மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்வி கபூர்

சமீபத்தில் அனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட புகைப்படம் வைரலானது.ஜான்வி கபூர் அடுத்ததாக உலாஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்வி கபூர்
Published on

இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஜான்வி கபூர் முதன்மையாக இருக்கிறார். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிடுவார்.

இவர் சமீபத்தில் அனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. தற்பொழுது வந்த செய்தியின் அடிப்படையில் ஜான்வி கபூர் மருத்துவமனையில் ஃபுட் பாய்சனிங் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தந்தையன் போனி கபூர் சொன்ன தகவலில் அடிப்படையில் இப்பொழுது ஜான்வி நலமாக உள்ளார் எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் பூர்ண குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர் அடுத்ததாக உலாஜ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத்தொடர்ந்து ஜூனியர் எண்டிஆர் உடன் இணைந்து தேவரா- பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com