என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jhanvi Kapoor"

    தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரி திரைப்படம் நேற்று வெளியானது.

    மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரி திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். காதல், நட்பு, உறவு, குடும்பம், இசை என குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து விஷயமும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடிப்பு, திரைக்கதை, காமெடி காட்சிகள், ஒளிப்பதிவு முக்கியமாக இசை என ரசிகர்கள் அனைத்தையும் ரசித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. முதல் நாள் வசூலாக பரம் சுந்தரி திரைப்படம் இந்தியாவில்  மட்டும் 7.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சையரா படத்தை தொடர்ந்து பாலிவுட்டிற்கு பரம் சுந்தரி திரைப்படமும் வெற்றி திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    • ரொமான்ஸ் படமான பரம் சுந்தரி திரைப்படம் இன்று வெளியானது.
    • இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரி திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். காதல், நட்பு, உறவு, குடும்பம், இசை என குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து விஷயமும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடிப்பு, திரைக்கதை, காமெடி காட்சிகள், ஒளிப்பதிவு முக்கியமாக இசை என ரசிகர்கள் அனைத்தையும் ரசித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    சையரா படத்தை தொடர்ந்து பாலிவுட்டிற்கு பரம் சுந்தரி திரைப்படமும் வெற்றி திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    • தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர்.
    • ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜான்வி கபூர். இவரது நடிப்பு மற்றும் தோற்றம் அனைவராலும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இப்படத்தை இயக்குகிறார்.

    ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ஜான்வி கபூர் இப்படத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. தேவரா படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற ஜான்வி தற்பொழுது அவரது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். ஏனெனில் தெலுங்கு சினிமா மார்கெட்டில் ஜான்வியின் புகழ் அதிகரித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பெரிய நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார்.

    கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

    படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
    • திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.

    மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரிக்கும் ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்குகிறார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் இடம் பெற்றுள்ளார். இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    • சமீபத்தில் அனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட புகைப்படம் வைரலானது.
    • ஜான்வி கபூர் அடுத்ததாக உலாஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஜான்வி கபூர் முதன்மையாக இருக்கிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிடுவார்.

    இவர் சமீபத்தில் அனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. தற்பொழுது வந்த செய்தியின் அடிப்படையில் ஜான்வி கபூர் மருத்துவமனையில் ஃபுட் பாய்சனிங் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது தந்தையன் போனி கபூர் சொன்ன தகவலில் அடிப்படையில் இப்பொழுது ஜான்வி நலமாக உள்ளார் எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் பூர்ண குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

    ஜான்வி கபூர் அடுத்ததாக உலாஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து ஜூனியர் எண்டிஆர் உடன் இணைந்து தேவரா- பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகயுள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் 3 வது பாடலான டாவுடி பாடல் செப்டம்பர் 4 ஆம் தேதி  வெளியாகப்போவதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் 3 வது பாடலான தாவூதி வீடியோ பாடல் இன்று வெளியாகியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    துள்ளல் இசையுடன் ஜூனியர் என்.டி.ஆரும் ஜான்வி கபூரும் இணைந்து சிறப்பான நடனத்தை இப்பாடலுக்கு கொடுத்துள்ளனர். இப்பாடல் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

    படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    படத்தின் ரிலீஸ் டிரைலர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் மிகப் பெரிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரிலீஸ் டிரைலர் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா
    • மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

    ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா. படத்தின் கதாநாயகியாக ஜான்விகபூர் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமான படம் தேவரா.

    மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வெளிவந்துள்ள இந்த படம் சர்வதேச அளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

    தென்னிந்திய திரை உலகில் தான் நடித்த முதல் படமே பெரும் வரவேற்பை பெற்றதையொட்டி ஜானவிகபூர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

    இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தாவணி மற்றும் விதவிதமான தோற்றங்களில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.

    இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

    ஜான்வி கபூர் தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு அவருடைய சுற்றுப் பயணத்தின் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குஷி சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குறிப்பிட்டுள்ளார். 

    ஜான்வி கபூர்

    ஆனால், ஜான்வி 'லுங்கி டான்ஸ்' என்று மட்டும் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
    நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில், இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார். #KhushiKapoor
    நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் படம் திரைக்கு வரும் முன்பே துபாயில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி அவர் இறந்து போனார்.

    தடக் படத்தில் ஜான்வி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

    இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக தயாராகி வருகிறார்.



    இதுகுறித்து ஜான்வி கபூர் கூறியதாவது:-

    “குஷி நடிக்க வருவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார். குஷியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் எனது தந்தை போனிகபூரும் ஆர்வமாக இருக்கிறார். பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று குஷி ஆர்வமாக இருக்கிறார்.

    சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளான அலியாபட், சித்தார்த் மல்கோத்ரா, வருன் தவான் உள்ளிட்ட பலரை கரண் ஜோகர் தான் அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் சினிமாவுக்கு வந்த எல்லோருமே பெரிய இடத்துக்கு போய் இருக்கிறார்கள்.எனவே தான் குஷியும் கரண்ஜோகர் படத்தில் நடிக்க காத்திருக்கிறார்.”

    இவ்வாறு ஜான்வி கூறினார். #KhushiKapoor #JhanviKapoor

    போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் நிலையில், கீர்த்தியும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். #KeerthySuresh #JhanviKapoor
    தமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மறைந்த புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் வெளியான படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்தும் பாராட்டு பெற்றார்.

    அடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். 

    இந்த நிலையில் கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர். அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KeerthySuresh #JhanviKapoor

    ×