search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க"

    • அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    சிவகாசி

    அ.தி.மு.க. வீர வரலாற் றின் பொன்விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற் பது குறித்து சிவகாசி சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசியதா–வது:-

    மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் பேச்சை கேட்க நாம் அனைவரும் அணி திரண்டு செல்ல வேண்டும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அ.தி.மு.க. மாநாடு தமிழ்நாட் டிற்கு திருப்பு முனையாக அமையும். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

    நம்முடைய இயக்கத்தினு–டைய வளர்ச்சியை பார்த்து இன்றைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அண்ணா திராவிட முன் னேற்ற கழகம் கட்டுக்கோப்பான ஒரு இயக்கம். ராணுவ கட்டுப்பாடோடு இயங்கும் ஒரு இயக்கம். எடப்பாடியார் தலைமையிலே 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களை உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக இந்த இயக்கம் இன் றைக்கு வளந்திருக்கிறது. டெல்லியில் இருக்கின்ற அரசியல் தலைவர்களே வியக்கின்ற அளவில் நம்முடைய இயக் கத்தை எடப்பாடியார் மூன்றாவது அத்தியாயத் திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

    வரும் காலம் நமது காலம் என்பதை நிரூபிக்கின்ற வகையில், இந்த மாநாடு சிறக்க இருக்கின்றது. நாம் அத்தனை பேரும் வந்திருக் கின்ற ஒன்றிய, நகர, செயலாளர்கள் கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் பகுதி செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் அழைத்துச் செல் கின்ற கழக நிர்வாகிகளை பொதுமக்களை அந்தந்த வண்டிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமித்து பத்திரமாக பாதுகாப்பாக அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

    மாநாட்டிற்கு காலை யிலே 10 மணிக்கு கிளம்பிட வேண்டும். 10 மணிக்கு கிளம்பினால்தான் அங்கு சிரமமின்றி செல்லலாம். கட்சி பொறுப்பாளர்களை, கட்சித் தொண்டர்களை, கிராமத்து இளைஞர்களை, பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பாதுகாப்பாக திரும்பி அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு எந்த விதமான பிரச்சினைகளும் உருவாகக்கூடாது என்பதை பற்றி தான் அடிக் கடி மாவட்டச் செயலாளர் கூட்டங்களிலே நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் சொல்லி வருகிறார்.

    அவருடைய அந்த வாக்கை வேத வாக்காக நினைத்து நாம் அனைவரும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். விருது–நகர் மாவட்டத்தில் இருந்து பிரச்சினை இல்லாமல் வந்தார்கள், மாநாட்டில் கலந்து கொண்டார்கள், பொதுச்செயலாளர் எடப் பாடியார் பேச்சை கேட்டார்கள், ஊர்களுக்கு அமைதி–யாக திரும்பி சென்றார்கள் என்ற நிலைதான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர் மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரம–ணியன், மாவட்ட எம்.ஜி.–ஆர். மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலா–ளர் முத்துப்பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை–ஞரணி செயலாளர் பிலிப் வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய ஆனந்த்,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாநகர பகுதி கழக செயலா ளர் கிருஷ்ண–மூர்த்தி, சரவ ணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் (எ) ராஜ அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கி யம், லட்சுமி நாராணயணன், கருப்பசாமி, வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட மீணவ ரணி செயலாளர் ரெங்கபா ளையம் காசிராஜன், மாநகர கவுன்சிலர் கரைமுருகன்,

    கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா, பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் விஸ்வ நத்தம் மணிகண்டன், ஒன்றிய இணை செயலாளர் இளநீர் செல்வம், பள்ள பட்டி ரமேஷ், வழக்கறிஞர் மாரீஸ்குமார், தலைமைக் கழக பேச்சாளர் சின்னத் தம்பி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன்,

    ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிக்குமார், முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் காமாட்சி, திருத் தங்கல் முன்னாள் நகர செயலாளர் முருகேசன், தொகுதி கணேசன், ஒன்றிய இளைஞரணி சங்கர், மாந கர இளைஞரணி கார்த்திக், மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மாயாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

    • தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    உடுமலை :

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளர் மகேந்திரன் தலைமையில் உடுமலை சட்டமன்ற தொகுதி கண்ணமநாயக்கனூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி., வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. உருவாகி 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது .குறிப்பாக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களால்ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் பயன்பெற்றுள்ளனர். 17 லட்சம் உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் மூலம் ஒன்றரை கோடி அதிமுக., தொண்டர்களுடன் கட்சி வீர நடை போட்டது. பின்னர் அம்மாவின் ஆசி பெற்ற தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    திமுக. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல நல்ல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். தற்சமயம் திமுக. அரசு இரண்டு ஆண்டு சாதனை என பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக. ஆட்சி காலத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். மொத்தத்தில் எதுவும் தெரியாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்தியது. அதிமுக. ஆட்சிக் காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ,ஆனைமலை நல்லாறு திட்டம் போன்ற முக்கியமான திட்டங்களை நிறைவேற்றியது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் மருத்துவரின் கனவு நிறைவேறாமல் இருந்த நிலையில் இட ஒதுக்கீடு அறிவித்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் தற்போது மருத்துவராகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் பல்வேறு தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது .

    சட்ட மன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக. ஆட்சி அமைக்கப்படுவது உறுதி. பல்வேறு கட்ட சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடியார் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக.வில் இணைய பலரும் முன் வந்து உள்ளனர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேலாக உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதால் உறுப்பினர் சேர்க்கைையை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சார்பில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
    • அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

    திருவாரூர்:

    தமிழக அரசுஅண்மையில் உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த அல்லல் பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் கூறி திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில், திருவாரூர் அருகே உள்ள புலிவலத்தில் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    அப்போது திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் மீறி விட்டதாகவும், ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும், மாறாக அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

    மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு பால் விலை உயர்வு போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது வைத்துள்ள திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்

    திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரான காமராஜ் சிறப்புரையாற்றினார் இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் செந்தில் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

    இதுபோல் நன்னிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் முன்னாள் அமைச்சர் இரா காமராஜர் எம்எல்ஏ கலந்து கொண்டார் இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அரங்க.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஜெகநாதன், விஸ்வநாதன், தாழை.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், விலைஉயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    • திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
    • ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவேகானந்தா சேவாலய சிறுவர்களை 11 பேரை திருமுருகன்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான லதா சேகர் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான ஆடைகள், பெட்சீட் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

    இதில் அ.தி.மு.க. திருமுருகன்பூண்டி நகர செயலாளர் பழனிச்சாமி, நகர துணைச் செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திகேயன், அவைத் தலைவர் மாரிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவர் கோபால், அம்மா பேரவை ராஜேந்திரன், கவுன்சிலர்கள் நடராஜ், தனலட்சுமி, காயத்ரி, தங்கவேல், பானுப்பிரியா, தங்கம், ரேவதி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    மடத்துக்குளம்:

    அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தின் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கொண்டாடும் விதமாக குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக சிவசக்தி காலனியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பாசறை துணைச்செயலாளர் காரத்தொழுவு சுரேஷ்,செல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஸ்வநாதன், ஐ.டி.விங் மாவட்ட தலைவர் சுப்பரமணியம், ஐ.டி.விங் ஒன்றிய செயலாளர் ஜாஹீர் உசேன் ,பெரியகோட்டை ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் இளம்பிறை எம்.சாதிக், நாகராஜ், கே.எஸ்.கே.செந்தில், ரத்தினசாமி, மணிகண்டன், மயிலாத்தாள் , பாரதி,பாபு, புஷ்பா, வரதராஜ், துரைசாமி, வைரவேல், மற்றும் கிளை கழக பொறுப்பாளர்கள் தங்கராஜ், நடராஜ் , மகாலட்சுமி , சென்டிரிங் சுப்பிரமணி , ராமசாமி , வேல்முருகன், காளிமுத்து , சிவசாமி, ஐ.டி. விங் நிர்வாகி எஸ்.ஷாஜகான் , கே.வினோத்குமார், எஸ்.ஈஸ்வரன்மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவிப்பு
    • அனைத்து கட்சியினரும் மாலை அணிவிப்பு

    நாகர்கோவில் :

    மார்ஷல் நேசமணியின் பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வேப்ப மூட்டில் உள்ள மணிமண்ட பத்தில் அவரது சிலைக்கு கலெக்டர் அரவிந்த் தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திள்ளை செல்வம், மீனவர் அணி முன்னாள் அமைப்பாளர் பசலியான், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், மார்ஷல் நேசமணியின் பேரன் ரெஞ்சித் அப்பலோஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை யில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன், துணை செயலாளர் வேல்தாஸ், மற்றும் ஜெயசீலன், அக்‌ஷயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமையில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில நிர்வாகிகள் குரூஸ் திவாகர், நட்சத்திர வெற்றி, எட்வின் செல்வராஜ், கணேசன், அவைத்தலைவர் புளியடி பால்ராஜ், பொருளாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், செண்பக வள்ளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ராஜபாண்டி, குமரன், பால்அகியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், விருப்ப மனுக்கள் நாளை முதல் பெறப்படும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
    அ.தி.முக. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள், வருகின்ற 26.11.2021 முதல் 28.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி , விண்ணப்பப் படிவங்களைப் பெற்று  பூர்த்தி செய்து வழங்கலாம். 

    இதில், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் மட்டும், தங்களுக்கான  விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் மூலம் தலைமைக் கழகத்தில் பெற்று, பூர்த்தி  செய்து வழங்க வேண்டும். 

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.     

    சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.  அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளனர்.

    மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு ரூ. 5,000
    நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு ரூ. 2,500
    பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ. 1,500
    மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே உள்ள மர்ம கூட்டணி அம்பலமாகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தன் சம்பந்தியின் ‘பார்ட்னர்’ வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக்கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றிவிடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, வருமான வரித்துறை சோதனையில் மிரண்டு, நடுங்கி பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, ஆதரவு தெரிவித்துள்ள முதல்-அமைச்சரும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை டெல்லி துரைத்தனத்திடம் மொத்தமாக அடகு வைத்திருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.

    தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது” என்று இதுவரை வாய்கிழியப் பேசி வந்த அ.தி.மு.க பா.ஜ.க.வினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்ததன் மூலம் “பா.ஜ.க. - அ.தி.மு.க.” இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டது.

    திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சருடைய சம்பந்தியின் பார்ட்னரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பா.ஜ.க.விற்கு நிறைவேறிவிட்டது. ஆகவே, அ.தி.மு.க. எம்.பி.க்களை வளைத்துப்போடுவதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எடுத்த “பிரத்யேக முயற்சி” தான் இந்த வருமான வரித்துறை சோதனையே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    இதுவரை தமிழ்நாட்டு நலன்களை வஞ்சிப்பதில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்துச் செய்த துரோகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருப்பதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசையும் மறைந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதால், தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்; ஊழல் அ.தி.மு.க.வுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் தி.மு.க. அனுமதிக்காது; எப்போது தேர்தல் வந்தாலும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
    ×