண்டால் சீரும், சிறப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×