பயம்னா என்னன்னு தெரியணும்னா... தேவரா கதை கேட்கனும் - ரிலீஸ் டிரைலர் வெளியீடு

இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
பயம்னா என்னன்னு தெரியணும்னா... தேவரா கதை கேட்கனும் - ரிலீஸ் டிரைலர் வெளியீடு
Published on

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் மற்றும் சுத்தமல்லி சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தேவரா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் டிரைலர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் மிகப் பெரிய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரிலீஸ் டிரைலர் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com