search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித் குமார்"

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தின் மூலம் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி தமிழில் அறிமுகமாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #JhanviKapoor
    இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்கவும், அந்த படத்தில் தங்கள் மகள் ஜான்வியை நடிக்க வைக்கவும் விருப்பப்பட்டுள்ளார்.

    அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் முதன்முறையாக போனி கபூர் தயாரிப்பில் ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்தி பிங்க் படத்தின் கதையில் அஜித்துக்காக சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார். வித்யா பாலனுக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், இதில் இன்னொரு மாற்றமாக அஜித்துக்கு ஒரு மகள் இருப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மகள் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்கிறார் என்றும் செய்தி வருகிறது. 



    தடக் என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமான ஜான்விக்கு தமிழில் இது முதல் படமாக அமைய இருக்கிறது. #Thala59 #AjithKumar #ThalaAjith #JhanviKapoor

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, இந்தியில் ஷ்ரத்தா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Thala59 #AK59 #ShraddhaSrinath
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தை வரும் கோடை விடுமுறைக்கே ரிலீஸ் செய்வதற்காக பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என தென் இந்திய மொழிகளில் நடித்து வந்த டாப்சி இந்தியில் அறிமுகமாகி நடித்து வந்தாலும், அவருக்கு பிங்க் திரைப்படம் தான் பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தியின் முன்னணி கதாநாயகியாகவும் மாற்றியது. 


    இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    “குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி சில நாள்கள் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற உள்ளதால் படக்குழு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Thala59 #AK59 #ShraddhaSrinath

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் பணிபுரிபவர்கள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #AK59 #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து போனி கபூர் கூறும் போது, வித்யாபாலன் தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும், திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளையும், கே.கதிர் கலை பணிகளையும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள்.

    அஜித் பற்றி போனி கபூர் கூறும்போது, “இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்தில் அஜித்குமாருடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை கிடைக்கவில்லை. ‘பிங்க்’ படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை அஜித் தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்பதால் அதனை உருவாக்குகிறோம். அத்துடன் அஜித்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இணைவது மகிழ்ச்சி. பிங்க் ரீமேக்கை மே 1-ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அஜித்துடனான இரண்டாவது படம் 2020 ஏப்ரலில் திரைக்கு வரும். எச்.வினோத் போன்ற சிறந்த இயக்குநர் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார். #AK59 #Thala59 #AjithKumar #VidyaBalan #ShraddhaSrinath

    கட்சியில் சேரும்படி அஜித்தை நாங்கள் அழைக்கவில்லை என்று பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். #Ajith #BJP #Tamilisai Soundararajan

    சென்னை, ஜன.22-

    திருச்சியில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை பேசும்போது நடிகர் அஜித்குமார் பற்றி பாராட்டி பேசினார். இதை அங்கிருந்த அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.

    இதையடுத்து அஜித் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் எந்தக் கட்சி மேடைகளிலும் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவித்தார்.

    இந்த நிலையில் இதுபற்றி டாக்டர் தமிழிசை இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

     


    நான் அஜித்தை கட்சிக்கு வரும்படி அழைக்கவில்லை. எங்கள் கட்சியில் சேருவார் என்றும் சொல்லவில்லை.

    நான் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்ற முறையில் ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மனிதாபிமானத்துடன் அவர் செய்த உதவியை பாராட்டினேன். நல்ல உள்ளம் கொண்ட நடிகர் என்று குறிப்பிட்டேன். அழைக்கவில்லை. இது தவறா? அவர்கள் நடித்து கொண்டிருந்தால் நடித்து கொண்டிருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன், தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். #Thala59 #PinkRemake #VidyaBalan
    விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் வித்யா பாலன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இந்தி சினிமாவில் உண்டு.

    முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே அவர் தேர்வு செய்வார். ரீமேக் படங்களில் நடிக்கக் கூடாது என்பதையும் வழக்கமாகவே வைத்திருந்தார். மூன்றாம் பிறை படம் இந்தியில் சத்மா என்ற பெயரில் 1983-ம் ஆண்டு உருவானது. அந்தப் படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் செய்வதற்காக ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனிடம் பேசப்பட்டது. ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்து அதன் தரத்தை குறைத்துவிடக் கூடாது என அதில் நடிக்க மறுத்தார்.



    தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் எவ்வாறு நடிக்கச் சம்மதித்தேன் என்பதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “இந்தப் படத்தில் நான் சிறிய வேடத்தில் நடிக்கிறேன். போனி கபூர் தயாரிக்கிறார். அவர்தான் சிறப்பு தோற்றம் தான் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் உங்களுக்காக நடிக்கச் சம்மதிக்கிறேன் என்றேன். எனக்குப் படங்களை ரீமேக் செய்வது பிடிக்காது. முழுக்க முழுக்க போனி கபூருக்காகவே நடிக்கிறேன்” என்று வித்யா பாலன் கூறியுள்ளார். #Thala59 #AjithKumar #PinkRemake #VidyaBalan

    பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar
    விஸ்வாசம் படம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

    கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரைக் காப்பாற்றச் செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது. இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.



    பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. ‘விஸ்வாசம்‘ படத்தின் கதாநாயகன் அஜித் மற்றும் இயக்குனர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்’’ . இவ்வாறு சரவணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara
    தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. சர்கார் கதை திருட்டு விவகாரம் ஐகோர்ட்டு வரை போனது. அடுத்து விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 96 படத்துக்கும் கதைத்திருட்டு பிரச்சினை வந்தது.

    தற்போது அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்துக்கும் இதே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா.



    பின்னர் மகனுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட அதை தந்தை எப்படி சரி செய்கிறார்? மீண்டும் அந்த குடும்பம் எப்படி இணைகிறது என்பது 2007-ம் ஆண்டு வெளியான துளசி படத்தின் மையக்கரு. இந்த படத்தில் வெங்கடேஷ்-நயன்தாரா இருவரும் கணவன் மனைவியாக நடித்து இருந்தனர்.

    இந்த கதைதான் விஸ்வாசம் படத்தின் மையக்கதையும் கூட. 10 ஆண்டு இடைவெளி இருப்பதால் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். மையக்கரு இரண்டு படங்களுக்கும் ஒன்றுதான். ஆனால் டைட்டிலில் கதையை எழுதியவர்களாக சிவா மற்றும் ஆதி நாராயணனின் பெயர்கள்தான் இடம்பெற்றுள்ளன. இது கூடிய விரைவில் பிரச்சினையை கிளப்புமா அல்லது உரிமம் பெற்றுதான் படத்தை எடுத்தார்களா என்பது போக போகத் தான் தெரிய வரும். #Viswasam #AjithKumar #Nayanthara

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. #Petta #Viswasam
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் நேற்று முன்தினம் வெளியானது.

    இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால் பலத்தபோட்டி ஏற்பட்டது. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது.

    தொடர்ந்து 2 படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி-அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றி வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது:- இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது.

    சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.



    சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம். இங்கே பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும்.

    தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது.

    விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ படம் இதுவரை 83 ஆயிரம் டாலர்கள் தான் வசூல் செய்துள்ளது.

    ‘பேட்ட’ படத்தின் ஓடும் நேரம் 2 மணி 51 விநாடிகள். எனவே அதிக காட்சிகள் திரையிட முடியாது. இடைவேளை எல்லாம் விட்டு, ஒரு காட்சி முடியவே குறைந்தது மூன்றரை மணி நேரமாகும். இதனால், குறைவான காட்சிகளே திரையிட இயலும். இரண்டாவது நாளில் இருந்து பேட்ட படத்துக்கு கூடுதலாக 100 திரைகள் கிடைத்து இருக்கின்றன.



    எனவே பேட்ட வசூல் இனிதான் அதிகரிக்கும். தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது.

    பல திரையரங்குகளில் சீட்கள் போக சேர்கள் போட்டு ரசிகர்களை அமர வைக்கிறார்கள். அந்த அளவுக்கு கூட்டம் உள்ளது. ஜனவரி 16-ந் தேதிக்கு பிறகு எந்த படம் லாபகரமாக இருக்கும் என்பதை சரியாக கூறிவிடலாம்.

    இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதிகபட்சம் தமிழகத்தின் இறுதி வசூலில் ஒரு படம் 20 சதவீதம் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.’

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #Petta #Viswasam #Rajinikanth #AjithKumar

    பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. #Petta #Viswasam
    ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகின்றன. இரண்டு படங்களுமே நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று முன்தினமும், நேற்றும் விறுவிறுப்பாக நடந்தன.

    நிறைய தியேட்டர்களில் 3 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையிலும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களையும் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

    இந்த படங்களுடன் போட்டியிடாமல் ஏற்கனவே சில படங்கள் ரிலீசை தள்ளிவைத்துவிட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி அதிக காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து உள்ளது. 



    இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைசெயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘வழக்கமாக தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

    பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இரண்டு படங்களுக்கும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு 2 படங்களும் லாபம் ஈட்டி தரும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார். #Petta #Viswasam

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க இந்திய சினிமாவில் முக்கிய நடிகையும், தேசிய விருது வென்றவருமான வித்யாபாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thala59 #AjithKumar
    `விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இந்த படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி பிரியதர்‌ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    மேலும் தேசிய விருது வென்ற நடிகை வித்யா பாலனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் பதிப்புக்கு ஏற்ப எச்.வினோத் திரைக்கதையை மாற்றி அமைத்திருப்பதால், வித்யா பாலனுக்கு முக்கிய வேடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. #Thala59 #AjithKumar #HVinoth #VidyaBalan #Nazriya #ShraddhaSrinath #YuvanShankarRaja

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. #Thala59 #AjithKumar
    விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின்னர் ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர் அந்த மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் நடிக்கும் பிங்க் இந்தி படத்தின் ரீமேக் படத்தில் நடிக்க அவரிடம் பேசியுள்ளனர்.

    இதில் 3 கதாநாயகிகள். ஒரு வேடத்தில் நஸ்ரியா, மற்றொரு வேடத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது. 3-வது கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேசியுள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் 3 கதாநாயகிகள் இருந்தாலும் அஜித்துக்கு யாரும் ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    எச்.வினோத் இயக்கும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Thala59 #AjithKumar #Nazriya #KalyaniPriyadharsan #ShraddhaSrinath

    ஒரே நேரத்தில் விஜய், அஜித் என இருவருடனும் நடித்துவிட்ட யோகி பாபு, தனக்கு இருவருமே ஒன்று தான், பிரித்துப் பார்க்க முடியவில்லை என்று கூறினார். #YogiBabu #AjithKumar #Vijay
    தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகிவிட்டார் யோகி பாபு. ஒரே நேரத்தில் விஜய், அஜித் இருவருடனும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

    அது பற்றி கூறும்போது “இவங்க ரெண்டுபேருமே எனக்கு ஒன்றுதான். பிரித்துப்பார்க்கப் பிடிக்கலை. இரண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.



    விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்த்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனசார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்த்து ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே... பேசட்டுமா?’ன்னு தயங்கிக் கேட்டேன்.

    அதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க... இது உங்க வேலை. பேசுங்க’ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்கு தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு”என்று கூறியுள்ளார். #YogiBabu #AjithKumar #Vijay #Viswasam

    ×